Home
News

அட ஆமப்பா! மார்க் ஜூக்கர்பர்க் ஆப்பில் தமிழ் எழுத்து! ஆனால், அங்க எப்படி? நெட்டிசன்கள் கேள்வி?

எலான் மஸ்க்கின் (Elon Musk) ட்விட்டருக்கு (Twitter) போட்டியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் திரெட்ஸ் ஆப் (Threads App) களமிறங்க காத்திருக்கும் வேளையில், அந்த ஆப்பின் லோகோவில் தமிழ் எழுத்து இடம்பெற்றிருப்பதாக நெட்டிஷன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்த முழு விவரம் இதோ.

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் (Elon Musk) போட்ட ஒரு ட்வீட் காரணமாக, அவருக்கும் மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க்குக்கும் (Mark Zuckerberg) இடையே கைகலப்பே வந்துவிடும் போலிருக்கிறது. ஏனென்றால், அவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர்.

அட ஆமப்பா! மார்க் ஜூக்கர்பர்க் ஆப்பில் தமிழ் எழுத்து! அங்க எப்படி?

சொல்லப்போனால், சண்டைக்கான இடத்தை தேர்வு செய்வதுபோல அவர்களின் பதிவு இருப்பது, உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்த வாய் சண்டைக்கு காரணம் ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் உருவாக்கி இருக்கும் திரெட்ஸ் ஆப் மட்டுமே. சில மாதங்களுக்கு முன்பு, மார்க் ஜூக்கர்பெர்க் ட்விட்டர் நிறுவனம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதோடு, அதேபோல மெட்டா நிறுவனம் ஒரு ஆப்பை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடிக்கும் விதமாக "இதுவாவது, புத்திசாலிதனமான முடிவாக இருக்குமா?" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ட்விட்டரில் இருக்கும் மார்க் ஸூகர்பெர்க் ஆதரவாளர்கள், "அவருக்கு தற்காப்பு கலை தெரியும், நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்" என்று எலான் மஸ்கிடம் வம்பு இழுந்துள்ளனர்.

இதற்கு எலான் மஸ்க் "நான் கூண்டு சண்டைக்கு தயார்" என்று பதிவிடவே, அதற்கு மார்க் ஸூகர்பெர்க் "சண்டைக்கான இடத்தை சொல்" என்று பதிவிட்டுள்ளார். இப்படி மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் இரண்டு கோடீஸ்வரர்கள் இடையேயும் வார்த்தை போர் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், சண்டைக்கு தொடக்கமாக இருந்த திரெட்ஸ் ஆப் கூகுளில் பிளே ஸ்டோரில் (Google Play Store) இடம் பெற்றுள்ளது.

ஆனால், டவுன்லோட் செய்ய முடியவில்லை. இந்த ஆப் வரும் ஜூலை 6ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், முதலில் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுவொரு புறம் இருக்க, அந்த திரெட்ஸ் ஆப்பின் லோகோவில் தமிழ் எழுத்து இடம்பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதற்கான விளக்கத்தை அளிக்கும்படி, மெட்டி நிறுவனத்திடம் கேள்வி எழுப்பவும் செய்கின்றனர். இந்த ஆப்பின் லோகோவில் தமிழ் எழுத்தான "கு" போன் குறியீடு அதில் இடம்பெற்றிப்பது சற்று சிந்திக்கத்தான் வைக்கிறது. அதற்கு மெட்டா நிறுவனம் ஏதாவது காரணம் வைத்திருக்க வாய்ப்புள்ளது.

மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Facebook Owner Meta Twitter Rival Threads App On Google Play Store
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X