Home
News

திடீர்னு.. பொது வெளியில் மன்னிப்பு கேட்ட Elon Musk.. அந்த ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்து உள்ளார்!

ட்விட்டர் (Twitter) நிறுவனத்தின் கட்டுப்பாட்டை தன்வசமாக்கிய பிறகு, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டர் தளத்தில் பல வகையான மாற்றங்களை கொண்டு வந்தார். அவைகளில் - சந்தா அடிப்படையில் ப்ளூ டிக்களை வழங்கும் - ட்விட்டர் ப்ளூ (Twitter Blue) அம்சம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மாத சந்தா (Monthly Subscription) மற்றும் ஆண்டு சந்தாவின் (Annual Subscription) கீழ் அணுக கிடைக்கும் ட்விட்டர் ப்ளூவின் கீழ் 2 மணிநேரம் வரை நீளும் வீடியோக்களை கூட பதிவேற்றம் செய்ய கூடிய (Upload 2-hour Long Video) ஆதரவு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

திடீர்னு.. பொது வெளியில் மன்னிப்பு கேட்ட Elon Musk.. ஏன்?

ஆனால், நீளமான வீடியோக்களை அப்லோட் செய்ய அனுமதிக்கும் புதிய ஆதரவானது மொபைல் போனின் ஸ்டோரேஜில் (Mobile Phone Storage) கணிசமான இடத்தை ஆக்கிரமிப்பதாக புகார் எழுந்தது. அந்த புகாரை ஒப்புக்கொள்ளும்படியாக, எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கம் வழியாக ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை (Screen shot) பகிர்ந்து உள்ளார்.

எலான் மஸ்க் தனது ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஒதுக்கீட்டை (Smartphone Storage Allocation) காண்பிக்கும் ஸ்கிரீன் ஷாட்டை ட்வட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்க்ரீன் ஷாட் வழியாக ட்வீட்டர் ஆப் (Twitter App) ஆனது தோராயமாக 9.52 ஜிபி ஸ்டோரேஜை ஆக்கிரமித்து உள்ளதை காணமுடிகிறது.

அதே ஸ்க்ரீன் ஷாட்டில் வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் டிஸ்கார்ட் (Discord) போன்ற பிற ஆப்கள் முறையே 1.3 ஜிபி மற்றும் 2 ஜிபி அளவிலான ஸ்டோரேஜை மட்டுமே பயன்படுத்துகின்றன என்பதையும் பார்க்க முடிகிறது. சுவாரஸ்யமாக, அந்த பட்டியலில் ஆபாச வலைத்தளமான பார்ன்ஹப்பும் (PornHub) உள்ளது. அது ஸ்டோரேஜில் 11ஜிபி-ஐ பயன்படுத்துகிறது.

ஸ்டோரேஜ் அல்லக்கேஷன் விவரங்களை வெளிப்படுத்தும் ஸ்க்ரீன் ஷாட் உடன் சேர்த்து "மன்னிக்கவும், இந்த ஆப் பெரிய அளவில் ஸ்டோரேஜை எடுத்துக்கொள்கிறது" என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார். அதாவது 2 மணி நேர வீடியோ பதிவேற்ற ஆதரவானது மொபைல் போனின் ஸ்டோரேஜை அதிகமாக பயன்படுத்துகிறது தான் என்பதை எலான் மஸ்க் ஒப்புக்கொண்டு, மன்னிப்பும் கேட்டுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த ட்வீட், ட்விட்டர் தளத்தில் வைரல் (Viral) ஆகி வருகிறது. இது 27 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் (Views) மற்றும் 3.2 லட்சத்திற்கும் மேலான லைக்ஸ்களை (Likes) பெற்றுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த "மன்னிப்பு" ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு மறைகுறியாக்கப்பட்ட டைரக்ட் மெசேஜ்களை (Encrypted Direct Messages) அணுகுவதற்கான ஆதரவு கிடைத்த வேகத்தில் வந்துள்ளது.

அறியாதோர்களுக்கு என்கிரிப்டட் டிஎம்-களை (Encrypted DMs) அணுக உதவும் ஆதரவானது, ட்விட்டர் பயனர்களின் தகவல்தொடர்பு தனியுரிமை (Communication Privacy) மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் டீஃபால்ட் (Default) ஆக இருக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் பயனர்கள் இந்த அம்சத்தை ஆக்டிவேட் (Activate) செய்ய வேண்டி இருக்கும். அதுமட்டுமின்றி, என்க்ரிப்ட் செய்யப்பட்ட டிஎம்-களுக்கான அணுகல் தற்போது வரையிலாக வணிகங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் உட்பட சரிபார்க்கப்பட்ட அக்கவுண்ட்களுக்கு (Verified accounts) மட்டுமே அணுக கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Twitter App is using More Space in Phone Storage So Elon Musk Asked Sorry To Twitter Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X