அவ்வளவு பிரியமா?- ஒரு வினாடிக்கு ஒரு பிரியாணி: தூள் கிளிப்பிய ஆர்டர்- 2020 ஸ்விக்கி விற்பனை!

|

ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் முறை

ஆன்லைன் ஷாப்பிங் முறை

கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

ஸ்விக்கி, சொமாட்டோ சலுகைகள்

ஸ்விக்கி, சொமாட்டோ சலுகைகள்

குறிப்பாக ஆன்லைன் டெலிவரிகளில் முக்கியமான ஒன்று உணவு வகைகள். ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளோடு உணவுகளை டெலிவரி செய்து வருகின்றன. அதன்படி இந்தாண்டு கொரோனா பரவலால் உலக நாடுகள் பாதிப்படைந்து பூட்டுதல் அறிவிக்கப்பட்டாலும் பின் பாதுகாப்பு வழிமுறைகளோடு ஆன்லைன் டெலிவரியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

அதிகம் டெலிவரி செய்த உணவு

அதிகம் டெலிவரி செய்த உணவு

அதன்படி இந்தாண்டு இந்திய மக்கள் அதிகமாக டெலிவரி செய்த உணவு பிரியாணிதான் என ஸ்விக்கி அறிவித்துள்ளது. மேலும் அதில் வினாடிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிரியாணியை மக்கள் ஆர்டர் செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் விரும்பும் உணவு சிக்கன் பிரியாணி

அதிகம் விரும்பும் உணவு சிக்கன் பிரியாணி

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்படும் அதே சமயத்தில் ஆறு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய மக்கள் அதிகம் விரும்புவது சிக்கன் பிரியாணி என தெரியவந்துள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

ஆர்டர் செய்த பொருள் வீட்டுக்கு வந்தது: பார்சலுக்குள் இருந்த ஒருவரின் கொரோனா பரிசோதனை சாம்பிள்-உரைந்து போன பெண்ஆர்டர் செய்த பொருள் வீட்டுக்கு வந்தது: பார்சலுக்குள் இருந்த ஒருவரின் கொரோனா பரிசோதனை சாம்பிள்-உரைந்து போன பெண்

புதிதாக பிரியாணி ஆர்டர் செய்தவர்கள் எண்ணிக்கை

புதிதாக பிரியாணி ஆர்டர் செய்தவர்கள் எண்ணிக்கை

பிரியாணிக்கு அடுத்தடுத்த இடத்தில் மசால் தோசை, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் ஃபிரைட் ரைஸ் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ஸ்விக்கி ஆண்டுதோறும் ஸ்டேட்அட்ஸ்டிக்ஸ என்ற பெயரில் தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பிரியாணி ஆர்டர் செய்து ஸ்விக்கியின் புதிய வாடிக்கையாளர்களாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தே ஆர்டர்

வீட்டில் இருந்தே ஆர்டர்

ஜனவரி முதல் மார்ச் மாத கணக்கின்படி அலுவலக முகவரியோடு ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகமாக வீட்டு முகவரிக்கு ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் சூழல் அதிகரித்த ஏப்ரல் டூ மே மாதத்தில் 9 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
These are the Indians Most Ordered Food in 2020: Swiggy Report

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X