Twitter சோலி முடிஞ்சது! Elon Musk வயிற்றில் புளி கரைக்கும் Threads.. பிச்சிக்கும் டவுன்லோட்ஸ்.. ஈஸியா இருக்கு!
எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) சொந்தமான ட்விட்டர் (Twitter) நிறுவனத்திற்கு எதிராக மெட்டா (Meta) நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) செய்துள்ள காரியத்தை பார்க்கும்போது "அஷோக்.. இன்னையில இருந்து உன் அழிவுகாலம் ஆரம்பிக்குது" என்கிற சினிமா வசனம் நினைவிற்கு வந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!
ஏனென்றால் ட்விட்டர் தளத்தை "மொத்தமாக காலி செய்யும்" நோக்கதின் கீழ் - இந்தியா உட்பட உலகளவில் - அறிமுகம் செய்யப்பட்டுள்ள மெட்டாவின் புதிய தளமான த்ரெட்ஸ் ஆப் (Threads App) ஆனது அறிமுகமான வேகத்தில் "அரக்க பறக்க" டவுன்லோட் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கின் கூற்றுப்படி, "அறிமுகமான முதல் இரண்டு மணி நேரத்தில் த்ரெட்ஸ் ஆனது 2 சைன்-அப்களை (2 Million Sign-ups) கடந்துவிட்டன". அதாவது அறிமுகமான வேகத்தில், சுமார் 20 லட்சம் பயனர்கள் த்ரெட்ஸ் ஆப்பை தங்களது மொபைல்களில் இன்ஸ்டால் செய்து, அதை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்!
த்ரெட்ஸ் ஆப் ஆனது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கிறது. மெட்டாவின் புதிய த்ரெட்ஸ் ஆப் ஆனது ட்விட்டரை விட சிறப்பாக செயல்படுமா என்கிற கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அதை பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியும்.
த்ரெட்ஸ் ஆப்பை டவுன்லோட் செய்து சைன்-அப் செய்வது எப்படி? முன்னரே குறிப்பிட்டபடி, த்ரெட்ஸ் ஆப் ஆனது கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) ஆகிய இரண்டிலுமே பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. இது த்ரெட்ஸ் ஆன் இன்ஸ்டாகிராம் ஆப் (Threads an Instagram App) என்கிற பெயரின் கீழ் கிடைக்கிறது; அதை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யவும்.
பின்னர் உங்களுடைய இன்ஸ்டாகிராம் ஐடியை (Instagram ID) பயன்படுத்தி அதனுள் லாக்-இன் (Log-in) செய்யவும். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் லாக்-இன் செய்து வைத்திருந்தால், த்ரெட்ஸ் ஆனது வெறுமனே பெர்மிஷன் (Permission) மட்டுமே கேட்கும். அதாவது இதற்கான நீங்கள் தனியாக சைன்-இன் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது
த்ரெட்ஸ் ஆப்பின் பயன் என்ன? இது டெக்ஸ்ட் அடிப்படையிலான ஒரு கான்வர்ஷேஷன் ஆப் (Text-based Conversation App) ஆகும். ஒருபக்கம் ஃபேஸ்புக் இருந்தாலும் கூட, த்ரெட்ஸ் ஆனது ட்விட்டரை போலவே இருக்கும். அதாவது இதன்கீழ் 500 எழுத்துகள் வரை உள்ளடக்கிய போஸ்ட்களை பதிவு செய்யலாம். அதில் இணைப்புகள் (Links), அதிகபட்சம் 10 புகைப்படங்கள் (Photos) வரை சேர்க்கலாம் மற்றும் 5 நிமிடங்களை நீளமான வீடியோக்களையும் பகிரலாம்.
மேலும் உங்கள் த்ரெட்ஸ் போஸ்ட்டிற்கு யார் பதிலளிக்கலாம் என்பதையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். த்ரீ-டாட்ஸ் மெனுவை (Three-dots Menu) கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் த்ரெட்ஸில் உள்ள மற்ற ப்ரொஃபைல்களை ஃபாலோ (Follow) செய்யலாம், பிளாக் (Block) செய்யலாம் அல்லது ரிப்போர்ட் (Report) செய்யலாம். சுவாரசியமாக இன்ஸ்டாகிராமில் நீங்கள் பிளாக் செய்த அக்கவுண்ட்கள் அனைத்தும் தானாகவே த்ரெட்ஸிலும் பிளாக் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








