Zomato, Swiggy-யின் "ஆட்டத்தை" முடிக்க.. உணவகங்கள் எடுத்த அதிரடி முடிவு!

|

"நீங்க நல்லவரா... கெட்டவரா?" என்கிற கேள்விக்கும், "ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது சரியா தவறா? என்கிற கேள்விக்கும் ஒரே பதில் தான் - தெரியலயேப்பா!

ஏனென்றால், சுத்தமாக சமைக்க தெரியாதவர்களும் இங்கே உள்ளனர்; நேரம் கிடைக்காமல் சமைக்க முடியாதவர்களும் இங்கே உள்ளனர்.

எனவே, Swiggy மற்றும் Zomato வழியாக உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது சரியா தவறா என்கிற கேள்விக்கு சரியான விடை - கிடைக்கவே கிடைக்காது.

ஆனாலும்.. ஆட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கு!

ஆனாலும்.. ஆட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கு!

சிலர் Zomato மற்றும் Swiggy-ஐ நம்பித்தான் மூன்று வேளைகளையும் கடக்கிறார்கள் என்றாலும் கூட, மறுகையில் உள்ள சிலர், ஸ்விக்கி மற்றும் சோமோடோவின் உணவு விலை நிர்ணயம் மற்றும் டெலிவரி கட்டணம் போன்றவைகளை கடுமையாக விமர்சனம் செய்த வண்ணம் உள்ளனர்.

"எப்படி பார்த்தாலும் ரூ.60 க்கு மேல் வராத ஒரு தோசைக்கு ரூ.130 பில்-ஆ?" என்கிற கேள்விக்கு பதில் என்ன தெரியுமா? - மக்களின் இயலாமையும், சோம்பேறித்தனமும் தான்!

பூமர் அங்கிள்களுக்கு வேட்டு.. WhatsApp-இல் புது கிடுக்கிப்பிடி!பூமர் அங்கிள்களுக்கு வேட்டு.. WhatsApp-இல் புது கிடுக்கிப்பிடி!

Offer-னு சொல்லி சொல்லியே

Offer-னு சொல்லி சொல்லியே "வண்டி ஓட்டும்" Zomato மற்றும் Swiggy!

என்னதான் ஸ்விக்கி மற்றும் சோமோடோவை கழுவிக்கழுவி ஊற்றினாலும், அடுத்த நாள் அதில் தான் ஆர்டர் போடுவோம்; சாப்பிடுவோம்.

ஏனெனில் நம்மில் பலரும் மேற்குறிப்பிட்ட ஆப்களில் அணுக கிடைக்கும் Offer-களை பெரிதும் நம்புகிறோம். அந்த நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் வேலை ஒன்றை தான் உணவகங்கள் ஒன்றுகூடி அரங்கேற்றி உள்ளனர்.

அப்படி என்ன செய்து உள்ளன?

அப்படி என்ன செய்து உள்ளன?

Swiggy மற்றும் Zomato போன்ற உணவு விநியோக சேவைகளுடன் ஒப்பிடுகையில், Domino's Pizza உள்ளிட்ட "பெரிய உணவகங்கள்" தங்கள் சொந்த ஆப்களின் வழியாக கூடுதல் தள்ளுபடிகளை வழங்க தொடங்கி உள்ளன.

அதாவது சொந்த ஆப்களை கொண்ட உணவகங்கள் தத்தம் வாடிக்கையாளர்களுக்கு, 15 - 20 சதவிகிதம் வரையிலான தள்ளுபடிகள் மற்றும் விளம்பர சலுகைகளை வழங்கி, Swiggy மற்றும் Zomato போன்ற ஆப்களை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளன.

போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!

Swiggy & Zomato-வை

Swiggy & Zomato-வை "சார்ந்து இருப்பதை" குறைக்கவே இந்த திட்டம்!

எக்கனாமிக் டைம்ஸ் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, "கமிஷன்கள் மற்றும் சேர்ச் ஆப்டிமைசேஷன் (Search Optimisation) கட்டணங்களை ஈடுகட்டவும், "அவற்றை" சார்ந்திருப்பதை குறைக்கவும் தான்" இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டுக்கு டோமினோஸ் பீட்சா ஆனது, வார இறுதி டெலிவரி, டேக் அவே மற்றும் டைன்-இன் விருப்பங்கள் முழுவதும் அதன் சொந்த ஆப்பில் பல வகையான "ஃப்ரீ ரிவர்ட்களை" வழங்குகிறது.

எந்தெந்த உணவகங்கள்

எந்தெந்த உணவகங்கள் "இந்த வழியை" பின்பற்ற தொடங்கி உள்ளன?

டோமினோஸ் பீட்சாவுடன் சேர்த்து McDonald's, Social, Punjab Grill, deGustibus Hospitality, Street Foods of India, Wow!Momo மற்றும் Pizza Hut போன்ற நிறுவனங்களும் தங்கள் சொந்த ஆப்களில் பெரும் தள்ளுபடிகளை வழங்குகின்றன.

ஆடி மாசத்தை அதகளப்படுத்த வரும் 6 புது போன்கள்; Samsung டூ OnePlus வரை!ஆடி மாசத்தை அதகளப்படுத்த வரும் 6 புது போன்கள்; Samsung டூ OnePlus வரை!

ஒவ்வொரு ஆர்டருக்கும் 15 - 30 சதவீதம் கமிஷன் வசூலித்தால் இப்படி தான் ஆகும்!

ஒவ்வொரு ஆர்டருக்கும் 15 - 30 சதவீதம் கமிஷன் வசூலித்தால் இப்படி தான் ஆகும்!

பிரபல டெலிவரி பார்ட்னர்களான Zomato மற்றும் Swiggy ஒவ்வொரு ஆர்டருக்கும் 15 - 30 சதவீதம் கமிஷன் வசூலிக்கின்றன.

இது ThriveNow மற்றும் கூகுளின் ஆதரவை பெறும் DotPe போன்ற தளங்களால் வசூலிக்கப்படும் 3 - 5 சதவீத கமிஷனுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகமாகும்.

இதன் விளைவாக உணவகங்களுக்கு அதிக செலவாகிறது. அந்த கடுப்பில் தான் சொந்த ஆப்களில் ஆபர்களை அள்ளிக்கொடுக்க ஆரம்பித்து உள்ளன போலும்!

இது வேலைக்கு ஆகுமா?

இது வேலைக்கு ஆகுமா?

பெரிய உணவகங்கள் தங்கள் சொந்த ஆப்களை நோக்கி அதிகம் சாயும் போது, பெரிய அளவிலான தள்ளுபடிகள் மற்றும் விளம்பர சலுகைகளை வழங்கும் போது, நுகர்வோர்களை ஈர்க்க முடியும் என்று நம்புகின்றன.

எடுத்துக்காட்டிற்கு. ஸ்விக்கி வழியாகவே ஆர்டர் செய்பவராக இருந்தாலும் கூட இரண்டு உணவுகளில் எது அதிக சலுகையின் கீழ் வாங்க கிடைக்கிறது? எது மலிவாக இருக்கிறது என்று பார்த்து தான் வாங்குகிறார்கள்.

அதே கோட்பாட்டின் கீழ், ஒரு குறிப்பிட்ட உணவு, ஸ்விக்கி அல்லது சோமோடோ ஆப்பில் கிடைப்பதை விட மலிவான விலைக்கு உணவகங்களின் சொந்த ஆப்பில் கிடைத்தால், வாடிக்கையாளர்கள் அதைத்தானே தேர்வு செய்வார்கள்.

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

நம்ம செலவுல.. அவன் பணக்கரானா ஆகுறான்!

நம்ம செலவுல.. அவன் பணக்கரானா ஆகுறான்!

இண்டிகோ ஹாஸ்பிடாலிட்டியின் தலைமை நிர்வாகி ஆன அனுராக் கத்ரியார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, "உணவகங்கள் தங்கள் 'டிஜிட்டல் லேண்ட்ஸ்கேப்'பின் மீதான சில கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவது மிகவும் முக்கியம். ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைப்பாளர்களை சார்ந்து இருக்க கூடாது. இப்படி செய்வதால் உணவகங்களுக்கு பெரும் டெலிவரி செலவுகள் மிச்சமாவது மட்டுமல்லாமல், அதிக அளவிலான 'கஸ்டமர் டேட்டா'விற்கான அணுகலும் கிடைக்கும். தள்ளுபடிகள் வழியாகவே ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள் செழித்துள்ளனர், இது கிட்டத்தட்ட உணவகங்களின் நிதியால் சாத்தியமாகி உள்ளது.

Photo Courtesy: Swiggy, Zomato

Best Mobiles in India

English summary
New Problem For Swiggy Zomato Restaurants Start Working Against Food Delivery Apps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X