ஆசை 60 நாள்னு சொல்லுவாங்க.. இங்க அதுகூட இல்ல.. Threads ஆப்பிற்கு ஆப்பு.. Elon Musk போட்ட பவர்ஃபுல் சாபம்!
ஆசைக்கும், தேவைக்கும் குறைந்தது 100 அடி இடைவெளியாவது இருக்க வேண்டும். தேவையின் பெயரால் எந்தவொரு காரியத்தை செய்தாலும் அது கண்டிப்பாக விளங்கும்; நல்ல முடிவை தரும். அதுவே வெறும் ஆசைக்காக மட்டுமே ஒரு விஷயத்தை செய்தால் அது உருப்பட்ட மாதிரி தான்.
இதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ட்விட்டருக்கு (Twitetr) போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட த்ரெட்ஸ் ஆப் (Threads App) தான். அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான ட்வுன்லோட்களை பெற்று எலான் மஸ்க்கின் (Elon Musk) சாபங்களை வாங்கிய த்ரெட்ஸ் ஆப், இப்போது சில கசப்பான உண்மைகளை கடந்து கொண்டிருக்கிறது!

சிஎன்பிசி வழியாக கிடைத்த அறிக்கையின்படி, த்ரெட்ஸ் காஃபின் தினசரி பயனர் (Daily User) எண்ணிக்கையானது வீழ்ச்சியை கண்டுள்ளது. அது மட்டுமின்றி த்ரெட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவர்கள் அதில் செலவு செய்யும் நேரமும் (Time Users are Spending on the App) கடுமையாக குறைந்துள்ளது.
வெளியான அறிக்கையின்படி, ஜூலை 11 மற்றும் 12 ஆம் தேதிகளில், த்ரெட்ஸ் ஆப்பின் டெய்லி ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையானது கடந்த ஜூலை 9 உடன் ஒப்பிடும்போது சுமார் 20% குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பயனர்கள் ஆப்பில் செலவழிக்கும் நேரமானது 20 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களாக குறைந்துள்ளது, அதாவது 50% வீழ்ச்சியை கண்டுள்ளது
மற்றொரு கண்காணிப்பு நிறுவனமும் கூட த்ரெட்ஸ் ஆப்பின் இந்த திடீர் சரிவை பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனமான சிமிலர்வெப் (SimilarWeb), கடந்த 2 நாட்களில் த்ரெட்ஸின் தினசரி ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை 25% குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் பயனர்கள் செலவிடும் நேரமானது 20 நிமிடங்களிலிருந்து 8 நிமிடங்களாக குறைந்துள்ளது.
இருப்பினும் மெட்டா (Meta) நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் "த்ரெட்ஸ் ஆப் ஆனது இன்னமும் அதன் ஆரம்ப நாட்களில் (Early Days) தான் உள்ளது, த்ரெட்ஸ் ஆப்பிற்கு கிடைத்த ஆரம்ப வெற்றியை பார்த்து நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம், இது எங்கள் எதிர்பார்ப்புகளை விஞ்சிய வெற்றியாகும்"
"நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்புதான் த்ரெட்ஸ் ஆப்பை அறிமுகம் செய்தோம். இப்போது எங்கள் கவனம் நிலையான செயல்திறனை (Stable Performance) உறுதி செய்வதிலும், புதிய அம்சங்களை (New Features) வழங்குவதிலும், வரும் மாதங்களில் ஆப்பின் யூசர் எக்ஸ்பீரியன்ஸை (User Experience) மேம்படுத்துவதிலும் உள்ளது" என்று கூறியுள்ளார்.
நினைவூட்டும் வண்ணம், த்ரெட்ஸ் ஆப் ஆனது அறிமுகம் செய்யப்பட்ட முதல் 5 நாட்களில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை பெற்று, மிகவும் வேகமாக வளர்ந்து வரும் செயலியாக உருமாறியது. இருப்பினும் தற்போது த்ரெட்ஸ் ஆப் போகும் போக்கை பார்த்தால், பலரும் இதை வெறும் ஆசைக்காக மட்டுமே இன்ஸ்டால் செய்துள்ளனர் என்பது போல் தெரிகிறது. பயனர் ஈடுபாட்டை தக்கவைக்காத வரை த்ரெட்ஸ் கீழ்நோக்கி தான் செல்லும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.


Click it and Unblock the Notifications








