Home
News

100% வியாபாரினு நிரூபித்த Elon Musk.. X பயனர்களை சுண்டி இழுக்கும் விலையில் 2 புதிய சந்தா திட்டங்கள் அறிமுகம்!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk) மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றான ட்விட்டர் (Twitter) நிறுவனத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டதும், அதில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்ததும், குறிப்பாக ட்விட்டர் என்கிற பெயரை எக்ஸ் (X) என்று மாற்றியதும் பலருக்கும் தெரிந்த கதையே!

எலான் மஸ்க் ட்விட்டரை தன் கைக்குள் கொண்டு வந்து ஓராண்டு ஆகும் நிலைப்பாட்டில், எக்ஸ் தளத்தில் இரண்டு புதிய சந்தா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் திட்டம் பேஸிக் (Basic) என்று அழைக்கப்படுகிறது; இரண்டாவது திட்டம் பிரீமியம் பிளஸ் (Premium Plus) என்று அழைக்கப்படுகிறது. எக்ஸ் தளத்தில் ஏற்கனவே ஒரு பிரீமியம் திட்டம் இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

X பயனர்களை சுண்டி இழுக்கும் விலையில் 2 புதிய சந்தா திட்டங்கள் அறிமுகம்

புதிய எக்ஸ் திட்டங்களின் விலை நிர்ணயம்: புதிய பேஸிக் மற்றும் பிரீமியம் பிளஸ் ஆகிய இரண்டு திட்டங்களுமே எக்ஸ் தளத்தின் முக்கிய அம்சங்களுக்கான அணுகலை வழங்குகின்றன, ஆனால் பிரீமியம் பிளஸ் திட்டமானது லார்ஜஸ்ட் ரிப்ளை பூஸ்ட் (Largest reply boost), அனுப்பிய ட்வீட்களை அன்டூ செய்யும் திறன் (Ability to undo sent tweets) மற்றும் சில பிரத்யேக அம்சங்களுக்கான அணுகல் போன்ற கூடுதல் அம்சங்களை வழங்குகிறது.

பேஸிக் திட்டத்தின் மாதாந்திர மற்றும் வருடாந்திர விலை நிர்ணயம்: இந்தியாவில், எக்ஸ் தளத்தின் பேஸிக் திட்டமானது மாதத்திற்கு ரூ.244 க்கு அணுக கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள், மாதாந்திர சந்தாவிற்கு பதிலாக வருடாந்திர சந்தா திட்டத்தை தேர்வு செய்தால், உங்களுக்கு மொத்தம் ரூ.2,590 செலவு ஆகும்.

X பயனர்களை சுண்டி இழுக்கும் விலையில் 2 புதிய சந்தா திட்டங்கள் அறிமுகம்

பிரீமியம் பிளஸ் திட்டத்தின் மாதாந்திர மற்றும் வருடாந்திர விலை நிர்ணயம்: பிரீமியம் பிளஸ் திட்டத்திற்கு மாதத்திற்கு ரூ.1,300 செலவாகும். பயனர்கள் வருடாந்திர சந்தாவை தேர்வு செய்தால் ஆண்டுக்கு ரூ.13,600 செலுத்த வேண்டி இருக்கும். இரண்டு புதிய எக்ஸ் திட்டங்களுமே தற்போது அணுக கிடைக்கின்றன. முன்னரே குறிப்பிட்டபடி, எக்ஸ் தளத்தில் ஏற்கனவே பிரீமியம் திட்டமொன்று உள்ளது. அது மாதத்திற்கு ரூ.650 செலவாகும்.

எக்ஸ் பேஸிக் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த பேஸிக் திட்டத்தின் கீழ், உங்களுக்கு ப்ளூ டிக் வெரிஃபிகேஷன் (Blue Tick Verifications) கிடைக்காது. இருப்பினும், பயனர்கள் தங்கள் ரிப்ளைகளுக்கான பூஸ்ட்-ஐ (Boost to replies) பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல், பயனர்கள் ட்வீட்டை எடிட் செய்யவும் (Edit Tweet), 4,000 எழுத்துகள் வரையிலான லாங் ட்வீட்களை (Long tweet), 20 நிமிடங்கள் வரையிலான லாங் வீடியோக்களை பதிவேற்றவும் (Upload Long Videos) முடியும்.

X பயனர்களை சுண்டி இழுக்கும் விலையில் 2 புதிய சந்தா திட்டங்கள் அறிமுகம்

மேலும் டூ பேக்டர் ஆத்தென்டிகேஷன் (Two-factor authentication), என் க்ரிப்டட் டைரக்ட் மெசேஜ்கள் (Encrypted DMs), லைக்ஸ் மற்றும் சப்ஸ்க்ரிப்ஷன்களை மறைக்கும் திறன் (Ability to hide likes and subscriptions) ஆகியவற்றையும் பெறுவார்கள். பேஸிக் திட்டத்தின் கீழ் உள்ள பயனர்கள் விளம்பரங்களை தொடர்ந்து பார்ப்பார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எக்ஸ் பிரீமியம் பிளஸ் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பெயர் குறிப்பிடுவது போல, இந்த திட்டங்த்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அம்சங்கள் எல்லாமே, ஏற்கனவே கிடைக்கும் பிரீமியம் திட்டத்தை விட சில படிகள் மேலே இருக்கும். மேலும் இது விளம்பரமில்லாத சந்தா திட்டமாகும் (ad-free subscription), அதாவது பயனர்களின் டைம்லைனில் எந்த விளம்பரங்களும் காணப்படாது.

கன்டென்ட்டை உருவாக்குபவர்கள் மீடியா ஸ்டுடியோ (Media Studio) மற்றும் அனலிடிக்ஸ்-க்கான (Analytics) அணுகல் உட்பட பல அம்சங்களை பெறுவார்கள். இதுதவிர்த்து பேஸிக் திட்டத்தில் உள்ள எல்லா அம்சங்களும் இந்த திட்டத்திலும் கிடைக்கும். கூடுதலாக வெரிஃபைடு ப்ளூ செக் மார்க்கையும் (Verified blue check mark) நீங்கள் பெறுவீர்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 New X Subscription Plans Launched in India Check Basic and Premium Plus Price and Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X