ஐபிஎல் 2022: முதலில் இதை வாங்குகங்க- எலான் மஸ்க்கிடம் சுப்மேன் கில் விடுத்த வேண்டுகோள்: கடுப்பான நிறுவனம்!

|

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவது உறுதி செய்யப்பட்டு சில நாட்களே ஆனது. இதையடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்கும் வகையில் டுவிட் ஒன்றை செய்திருந்தார். இதை மஸ்க் இரண்டு டுவிட்களாக வெளிப்படுத்தினார். முதல் டுவிட்டில் கோகோ கோலாவை வாங்கும் ஆசையை நகைச்சுவையாக வெளிப்படுத்தினார்.

எலான் மஸ்க்கை குறிப்பிட்டு பல்வேறு டுவிட்

தொடர்ந்து அடுத்த டுவிட்டில் "அடுத்து நான் கோகோ கோலாவை வாங்குகிறேன்" என்று மஸ்க் டுவிட் செய்திருந்தார். இந்த டுவிட் பெருமளவு வைரலானது, பலரும் மீம்ஸ்களையும் கருத்துகளையும் வெளியிட்டு வருகின்றனர். தொடர்ந்து எலான் மஸ்க்கை குறிப்பிட்டு, பல்வேறு பிராண்டுகளை வாங்கி தங்கள் பிரச்சனைகளை தீர்க்கும்படி பலரும் டுவிட் செய்து வருகின்றனர்.

ஸ்விகியை வாங்கும்படி கோரிக்கை

இதற்கிடையில், இந்தியா கிரிக்கெட் வீரரும், தற்போது ஐபிஎல் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் சார்பில் ஓபனராக கலக்கி வரும் சுப்மன் கில் தனது டுவிட்டரில் மஸ்க்கை குறிப்பிட்டு டுவிட் ஒன்று செய்திருந்தார். அதில், எலான் மஸ்க் தயவு செய்து ஸ்விகியை வாங்குங்கள், அப்போதுதான் அவர்கள் சரியான நேரத்தில் டெலிவரி செய்வார்கள் என பதிவிட்டுள்ளார். சுப்மன் கில் இந்த பதிவு பெருமளவு வைரலானது, இதில் ஒருவர் நீங்கள் ஐபிஎல்-ல் விளையாடும் வேகத்தைவிட ஸ்விக்கியின் டெலிவரி வேகம் எவ்வளவோ பரவாயில்லை என டுவிட் செய்திருக்கிறார்.

சுப்மன் கில் டுவிட்டுக்கு ஸ்விகி சொன் பதில்

ஸ்விகி சுப்மன் கில்கின் டுவிட்டுக்கு உடனே பதிலளித்தது. சுப்மன் கில்லுக்கு ஸ்விகி எழுதிய பதிலில், "ஹாய் ஷூப்மன் கில் உங்கள் ஆர்டர் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். உங்கள் விவரங்களுடன் எங்களை டிஎம்-ல் சந்திக்கவும், எந்த கையகப்படுத்தலும் தேவையில்லை அதைவிட நாங்களே செய்வோம் என பதிவிடப்பட்டுள்ளது.

பிரபலங்களில் பிரதானமான ஒருவர் எலான் மஸ்க்

பிரபலங்களில் பிரதானமான ஒருவர் எலான் மஸ்க்

டுவிட்டரின் மிகப் பெரிய பிரபலங்களில் பிரதானமான ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், உலகப் பணக்காரர்கள் பட்டியல் பிரதான ஒருவர் என்ற பல புகழ் இவருக்கு இருந்தாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்கப்படும் ஆக்கப்பூர்வமான கேள்விக்கான பதில்கள் மற்றும் உரையாடல்களை அடிப்படை தரப்பினரிடமும், இளைஞர்களிடமும் மேற்கொள்வார்.

டுவிட்டரின் பெரும் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்

டுவிட்டரின் பெரும் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்

டுவிட்டரின் பெரும் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், அதை தன் வசமாக்க பெரும் முயற்சியை மேற்கொண்டார். டுவிட்டருக்கு டிமான்ட் வைத்து அதை வாங்கத் தயார் என மஸ்க் கூறினார். அதன்படி மஸ்க்கிற்கு டுவிட்ரை விற்க இயக்குனர் குழு ஒப்புக் கொண்டிருக்கிறது. எலான் மஸ்க் டுவிட்டரை 144 பில்லியன் டாலருக்கு விற்க டுவிட்டர் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதன்பின் டுவிட்டரின் உரிமையாளராக தனது டுவீட்டை மஸ்க் பதிவிட்டுள்ளார். அதில், எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என நம்புகிறேன் ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம் என மஸ்க் டுவிட் செய்துள்ளார்.

மஸ்க் குறிப்பிட்ட பேச்சு சுதந்திரம்

மஸ்க் குறிப்பிட்ட பேச்சு சுதந்திரம்

மேலும் பேச்சு சுதந்திரம் குறித்து டுவிட்டரை வாங்க முயற்சிக்கும் போதே மஸ்க் பேச்சு சுதந்திரம் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதேபோல் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமான விஷயங்கள் டுவிட்டரில் விவாதம் செய்யப்படுகின்றன, புதிய அம்சங்களுடன் டுவிட்டர் மேம்படுத்தப்படும், இதன்மூலம் டுவிட்டர் எப்போதும் இல்லாததைவிட மிகவும் சிறந்ததாக இருக்கும், டுவிட்டரில் வைரஸ் தாக்குதல் நிறுத்தப்பட்டு சிறந்ததாக்க விரும்புகிறேன் என டுவிட் செய்திருந்தார்.

ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு முன்பே கணித்த மஸ்க்

ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு முன்பே கணித்த மஸ்க்

அதேபோல் ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு முன்பு எலான் மஸ்க், ஐ லவ் டுவிட்டர் என பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க் இந்த பதிவுக்கு டேவ் ஸ்மித் என்பவர் ரிப்ளை செய்திருந்தார். அதில் பிடித்திருந்தால் வாங்க வேண்டியது தானே என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மஸ்க், விலை என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த டுவிட் தற்போது பெருமளவு வைரலாகி வருவதோடு அதிக லைக்களையும், ரீடுவிட்களையும் பெற்றிருக்கிறது. காரணம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே விலை என்ன என்று கேட்ட மஸ்க் தற்போது அதை நிரூபனம் செய்து அதை வாங்கியும் இருக்கிறார்.

Best Mobiles in India

English summary
IPL 2022: Shubman Gill Request to Elon Musk to Buy Swiggy- Here's the Reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X