Swiggy வேற மாறி.. ஸ்மார்ட்வாட்ச் இருக்கு.. ஹெட்போன் இருக்கு.. ஸ்பீக்கர் இருக்கு.. 15 மினிட்ஸ் டெலிவரி இருக்கு!
டோர் டெலிவரியில் வெறும் 15 நிமிடங்களில் ஸ்மார்ட்வாட்ச், ஸ்பீக்கர்கள் முதல் இயர்போன், டிரிம்மர்கள் வரையிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஸ்விக்கி இன்ஸ்டமார்ட் (Swiggy Instamart) மூலம் வாங்கி கொள்ள முடியும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் முடியும். இதுகுறித்த விவரம் இதோ.
இன்றைய காலத்தில் நம்மில் பலரும் வீட்டைவிட்டு வெளியே செல்லாமலேயே மளிகைப் பொருள்கள் முதல் உணவு பொருட்கள் வரையில் ஆர்டர் செய்து வாங்கும் கலாச்சாரத்துக்கு பழகிவிட்டோம். இதனால், அதுதொடர்பான நிறுவனங்கள் எந்தெந்த பொருட்களை ஆன்லைன் விற்பனை செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் டெலிவரி செய்ய ஆர்வம் காட்டிவருகின்றன.

இதில் ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் ஆன்லைன் உணவு டெலிவரியை தொடங்கி மிகப்பெரும் வளர்ச்சியடைந்து, அதன்பின் மளிகை பொருள்களுக்காக மட்டுமே ஸ்விக்கி இன்ஸ்டமார்ட் என்னும் பெயரில் தனி பக்கத்தை நிறுவி வெற்றிகரமாக நடத்திவருகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நீங்கள் ஆர்டர் செய்யும் மளிகை பொருட்கள் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் வீடு தேடி வந்துவிடும்.
இதனால், ஸ்விக்கி இன்ஸ்டமார்ட்டுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய ஸ்விக்கி நிறுவனம், மளிகை பொருட்களைப் போலவே எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் டெலிவரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவந்தது. முன்னதாக, ஹெட்போன், டிரிம்மர், டேட்டா மற்றும் சார்ஜிங் கேபிள் போன்ற பொருட்களை மட்டுமே டெலிவரி செய்துவந்தது.
ஆனால், இப்போது ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ், ஸ்பீக்கர்கள், எல்இடி பல்ப்ஸ் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமல்லாமல், அயர்ன்பாக்ஸ், ரைஸ்குக்கர், டேபிள் ஃபேன், மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் வரையில் விற்பனை செய்ய தொடங்கிவிட்டது. அதிலும் போட் (Boat) போன்ற பிராண்ட் நிறுவனத்துடன் கைகோர்த்து, அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதால், நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த போட் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், ஸ்பீக்கர்கள் விற்பனை, இப்போது தொடங்கிவிட்டது. இந்த தயாரிப்புகளை ஸ்விக்கி இன்ஸ்டமார்ட்டில் ஆர்டர் செய்தால் வெறும் 15 நிமிடங்களில் அவற்றை பெற்றுகொள்ள முடியும். இந்த சேவையானது, 25 நகரங்களுக்கும் மேல் கிடைக்கிறது.
பெரும்பாலான நகரங்களில் சேவை தொடங்கப்பட்டுவருகிறது. முன்னதாக காலை 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இந்த தளத்தில் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வந்த, நிலையில் கடந்த ஆண்டு முதல் நள்ளிரவு 3 மணி முதல் சேவை வழங்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனம் அறிவித்தது. இந்த சேவை முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது.
ஸ்விக்கி இன்ஸ்டமார்ட்டில் எப்படி ஆர்டர் செய்வது எப்படி? முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்விக்கி ஆப்பை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அதன்பின் லாகின் செய்ய உங்களது மொபைல் நம்பரை கொடுங்கள். உங்களது நம்பருக்கு ஓடிபி வரும் அதை கொடுத்து ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.
இப்போது, கீழே ஃபுட் (Food), இன்ஸ்டாமார்ட் (Instamart), டைன்அவுட் (Dineout) மற்றும் கிரெட் கார்டு (Credit Card) போன்ற டேப்கள் தோன்றும். அதில், இன்ஸ்டாமார்ட் டேப்பை கிளிக் செய்யுங்கள். இப்போது, மளிகை பொருட்கள், பழங்கள், இறைச்சி உள்ளிட்டவை முதல் எலக்ட்ரானிக்ஸ் வரையில் பிரிக்கப்பட்டு தனித்தனி லோகோவாக (Loco) தோன்றும். அதை கிளிக் செய்து பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

இந்த சேவையானது, உங்களது முகவரிக்கு அருகில் இன்ஸ்டாமார்ட் ஹப் இருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடியதாகும். அதாவது, ஒரு நகரத்தின் பல்வேறு பகுதிகளில் 2 முதல் 4 இன்ஸ்டாமார்ட் ஹப்கள் இருக்கும். இதற்கு அருகில் 15 நிமிட இடைவெளியில் இருக்கும் பகுதிகளுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications








