ஸ்விகி 2021: 6 ஆண்டாக டாப்- இதுமட்டும் நிமிடத்துக்கு 115 என மொத்தம் 60 மில்லியன் ஆர்டர்-நம்ம ஃபேவரட்தான்!

|

ஸ்விகி 2021-ல் இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு விவரங்களை முழுமையாக பார்க்கலாம். ஸ்விகி தனது ஆறாவது StatEATstics அறிக்கையை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்த அதே உணவு ஆறு வருடங்கள் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. அந்த உணவு வேறு ஒன்றுமில்லை பெரும்பாலானோருக்கு பிடித்த உணவான பிரியாணி தான். உணவு விநியோக செயலியில் சிக்கன் பிரியாணிக்கான ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமிடத்திற்கு 115 பிரியாணிகள்

நிமிடத்திற்கு 115 பிரியாணிகள்

2020 ஆம் ஆண்டில் ஒரு நிமிடத்திற்கு 90 பிரியாணிகள் என்று இருந்த நிலையில் 2021-ல் இந்தியர்கள் நிமிடத்திற்கு 115 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. பிரியாணிகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வெஜிடபிள் பிரியாணியானது சிக்கன் பிரியாணியை விட 43 மடங்கு குறைவாக ஆர்டர் செய்யப்பட்டது. கொல்கத்தா, சென்னை, ஐதராபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது.

அறிமுக ஆர்டர்களில் மிகவும் பிரபல உணவு

அறிமுக ஆர்டர்களில் மிகவும் பிரபல உணவு

அதேபோல் ஸ்விகியின் அறிக்கை குறித்த விவரங்களை பார்க்கையில், சிக்கன் பிரியாணி ஸ்விகியின் தற்போதைய ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு மட்டுமில்லாமல், அறிமுக ஆர்டர்களில் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. அதாவது ஸ்விகியில் புதிய பயனர்களாக இணைந்தவர்களில் 4.25 லட்சம் பேர் முதல் ஆர்டராக பிரியாணியையே பதிவு செய்துள்ளனர். இதையடுத்து மிகவும் பொதுவான முதல் உணவாக பிரியாணி மாறியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிக்கன் பிரியாணிக்கு என 60 மில்லியன் ஆர்டர்கள்

ஸ்விகி டுவிட்டர் இந்த தகவலை பகிர்ந்துள்ளது. இந்த ஆண்டு சிக்கன் பிரியாணிக்கு என 60 மில்லியன் ஆர்டர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் புள்ளி விவரங்கள் படி, 2021 இல் 6,04,44,000 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டன. இரண்டாவது புள்ளி விவரங்களின் படி 6,04,44,000 டெலிவரி அறிவிப்பை உடனடியாக பெற்ற உடன் புன்னகத்தினர்.

முன்னுரிமை பட்டியலில் சிக்கன் பிரியாணி

முன்னுரிமை பட்டியலில் சிக்கன் பிரியாணி

மும்பையில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் முதலிடம் பிடித்த உணவு சற்று வேறு மாதிரியாக இருந்துள்ளது. மும்பையில் தால் கிச்சடி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த உணவு சிக்கன் பிரியாணியை விட இரண்டு மடங்கு அதிகமாக விற்பனையாகியுள்ளது. அதேபோல் ஜெயப்பூரில் டால் ஃபிரையை மிகவும் விரும்பி ஆர்டர் செய்துள்ளனர். டெல்லி தால் மக்கானியை தேர்ந்தெடுத்துள்ளது. பெங்களூருவில் மசாலா தோசை அதிகப் பேரால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக சென்னையை பொறுத்தவரையில், முன்னுரிமை பட்டியலில் சிக்கன் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

ஆரோக்கியமான உணவை நோக்கியே கவனம்

ஆரோக்கியமான உணவை நோக்கியே கவனம்

இருப்பினும் வெளியான அறிக்கையின்படி, 2021-ல் இந்தியர்கள் ஆரோக்கியமான உணவை நோக்கியே கவனம் செலுத்தியுள்ளனர். ஸ்விகியில் ஆரோக்கியமான உணவுக்கான தேடல் இந்த ஆண்டு இரட்டிப்பாகி உள்ளது. ஸ்விகி செயலியின் ஹெல்த் ஹப்பில் உள்ள ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட பிரிவில் ஆர்டர்கள் 200% அதிகரித்துள்ளது. கீட்டோ உணவு ஆர்டர்கள் 23% அதிகரித்துள்ளது. சைவ உணவு மற்றும் தாவர அடிப்படையிலான உணவு ஆர்டர்கள் 83% உயர்ந்துள்ளன. அதேபோல் பெங்களூரு., சுகாதாரம் குறித்த அதிக அக்கறை கொண்ட நகரமாக தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறது. பெங்களூருவை தொடர்ந்து ஐதராபாத் மற்றும் மும்பை பட்டியலில் இருக்கிறது.

பிரபலமான இனிப்பு உணவுகளில் குளோப் ஜாமூன்

பிரபலமான இனிப்பு உணவுகளில் குளோப் ஜாமூன்

ஸ்நாக்ஸ் பிரிவில் மிகவும் பிரபலமான உணவாக ருசியான சட்னியுடன் பரிமாறப்படும் சூடான சமோசா இருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் ஸ்விகியின் மிகவும் பிரபலமான சிற்றுண்டியாக சமோசா மாறி இருக்கிறது. இந்தாண்டு இந்த உணவு 5 மில்லியன் முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிகம் விரும்பப்பட்ட சிற்றுண்டிகளில் பாவ் பஜ்ஜி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதேபோல் இரவு 10 மணிக்கு மேல் ஆர்டர் செய்யப்படும உணவு முறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன இந்தாண்டு முறைகள் குறித்து பார்க்கையில் சீஸ்-பூண்டு ரொட்டி, பாப்கார்ன் மற்றும் பிரஞ்சு பிரைஸ் போன்ற உணவுகள் இந்தியர்கள் பிடித்தமான உணவாக மாறி இருக்கிறது. அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட இனிப்பு உணவுகள் குறித்து பார்க்கையில், அது நினைப்பது போல் ஐஸ்கிரேம் அல்லது கேக் வகைகளாக இல்லை. இனிப்பு உணவுகளில் வரவேற்பு பெற்றதாக இருப்பது குளோப் ஜாமூன் தான்.

Best Mobiles in India

English summary
Swiggy 2021: Indians Ordered 115 Biryanis per Minute- Here the Most Favourite Dish List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X