Zomato நாயகனே.. 2022 இல் 3330 முறை உணவு ஆர்டர் செய்த ஒரே நபர்! கம்பெனி கொடுத்த அதிசிய பொருள்.!

|

2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை Zomato வெளியிட்டுள்ளது. அதில் ஒரே ஒரு நபர் மட்டும் சொமாட்டோ செயலியில் 2022 இல் 3330 முறை உணவு ஆர்டர் செய்து சிறந்த வாடிக்கையாளர்களாக உருவெடுத்து இருக்கிறார். அதேபோல் Zomato ஆர்டர்களில் அதிக promo code பயன்படுத்திய நபராக மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் இருந்திருக்கிறார்.

Zomato 2022

Zomato 2022

Zomato 2022 ஆம் ஆண்டின் வருடாந்திர அறிக்கையை அதன் செயலியில் வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஆண்டின் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது. சொமாட்டோ செயலியில் ஒரே வருடத்தில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் பெயர் பட்டியலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கம்பெனி கொடுத்த பட்டம்

கம்பெனி கொடுத்த பட்டம்

டெல்லியை சேர்ந்த அங்கூர் என்ற நபர் 2022 ஆம் ஆண்டில் உணவு டெலிவரி செயலியான Zomatoவில் 3330 முறை ஆர்டர் செய்திருக்கிறார். அதாவது சராசரியாக ஒவ்வொரு நாளும் 9 முறை உணவு ஆர்டர் செய்திருக்கிறார். சொமாட்டோ நிறுவனம் அவரது பங்கை ஊக்குவிக்கும் விதமாக அதன் ஆண்டறிக்கையில் "தேசத்தின் மிகப்பெரிய உணவுப் பிரியர்" என அவருக்கு முடிசூட்டி கௌரவித்து இருக்கிறது.

Zomato Promo Code

Zomato Promo Code

அதேபோல் ப்ரொமோ கோட் பயன்முறை என்பது அனைவரும் அறிந்ததே. சொமாட்டோவில் ப்ரொமோ கோட் பயன்படுத்தி அதிகமுறை ஆர்டர் செய்த நபராக மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர் இருந்திருக்கிறார்.

ப்ரொமோ கோட் எங்கு சென்று தேடுவது என முழு விலைக்கு ஆர்டர் செய்பவர்கள் ஏராளம். ஆனால் மேற்கு வங்கத்தில் உள்ள ராய்க்ஞ்ச் நகரத்தை சேர்ந்த நபர் ஒருவர் 99.7% Zomato ஆர்டர்களில் Promo குறியீடு பயன்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி மும்பை சேர்ந்த சொமாட்டோ பயனர் ஒருவர் ஒரு வருடத்தில் மட்டும் உணவு ஆர்டர்களில்Promo Code மூலம் ரூ.2.43 லட்சத்தை சேமித்து இருக்கிறார்.

பிரியாணி மீது அதிகரிக்கும் காதல்

பிரியாணி மீது அதிகரிக்கும் காதல்

நாடு முழுவதும் சொமாட்டோ செயலியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் சொமாட்டோ ஆப்ஸ் மூலம் நிமிடத்திற்கு 186 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பிரியாணி மீதான காதல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. Swiggy 2022 ஆம் ஆண்டு அறிக்கையில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 137 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்தமாக 2022 இல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இரண்டாவது இடத்தில் இருக்கும் உணவு

இரண்டாவது இடத்தில் இருக்கும் உணவு

Zomatoவில் 2022 ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணியை தொடர்ந்து பீட்சா இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த ஆண்டு Zomato பயனர்கள் ஒவ்வொரு நிமிடமும் 139 பீட்சாக்களை ஆர்டர் செய்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.

ஸ்விக்கி 2022

ஸ்விக்கி 2022

ஸ்விக்கி வெளியிட்ட 2022 ஆண்டு அறிக்கை குறித்து பார்க்கையில், இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் முழுமையான பட்டியலை ஸ்விக்கி பகிர்ந்துள்ளது. இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவாக சிக்கன் பிரியாணி இருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக பிரியாணி தான் முதலிடத்தில் இருக்கிறது.

பிரியாணிக்கு அடுத்த இடம்

பிரியாணிக்கு அடுத்த இடம்

பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது மசாலா தோசை, சிக்கன் ப்ரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவுகள் இருக்கிறது.

இத்தாலிய உணவுகள்

இத்தாலிய உணவுகள்

வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு இந்திய பயனர்கள் கொரிய மற்றும் இத்தாலிய உணவுகளை அதிக அளவில் ஆர்டர் செய்ததாக ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது. இந்த பட்டியலில் இத்தாலியன் பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமன், சுஷி, ரவியோலி (இத்தாலியன்) மற்றும் பிபிம்பாப் (கொரியா) ஆகிய உணவுகள் இடம்பெற்றிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Zomato 2022: Man Ordered Food Delivery 3330 times on Zomato app and another used promo code on 99.7% orders

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X