Home
Gadgets

மிரள விடும் அமேசான்.. ரூ.15,999 போதும்.. 16GB ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 40-இன்ச் டிவி..

அமேசான் தளத்தில் தற்போது சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏசர் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிக்கும் அமேசான் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இப்போது அமேசான் தளத்தில் ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Acer Advanced I Series Full HD LED Smart Google TV)மாடலுக்கு 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை 15,999 விலையில் வாங்க முடியும்.

மிரள விடும் அமேசான்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 40-இன்ச் டிவி..

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஏசர் ஸ்மார்ட் டிவியை மிகவும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும். இப்போது ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்: 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிவி. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதி, எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 16.7 மில்லியன் கலர்ஸ் (16.7 Million Colours), சூப்பர் பிரைட்னஸ் உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். மேலும் 64-பிட் குவாட் கோர்ட் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு குறிப்பாக கேமிங் ஆப்ஸ் மற்றும் ஓடிடி ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி டிவி ஆனது 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1.5ஜிபி ரேம் உடன் வெளிவந்துள்ளது. எனவே நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை இந்த டிவியில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். மேலும் மேலும் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, குரோகாஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட அனைத்து சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல்.

அதேபோல் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி தரமான ஆடியோ அம்சத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல்.

மிரள விடும் அமேசான்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 40-இன்ச் டிவி..

கூகுள் டிவி இயங்குதளம் மூலம் இந்த டிவி இயங்குகிறது. பின்பு நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ஸ்மார்ட் ரிமோட் ஆதரவும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கம்மி விலையில் 40-இன்ச் டிவியை வாங்க விரும்பும் பயனர்கள் இந்த டிவியை வாங்குவது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
47 Percent Discount on Acer Advanced I Series Smart TV in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X