Home
News

இப்போதுதான் இவரு வாயில இருந்து நல்ல செய்தி வருது: இனி டிவிட்டரில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்கலாம்..

உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் ட்விட்டர் தளத்தை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதேபோல் இந்த ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு, வீட்டில் இருந்து வேலை செய்வதற்குத் தடை போன்ற பல அறிவிப்புகள் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து இப்போது தான் ஒரு நல்ல செய்தியை ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

அதாவது ட்விட்டர் தளம் விரைவில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதனை ட்விட்டர் தளத்தை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இந்த அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இனி ட்விட்டரில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்கலாம்..

மேலும் ட்விட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவிடும் ட்விட்களில் விளம்பரங்களை வழங்கி, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கு பங்கிட்டு கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பின்பு இதற்காக முதற்கட்டமாக 5 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு கிரியேட்டர் வெரிஃபைடு பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதில் ஏராளமான மாற்றங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.

இனி ட்விட்டரில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்கலாம்..

அதாவது ட்விட்டர் தளத்தில் பயனர்களுக்கு வெரிஃபைடு அந்தஸ்தை வழங்கும் வகையில் புளூ சந்தா அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கட்டணம் செலுத்துவோருக்கு வெரிஃபைடு அந்தஸ்த்து. கூடுதலாக புதிய வசதிகளை விரைந்து வழங்கி கொண்டே இருக்கிறது இந்த ட்விட்டர் நிறுவனம்.

அதேபோல் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி,நீண்ட காலமாக இன்ஆக்டிவ்வாக இருக்கும் ட்விட்டர் அக்கவுண்ட்கள் (Inactive Twitter Accounts) விரைவில் நீக்கம் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் லட்சக்கணக்கான யூசர்கள் தங்களது ட்விட்டரை மீண்டும் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏனென்றால், ஒருவர் கடந்த காலத்தில் பதிவிட்ட ட்வீட்கள் மொத்தமாக போய்விடும் என்பதால் மீண்டும் பயன்படுத்தத் திட்டமிட்டு வருகின்றனர். இந்த முடிவு குறித்து எலான் மஸ்க்கின் ட்வீட்டுக்கு பதிலளித்த யூசர் ஒருவர், "இன்ஆக்டிவ் அக்கவுண்ட் நீக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பு, ட்விட்டர் நிறுவனத்தின் மிகப்பெரிய தவறான முடிவாக மாறக்கூடும்.

இனி ட்விட்டரில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்கலாம்..

பலரது 'வரலாற்று' ட்வீட்கள் அழிக்கப்பட்டுவிடும். ஆகவே, இந்த முடிவை செயல்படுத்துவதற்கு முன்பாக எலான் மஸ்க் 'மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார். இதைக்கண்ட எலான் மஸ்க் இன்ஆக்டிவ் அக்கவுண்ட்ஸ் ட்வீட்கள் 'Archived' செய்யப்படும் என்று அவருக்கு பதிலளித்துள்ளார்.

இந்த முடிவை அதிருப்தி ட்விட்டர் யூசர்கள் சிலர் வரவேற்றுள்ளதாகவே தெரிகிறது. ட்விட்டர் அக்கவுண்ட்டை நீக்கினால் நீக்குங்கள் என்று பெரிதுபடுத்தாமல் இருக்கின்றனர். ஒருவேளை நீங்கள் உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட் நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று விரும்பினால் பின்வருவனவற்றைக் கட்டாயம் கடைப்பிடியுங்கள்.

நீங்கள் ஆண்டுக்கணக்கில் ட்விட்டர் ஆப் (Twitter App) பயன்படுத்தவில்லை என்றாலும், இப்போது மீண்டும் பயன்படுத்தத் தொடங்குங்கள். தொடர்ந்து பயன்படுத்த முடியவில்லை என்றால், 30 நாட்களுக்கு ஒரு முறையாவது லாகின் செய்வதை மறந்து விடாதீர்கள். இப்படி செய்தாலே உங்களது ட்விட்டர் அக்கவுண்ட் இன்ஆக்டிவ் லைன்னுக்கு செல்லாது.

Best Mobiles in India

English summary
Content creators get paid for ads on Twitter: Elon Musk says this : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X