என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!

|

சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில் கடும் மழையில் ஸ்விகி டெலிவரி பேக் உடன் நபர் ஒருவர் குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்தார். தற்போது ஸ்விகி நிறுவனம் அந்த நபரை கண்டறிந்து அதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இது மும்பையில் நடந்த நிகழ்வு, அந்த நபருக்கு வயது 17 ஆகும். மேலும் அவர் குதிரை அலங்காரம் செய்யக்கூடியவர். எனவும் அவர் ஸ்விகி ஊழியரே இல்லை எனவும் நிறுவனம் கண்டறிந்துள்ளது. எதற்கு அந்த நபர் ஸ்விகி பேக் உடன் குதிரையில் சென்றார் என்ற கேள்விக்கான பதிலையை பார்க்கலாம்.

கனமழையில் ஸ்விகி டெலிவரி?

கனமழையில் ஸ்விகி டெலிவரி?

சமீபத்தில் வைரலான வீடியோவில் மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் கனமழையில் ஸ்விகி டெலிவரி பேக் உடன் குதிரையில் வேகமாக பயணித்தார். கனமழை காரணமாக இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்ய முடியவில்லை எனவும் இருப்பினும் உணவு ஆர்டர் செய்த பயனர் பட்டினியுடன் இருப்பார் என்பதால் ஊழியர் ஒருவர் குதிரையில் செல்கிறார் எனவும் சமூகவலைதளத்தில் தகவல் வெளியானது.

உணவுப் பொருட்களை வழங்க தனித்துவமான வழி

உணவுப் பொருட்களை வழங்க தனித்துவமான வழி

மேலும் ஸ்விகி உணவுப் பொருட்களை வழங்க தனித்துவமான வழியை கண்டுபிடித்துள்ளது எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்தனர். இந்த நிலையில் இந்த நபர் யார், எதற்கு இப்படி சென்றார் என்ற விவரத்தை ஸ்விகி ஆராய்ந்து கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது. இது குறித்த தகவலை ஸ்விகி அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

குதிரையில் வேகமாக பயணித்தவர் யார்?

குதிரையில் வேகமாக பயணித்தவர் யார்?

ஸ்விகி டெலிவரி பேக் உடன் பயணம் செய்தவர் ஸ்கிவி டெலிவரி எக்ஸிகியூட்டிவ் அல்ல, 17 வயதுடைய அவர் குதிரை அலங்காரம் செய்பவர். என ஸ்விகி தெரிவித்துள்ளது. எதற்கு அவர் இப்படி குதிரையில் வேகமாக பயணித்தார்?

வலை வீசி தேடிய ஸ்விகி

வீடியோ வைரலானதை தொடர்ந்து Swiggy இந்த நபரை வலை வீசி தேடி வந்தது. காரணம் இந்த வீடியோ மூலம் ஸ்விகி-க்கு பல பாராட்டுகள் கிடைத்ததோடு, பெரும் விளம்பரமும் கிடைத்தது. இதையடுத்து ஸ்விகி தனது ட்விட்டர் பக்கத்தில் "எங்கள் மோனோகிராம் செய்யப்பட்ட டெலிவரி பையை அணிந்து கொண்டு வெள்ளைக் குதிரையில் அறியப்படாத நபர் ஒருவர் பயணிக்கிறார். இது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அந்த நபரை அடையாளம் காண உதவி செய்பவருக்கு ரூ.5000 வெகுமதி அளிக்கப்படும்" என குறிப்பிட்டது.

வீடியோவில் இடம்பெற்ற நபர் யார்?

வீடியோவை படம் பிடித்த மர்ம நபர் மூலமாக ஸ்விகிக்கு வீடியோவில் இடம்பெற்ற நபர் மற்றும் காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஸ்விகி இந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. குதிரையில் பயணித்த நபருக்கு 17 வயது எனவும் அவர் இன்னொருவரிடம் ஸ்விகி பேக்கை கடனாக வாங்கி அதை பிற தேவைக்கு பயன்படுத்தி வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் ஸ்விகி ஊழியரே இல்லை

இதுகுறித்த தகவலில், ஸ்விகி பேக் உடன் குதிரையில் பயணித்த நபரின் பெயர் சுஷாந்த். 17 வயதான இவர் மும்பையில் வசித்து வருகிறார். இவர் திருமண அழைப்பு உள்ளிட்ட சுப நிகழ்வில் பங்கேற்கும் குதிரைகளை பராமரித்து வரும் பணியை செய்து வருகிறார். இவர் தனது நண்பர்களிடம் ஏதாவது ஒரு பொருளை கடன் வாங்குவதை பழக்கமாக வைத்திருப்பவராம், அதை திரும்பிக் கொடுக்கவும் மறுப்பு தெரிவிப்பாராம். அதன்படி தான் ஸ்விகி பையை வாங்கி இருக்கிறார்.

ஸ்விகி பையில் என்ன இருந்தது?

ஸ்விகி பையில் என்ன இருந்தது?

வீடியோவில் வெள்ளை குதிரையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த போது அவர் மாட்டியிருந்த ஸ்விகி பையில் திருமண ஊர்வலங்களுக்கு குதிரையை அலங்காரம் செய்யும் பொருட்கள் இருந்துள்ளது. அவர் பயணித்த அந்த குதிரையின் பெயர் சிவா. அவர் பணிபுரியும் லாயத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.5000 வெகுமதி அளித்த ஸ்விகி

ரூ.5000 வெகுமதி அளித்த ஸ்விகி

அதேபோல் இந்த வீடியோ எடுக்கும் போது அவர்கள் திருமணத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த வீடியோவை எடுத்தவர் மூலம் ஸ்விகிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை பதிவு செய்தவர் அவி என்ற இளைஞன். அவி தற்போது Swiggyயிடம் இருந்து ரூ.5000 சன்மானத்தை பெற்றுள்ளார்.

Best Mobiles in India

English summary
Swiggy Finally Finds a man in Viral Video, it is not who you think?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X