வாட்ஸ்அப் மூலம் ஆர்டர்களை பெற்று வரும் ஸ்விக்கி நிறுவனம்.!

உணவு பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று சப்ளை செய்து வரும் ஸ்விக்கி நிறுவனம் தற்போது சோதனை முயற்சியாக வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

By GizBot Bureau
|

உணவு பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று சப்ளை செய்து வரும் ஸ்விக்கி நிறுவனம் தற்போது சோதனை முயற்சியாக வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில் ஆர்டர் பெறப்படுவதால் இந்த நிறுவனத்தின் ஆர்டர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், நிறுவனத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, அதிக வாடிக்கையாளர்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் மூலம் ஆர்டர்களை பெற்று வரும் ஸ்விக்கி நிறுவனம்.!

இதுகுறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: வாடிக்கையாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகளில் ஸ்விக்கி நிறுவனத்தின் வாட்ஸ் அப் தோன்றி ஆர்டர்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் மூலம் சரியான ஆர்டர்களை சரியான நேரத்தில் நிறுவனம் சேவை செய்ய முடியும்.

மேலும் வாட்ஸ் மூலம் ஆர்டர் செய்தவர்களுக்கு அவ்வப்போது அவர்களுடைய ஆர்டரின் விபரங்களை வாட்ஸ் மூலம் அளிக்கவுள்ளதாகவும், ஆர்டர் செய்த பொருட்கள் மற்றும் பேமெண்ட் விபரங்களையும் வாடிக்கையாளர்கள் அதில் பார்த்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. ஆனாலும் இந்த முறையை மார்க்கெட்டிங் செய்யும் மேலும் ஒரு வசதியாகவோ, அல்லது இதுவரை எஸ்.எம்.எஸ் மூலம் பெற்று வந்த ஆர்டருக்கு பதில் இந்த வாட்ஸ் அப் முறையா? என்பது குறித்த அறிவிப்பு இல்லை. மேலும் அவசியமற்ற செய்திகளைக் கொண்டு தொடுத்திருப்பதைப் பற்றி கவலைப்படுபவர்கள், சேட்டில் சென்று அதில் உள்ள ஸ்டாப் என்ற பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் இதிலிருந்து விலகியும் கொள்ளலாம்.

இவ்வாறு வாட்ஸ் அப்பில் இருந்து விலகிய வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் தங்களுடைய உணவுத் தேவையை எஸ்.எம்.எஸ். மூலம் பெற்று கொள்ளலாம். இந்த வசதி இதுவரை வாட்ஸ் அப் செயலியை தங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யாதவர்களுக்கும் உதவும் வகையில் இருக்கும். மேலும் வாட்ஸ் அப் மூலம் உணர்வு ஆர்டர் பெறுவது என்பது ஒருசில வாடிக்கையாளர்களிடம் மட்டும் சோதனை முயற்சியாகவே கடைபிடிக்கப்படுவதாகவும், அனைவருக்கும் இந்த வசதி இன்னும் ஒருசில வாரங்களில் கிடைக்கும் என்றும் ஸ்விக்கி அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் மூலம் ஆர்டர்களை பெற்று வரும் ஸ்விக்கி நிறுவனம்.!

ஸ்விக்கி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா!
ஸ்விக்கி நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டு வாடிக்கையாளர்களின் உணவுத் தேவையை திருப்தி செய்து வருகிறது. மேலும் மற்ற நிறுவனங்களான ஜொமைட்டோ, ஃபுட்பாண்டா, உபேர் ஈட்ஸ் உள்பட ஒருசில நிறுவனங்களின் ஆர்டர்களையும் பெற்று கொள்ளும். மேலும் ஸ்விக்கி நிறுவனம் இந்தியாவில் உள்ள சுமார் 35000 பிரபலமான ரெஸ்டாரெண்ட்களில் பார்ட்னர்ஷிப் செய்துள்ளதால் உங்களுக்கு பிடித்த உணவகத்தின் உணவு பொருட்களை பெற்று கொள்ளலாம். அதேபோல் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்ல், புனே உள்பட 14 நகரங்களில் தனது சேவையை செய்து வருகிறது.
Best Mobiles in India

English summary
Swiggy will soon begin using WhatsApp for order updates instead of SMS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X