Home
News

ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த பெண்; என்ஜினீயரிங் படித்த Swiggy பாய்.. டெலிவரி கொடுக்க போன இடத்தில் அடித்த அதிர்ஷ்டம்!

உங்களில் பலருக்கும் லின்க்டுஇன் (LinkedIn) பற்றிய பெரிய அளவிலான அறிமுகம் தேவைப்படாது. அறியதோர்களுக்கு லின்க்டுஇன் என்பது வணிகம் மற்றும் வேலைவாய்ப்பை மையமாக கொண்ட ஒரு சமூக ஊடக தளமாகும். பல ஆண்டுகளாக, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரபலமான தளமாகவும் இது உருவெடுத்துள்ளது.

அப்படியான லின்க்டுஇன் வழியாக, ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த ஒரு பெண்ணின் மூலம், அதை டெலிவரி கொடுக்க சென்ற ஸ்விக்கி (Swiggy) டெலிவரி பாய் ஒருவருக்கு பெரிய அதிர்ஷடம் ஒன்று அடித்துள்ளது. அதென்ன அதிர்ஷ்டம்? யார் அந்த பெண்? யார் அந்த டெலிவரி பெர்சன்? என்ன நடந்தது? இதோ விவரங்கள்:

டெலிவரி கொடுக்க போன இடத்தில்.. Swiggy பாய்க்கு அடித்த அதிர்ஷ்டம்!

நம் எல்லோரையும் பல வகையில் பாதித்த கோவிட்-19 தொற்றுநோய் காலமானது, சாஹில் சிங் ( Sahil Singh) என்பவரை சற்றே அதிகமாக பாதித்தது. சாஹில் சிங் என்ஜினீயரிங் படித்து நல்ல நிறுவனத்தில், நல்ல வேலையில் இருந்தவர் ஆவார். கோவிட்-19 தொற்றுநோய் காலமானது அவர் வேலையை பறித்தது மட்டுமின்றி அவரை ஸ்விக்கி டெலிவரி பெர்சனாகவும் மாற்றியது.

இதற்கிடையில் தான் ப்ரியான்ஷி சாண்டல் (Priyanshi Chandel) என்கிற லிங்க்டுஇன் பயனர் வழியாக, நேற்றுவரை ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர் ஆக இருந்த சாஹில் சிங்கிற்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது. இதெப்படி சாத்தியமானது? இவ்விருவருக்கும் இடையேயான சந்திப்பு எப்படி இருந்தது? என்கிற விவரத்தை ப்ரியான்ஷி சாண்டல் தனது லிங்க்டுஇன் அக்கவுண்ட் வழியாக பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், "வழக்கம் போல ஒரு இரவில் நான் ஸ்விக்கி வழியாக ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தேன். 30 - 40 நிமிடங்களுக்குப் பிறகு, எனது வீட்டின் டோர் பெல் ஒலித்தது, நான் கதவை திறந்த போது ஒரு இளைஞன் மூச்சுவாங்கிக்கொண்டே என் பிளாட்டுக்கு வெளியே இருந்த படிக்கட்டில் அமர்ந்து இருந்தார்.

அதை பார்த்ததும் அவரிடம் என்ன நடந்தது என்று கேட்க தொடங்கினேன். அவர் பேச ஆரம்பித்தார்: மேடம், என்னிடம் ஸ்கூட்டியோ அல்லது பயணிக்க போக்குவரத்து வசதியோ இல்லை, உங்கள் ஆர்டருக்காக நான் 3 கிமீ தூரம் நடந்தே வந்தேன். என்னிடம் முற்றிலுமாக பணம் இல்லை. ஏனென்றால், என்னுடன் தங்கும் நபர் எனது யூலு வாகனத்திற்காகே ஆனான் வைத்து இருந்த கடைசி பணத்தையும் எடுத்துக்கொண்டார்.

எனது வீட்டு உரிமையாளருக்கு கொடுக்கவும் கூட என்னிடம் பணம் இல்லை. நான் ஏமாற்றுவதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் நானொரு இசிஇ (ECE) என்ஜினீயரிங் பட்டதாரி. கோவிட் சமயத்தில் ஜம்முவிற்கு செல்வதற்கு முன்பு பைஜுஸ், நிஞ்சாகார்ட்டில் வேலை செய்தேன். இந்த ஆர்டர் டெலிவரிக்கு கூட எனக்கு 20 - 25 ரூபாய்தான் கிடைக்கும்.

12 மணிக்கு முன்பாக இன்னொரு டெலிவரி எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேறு எங்காவது தூரமாக டெலிவரிக்கு அனுப்புவார்கள், என்னிடம் பைக் இல்லை. ஒரு வாரமாக சாப்பிடவில்லை, வெறும் தண்ணீர் மற்றும் தேநீர் மட்டுமே குடிக்கிறேன். எனக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்து தாருங்கள். முன்னதாக நான் ரூ.25 ஆயிரம் சம்பாதித்தேன்.

எனக்கு 30 வயது ஆகிறது, என் பெற்றோருக்கு வயதாகிறது, நான் அவர்களிடம் தொடர்ந்து பணம் கேட்க முடியாது என்று அவர் பேசி முடித்தார். இந்த உரையாடலின் முடிவில் அவருக்கு என்னால் கொடுக்க முடிந்ததெல்லாம் - ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் ரூ.500 மட்டுமே. அவரது அடையாள சான்று புகைப்படங்களுடன் அவரது தொடர்பு விவரங்கள் கீழே உள்ளன" என்று ப்ரியான்ஷி சாண்டல் லிங்க்டுஇன் வழியாக பதிவிட்டு இருந்தார்.

ப்ரியான்ஷி வழியாக லிங்க்டுஇன் தளத்தில் பகிரப்பட்ட சாஹில் சிங்கின் மார்க் ஷீட் மற்றும் பி.டெக் பட்டம் போன்றவைகளை வைத்து, மற்ற லின்க்டுஇன் பயனர்களின் உதவியுடன் சாஹில் சிங்கிற்கு தற்போது ஒரு புதிய வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை ப்ரியான்ஷியும் அதே லின்க்டு வழியாக உறுதிப்படுத்தி உள்ளார். ஆங்கிலத்தில் கார்டியன் ஏஞ்சல் (Guardian angel) என்கிற ஒரு வார்த்தை உள்ளது. அதற்கு ப்ரியான்ஷி ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

Best Mobiles in India

English summary
Swiggy Food Delivery Boy Who Worked as Engineer Get New Job With The Help Of LinkedIn Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X