Swiggy சமஸ்தானமே ஆடிப்போச்சு! ஒரே ஒரு நபர் ரூ.16 லட்சத்துக்கு மளிகை பொருள், ரூ.70,000க்கு பர்கர் ஆர்டர்..

|

2022 ஆம் ஆண்டில் அதன் செயலியில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த பட்டியலை Swiggy பகிர்ந்திருக்கிது. 2022 இல் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த பொருளாக பிரியாணி தான் இருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. காரணம், இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலில் பிரியாணி கடந்த ஏழு ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறது.

Swiggy சமஸ்தானமே ஆடிப்போச்சு! ரூ.16 லட்சத்துக்கு மளிகை பொள் ஆர்டர்.!

தனிப்பட்ட நபர் குறித்த தகவலையும் ஸ்விகி வெளியிட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது. தளத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட நபர் இவர் தான் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

உணவின் மீதுள்ள அன்பை விட மேலான அன்பு வேறெதுவும் இல்லை என்பதை ஸ்விக்கி அறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர் தீபாவளியின் போது ரூ.75,378க்கு உணவு ஆர்டர் செய்திருக்கிறார். மறுபுறம் புனேவை சேர்ந்த நபர் ஒருவர் ரூ.71,229க்கு பர்கர்கள் மற்றும் பொரியல்களை ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் எட்டா உயரத்தில், ரூ.16 லட்சத்துக்கு மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்து பெங்களூருவை சேர்ந்த நபர் தான் முதலிடத்தில் இருக்கிறார்.

அதேபோல் ஸ்விக்கி விரைவாக டெலிவரி செய்த ஆர்டர் குறித்த விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது. ஆர்டர் செய்த நபரின் வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள கடையில் நபர் ஒருவர் பொருளை ஆர்டர் செய்திருக்கிறார். அந்த பொருள் 1:03 நிமிடங்களில் விரைவாக டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. Swiggy Instamart இல் ஏராளமானோர் நூடுல்ஸ் பாக்கெட் மற்றும் பால் ஆர்டர் செய்து விரைவாக டெலிவரியை பெற்றிருக்கின்றனர் என நிறுவனம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் முழுமையான பட்டியலை ஸ்விக்கி பகிர்ந்துள்ளது. இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவாக சிக்கன் பிரியாணி இருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக பிரியாணி தான் முதலிடத்தில் இருக்கிறது.

Swiggy சமஸ்தானமே ஆடிப்போச்சு! ரூ.16 லட்சத்துக்கு மளிகை பொள் ஆர்டர்.!

பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது மசாலா தோசை, சிக்கன் ப்ரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவுகள் இருக்கிறது.

வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு இந்திய பயனர்கள் கொரிய மற்றும் இத்தாலிய உணவுகளை அதிக அளவில் ஆர்டர் செய்ததாக ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது. இந்த பட்டியலில் இத்தாலியன் பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமன், சுஷி, ரவியோலி (இத்தாலியன்) மற்றும் பிபிம்பாப் (கொரியா) ஆகிய உணவுகள் இடம்பெற்றிருக்கிறது.

ஸ்விக்கி மட்டும் அல்ல கூகுள் நிறுவனமும் 2022 இல் அதிகம் பிரபலமடைந்த விஷயங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி கூகுளில் 2022 இல் அதிகம் தேடிய டாப் 100 ஆசிய பிரபலங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

Swiggy சமஸ்தானமே ஆடிப்போச்சு! ரூ.16 லட்சத்துக்கு மளிகை பொள் ஆர்டர்.!

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்களை பொறுத்தவரை இந்தியா மற்றும் தென்கொரியாவை சேர்ந்தவர்கள் தான் இதில் அதிக இடம் பிடித்திருக்கின்றனர். கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்களில் முதலிடத்தை பிடித்திருப்பவர் பிரபல பாடகரான பிடிஎஸ் எனப்படும் TAEHYUNG "வி" ஆவார். இந்த இசைக்குழுவை சேர்ந்தவர் தான் இரண்டாம் இடததை பிடித்திருக்கிறார். அவர் ஜங்கூக் (JUNGKOOK) ஆவார். இந்த இரண்டு பேர் தான் முதல் இரண்டு இடத்தை பிடித்திருக்கின்றனர்.

அதேபோல் இந்த பட்டியலில், நடிகர் விஜய் 15வது இடத்தை பிடித்திருக்கிறார். அதேவேளையில் நடிகர் அஜித்குமார் 78வது இடத்தை பிடித்திருக்கிறார். அதேபோல் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் இந்த பட்டியலில் 46வது இடத்தையும், ரஜினிகாந்த் 68வது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Swiggy 2022: Single User Ordered Groceries Worth Rs.16 lakh and Burgers Order for Rs.70,000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X