இனவெறி டுவீட்..வீராங்கனை வாவ்லாவை நீக்கிய கிரீஸ் ஒலிம்பிக்ஸ் குழு

By Super
|

ட்விட்டரில் விளையாட்டாக செய்த ட்வீட்டினால் விளையாட்டு வீராங்கனை வாவ்லா பாப்பாக்ரிஸ்டவை, லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இருந்து நீக்குவதாக கிரீஸ் நாட்டின் ஒலிம்பிக்ஸ் குழு தெரிவித்துள்ளது.

ட்ரிப்பில் ஜம்பு பிரிவில் வெற்றி பெற கூடிய ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வாவ்லா பாப்பாக்ரிஸ்டவின் ட்வீட்டில் இனவெறி வெளிப்பட்டுள்ளதாக எழுந்துள்ள பரபரப்பான கருத்துக்களினால், இவரை கிரீஸ் ஒலிம்பிக்ஸ் குழு ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இருந்து நீக்குவதாக கூறியிருக்கிறது.

இனவெறி டுவீட்..வீராங்கனை வாவ்லாவை நீக்கிய கிரீஸ் ஒலிம்பிக்ஸ் குழு

அதாவது கிரீஸில் சமீபத்தில் நிறைய ஆப்ரிக்கர்கள் இடம்பெயர்ந்து குடியேறியுள்ளனர். இது குறித்து ஆப்ரிக்கர்கள் கிரீஸில் குடியேறியுள்ளதால் நைல் நதியில் உள்ள கொசுக்களுக்கு வீட்டு உணவு கிடைத்தது போல் என்பது சம்மந்தமாக, விளையாட்டு வீராங்கனை வாவ்லா பாப்பாக்ரிஸ்டவ் ட்வீட் செய்துள்ளார்.

சில விநாடிகளில் வெகுவாக பரவிய இந்த ட்வீட் பெரிய பரபரப்பையே ஏற்படுத்திவிட்டது. இவரது இந்த ட்வீட் இனவெறி தெரிக்கும் ஒன்றாக இருக்கிறது என்று பலரும் தங்களது கருத்துக்களை ட்விட்டி இருக்கின்றனர். இதை கடுமையாக கண்டிக்கும் பொருட்டு கிரீஸ் ஒலிம்பிக்ஸ் குழுவினர், வாவ்லா பாப்பாக்ரிஸ்டவை லண்டன்

ஒலிம்பிக்ஸில் இருந்து நீக்கவதாக கூறியுள்ளது.

இதனால் விளையாட்டாக ட்வீட் செய்தேன் என்று கூறியிருந்த விளையாட்டு வீராங்கனை, ட்விட்டர் மூலம் மன்னிப்பும் கோரியிருக்கிறார். ஆனால் கிரீஸ் ஒலிம்பிக்ஸ் குழு தனது கடுமையான கண்டிப்பினை தளர்த்தி கொண்டதாக தெரியவில்லை.

இந்த தவறுக்கு வருந்துவதாகவும், தனது பயிற்சியாளருக்கு ட்வீட்டர் போன்ற சமூக வலைத்தளத்தின் மூலமும் மன்னிப்பு கேட்டுள்ளார் வாவ்லா பாப்பாக்ரிஸ்டவ். ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்வது என்பது நிறைய விளையாட்டு வீரர்களின் பெரிய கனவு. ஆனால் விளையாட்டாக செய்த ஒரு ட்வீட், வாவ்லா பாப்பாக்ரிஸ்டவின் வாழ்க்கையையும்

புரட்டி போட்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் செய்தி வெகு சீக்கிரத்தில் பரவி வருகிறது. இதனால் ட்வீட் செய்யப்படும் ஒவ்வொரு நொடியும் சமூகத்தால் நாம் கவனிக்கப்படுகிறோம் என்பதை நினைவு கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X