தட்டி தூக்குறோம்: கொரோனாவை விரட்ட போட்டி போட்டு திட்டம் தீட்டும் சொமாட்டோ, ஸ்விக்கி!

|

சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது டெலிவரி தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலை குறித்து தங்களது பயன்பாட்டின் மூலம் பயனர்களுக்கு தெரிவிக்க தொடங்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. டெல்லியில் ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை தற்போது குறைவாகவே உள்ளது. அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலமாக கொரோனா தொற்று மூன்றாம் அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கூட்டம் கூட்டமாக பொதுவெளியில் மக்கள்

கூட்டம் கூட்டமாக பொதுவெளியில் மக்கள்

தமிழகத்தை பொறுத்தவரை 24 மணிநேரத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கிற்கு முன்பான நாளில் அனைத்து கடைகள், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் சென்னையில் இருந்து பிற நகரங்களில் இருந்தும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது, இதனால் மக்கள் கூட்டமாக கூட்டமாக பொதுவெளியில் தென்பட்டனர்.

தளர்வுகள் இல்லா ஊரடங்கு

தளர்வுகள் இல்லா ஊரடங்கு

தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள்., தங்களது பணிக்கால அனுபவம், அறிவு, திறமை என அனைத்தையும் பயன்படுத்தி கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலக் கட்டத்தில் மக்கள் தேவையான காய்கறிகள், பழ வகைகள், பால் போன்ற அத்தியாவசிய தேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரிய தொற்று பாதிப்பு

அரிய தொற்று பாதிப்பு

மேலும் மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) எனும் அரிய தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உயிர் பிழைக்கும் சிலருக்கு ஒரு கண் அகற்றப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் மிகவும் அரிதாக உண்டாகும் இந்த தொற்று பாதிப்பானது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஆயிரக் கணக்கானோருக்கு சமீப மாதங்களாக இந்தியாவில் உண்டாகி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த தொற்று வருவதாக கூறப்படுகிறது எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி

சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி

சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது டெலிவரி ஊழியர்களுக்கான தடுப்பூசி இயக்கத்தை தொடங்கியுள்ளனர். சொமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் கடந்த வாரம் தலைநகர் டெல்லியில் இந்த இயக்கத்தை அறிமுகம் செய்தார். பின் பெங்களூரு மற்றும் மும்பை பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஸ்விக்கி பெங்களூருவில் இந்த இயக்கத்தை தொடங்கி உள்ளது. இரண்டு நிறுவனங்களும் தங்களது டெலிவரி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு முன்னதாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி போடுவதற்கான இயக்கம்

தடுப்பூசி போடுவதற்கான இயக்கம்

மேலும் சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய இரண்டு நிறுவனங்களை போலவே அமெசான், பிளிப்கார்ட், உபெர் போன்ற நிறுவனங்களும் தங்களது டெலிவரி ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்த நிறுவனம் தரப்பில் வெளியான டுவிட்டின்படி1,50,000-க்கு மேற்பட்ட முன்னணி ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான இயக்கத்தை சொமாட்டோ உருவாக்கி இருக்கிறது. அதேபோல் அடுத்த சில வாரங்களில் சுகாதார வழங்குனரான மேக்ஸ் ஹெல்த்கேர் உடன் இணைந்து பெங்களூர் மற்றும் மும்பை பகுதிகளில் தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிவரி ஊழியர்களின் தடுப்பூசி விவரம்

டெலிவரி ஊழியர்களின் தடுப்பூசி விவரம்

சொமாட்டோ போன்றே ஸ்விக்கி நிறுவனமும் அடுத்த சில வாரங்களில் தங்களது டெலிவரி கூட்டாளர்கள் மற்றும் முன்னணி ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தடுப்பூசிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய டெலிமெடிசின் மூலமாக 24x7 என்ற அடிப்படையில் மருத்துவர்களுக்கான இலவச அணுகலை ஸ்விக்கி வழங்குகிறது. அதேபோல் சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது டெலிவரி தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலை குறித்து தங்களது பயன்பாட்டின் மூலம் பயனர்களுக்கு தெரிவிக்க தொடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Zomato, Swiggy Notifying to Customers about Delivery Workers Covid-19 Vaccination Status

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X