இந்த 2022-ல் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு இது தான்.. கடைசி இடத்தில் தந்தூரி சிக்கன்!

|

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி (Swiggy), ஒவ்வொரு ஆண்டும் தனது பிளாட்ஃபார்மில் எந்தெந்த உணவு வகைகள் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிடுவது வழக்கம். அப்படியாக இந்த 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஸ்விக்கி வெளியிட்டுள்ள அந்த பட்டியலின்படி, இந்த 2022 ஆம் ஆண்டு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் என்கிற பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது பிரியாணி (Briyani) ஆகும். இந்த பட்டியலில், பிரியாணி முதல் இடத்தை பிடிப்பது இதுவொன்றும் முதல் முறை அல்ல, ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு என்கிற தரவரிசையில் தொடர்ந்து ஏழாவது முறையாக இது முதலிடத்தை பிடித்து வருகிறது!

Swiggy வழியாக இந்த 2022-ல் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு இது தான்!

ஸ்விக்கி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஒரு வினாடிக்கு 2.28 ஆர்டர்களை பெற்று, பிரியாணி ஒரு புதிய சாதனையையும் படைத்துள்ளது. மேலும் இந்த 2022 ஆம் ஆண்டில், ஒவ்வொரு நிமிடமும் 137 பிரியாணிகளை டெலிவரி செய்துள்ளதாகவும் ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது. ஸ்விக்கியின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்: சிக்கன் பிரியாணி, மசாலா தோசை, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் ஃபிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆகும்.

சுவாரசியமாக இந்த 2022 ஆம் ஆண்டு, இந்தியர்கள் சில புதிய உணவு வகைகளை முயற்சி செய்யும் மனநிலையிலும் இருந்துள்ளனர். ஏனென்றால் அவர்கள் இந்திய உணவுகளை தவிர இத்தாலியன் பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமன் மற்றும் சுஷி போன்ற உணவுகளையும் ஆர்டர் செய்ததாகவும் ஸ்விக்கி வெளிப்படுத்தி உள்ளது. ரவியோலி (இத்தாலியன்) மற்றும் பிபிம்பாப் (கொரியன்) போன்ற வெளிநாட்டு உணவுகளையும் கூட இந்தியர்கள் முயற்சி செய்து பார்த்து உள்ளனர்.

இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட டாப் 10 ஸ்நாக்ஸ் என்கிற பட்டியலில் சமோசா உள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தின் கூற்றுப்படி, சமோசா - இந்த 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 4 மில்லியன் ஆர்டர்களை சந்தித்துள்ளது. இப்படியாக ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட முதல் 10 சிற்றுண்டிகள் ஆனது சமோசா, பாப்கார்ன், பாவ் பாஜி, பிரஞ்சு ப்ரைஸ், கார்லிக் பிரட்ஸ்டிக்ஸ், ஹாட் விங்ஸ், டகோ, கிளாசிக் ஸ்டஃப்டு கார்லிக் பிரெட் மற்றும் மிங்கிள்ஸ் பக்கெட் ஆகும்.

அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை பொறுத்தவரை குலாப் ஜாமூன் 2.7 மில்லியன் ஆர்டர்களை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து ரஸ்மலை 1.6 மில்லியன் ஆர்டர்களை சந்தித்துள்ளது. மூன்றாவது இடத்தில சாக்கோ லாவா கேக் உள்ளது; அது 1 மில்லியன் ஆர்டர்களை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ரஸ்குல்லா, சாக்கோசிப்ஸ் ஐஸ்கிரீம், அல்போன்சோ மேங்கோ ஐஸ்கிரீம், காஜு கட்லி, டெண்டர் கோக்கனெட் ஐஸ்கிரீம், டெத் பை சாக்லேட் மற்றும் ஹாட் சாக்லேட் ஃபட்ஜ் போன்ற இனிப்பு வகைகளும் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன.

கிளவுட் கிச்சன்களால் விற்கப்படும் டாப் 5 உணவு வகைகளையும் கூட ஸ்விக்கி பட்டியலிட்டுள்ளது. அதன்படி வட இந்திய (North Indian ) உணவுகள் முதல் இடத்திலும், சீன / பான் ஆசிய (Chinese / Pan Asian) உணவுகள் இரண்டாவது இடத்திலும், பிரியாணி (Briyani) வகைகள் மூன்றாவது இடத்திலும், இனிப்பு வகைகள் / ஐஸ்கிரீம்கள் (Desserts / Ice cream) நான்காவது இடத்திலும், பர்கர்கள் / அமெரிக்கன், தென்னிந்திய (Burgers/ American / South Indian) உணவுகள் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

ஸ்விக்கி ஃபுட் மார்க்கெட்பிளேஸ் (Swiggy Food Marketplace) வழியாக வெளியான இந்த அறிக்கை, தங்கள் நிறுவனம் இந்தியாவின் "நீளம் மற்றும் அகலம்" முழுவதுமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துள்ளதாகவும், ஸ்ரீநகர், போர்ட் பிளேர், மூணார், ஐஸ்வால், ஜல்னா, பில்வாரா மற்றும் பல நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் "முதல் ஆர்டர்களை" வழங்கி உள்ளதாகவும் குறிப்பிடுகிறது. அதுமட்டுமின்றி ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) சேவையை பயன்படுத்தும் நகரங்களின் பட்டியலில் சில புதிய நகரங்களும் சேர்ந்துள்ளதாகவும் ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது!

Best Mobiles in India

English summary
Swiggy Revealed The Full List of Most Ordered Foods In The Year 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X