அடிதூள்: ரூ.18,999 போதும்.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் தளத்தில் இயர் எண்ட் சேல் (Year End Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் டிசம்பர் 16-ம் தேதி வரை மட்டுமே இருக்கும். குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும்.
குறிப்பாக ஏசர் நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி 2023 மாடல் ஆனது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 42 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.18,999 விலையில் வாங்க முடியும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசர் டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். எனவே மலிவு விலையில் இந்த ஏசர் 43-இன்ச் டிவியை வாங்கிவிட முடியும். இப்போது ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி 2023 மாடலின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி 2023 (Acer Advanced I Series Full HD Smart LED Google TV 2023) மாடல் ஆனது 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குவாட் கோர்ட் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் கொடுக்கும். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 16.7 மில்லியன் கலர்ஸ் 16.7 Million Colours), சூப்பர் பிரைட்னஸ் உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.
கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த டிவியில் 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1.5ஜிபி ரேம் உள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, குரோகாஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட அனைத்து சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
அதேபோல் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி.

குறிப்பாக நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.
ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலில் மேம்பட்ட அனைத்து சிறப்பு அம்சங்களும் இருப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த ஏசர் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








