Home
News

திருப்பி கொடுக்கனும்ல! 11 ஆண்டுகளுக்கு பின் ட்வீட்! அதுவும் மீம்ஸ்! எலான் மஸ்க் பாணியில் மார்க் ஜூக்கர்பெர்க்

மெட்டா (Meta) தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg), 11 ஆண்டுகளுக்கு பின் ஒரு சாதாரண மீம் மூலம் மீண்டும் ட்வீட் (Tweet) செய்திருக்கிறார். இந்த மீம்ஸ்க்கு பின்னால் மிகப்பெரும் பில்லியனர்களின் பனிப்போர் அடங்கியிருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

எலான் மஸ்க்குக்கு (Elon Musk) சொந்தமான ட்விட்டருக்கு (Twitter) போட்டியாக மார்க் ஜூக்கர்பெர்க்கின் திரெட்ஸ் (Threads) ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) டவுட்லோட் செய்துகொள்ள முடிகிறது.

11 ஆண்டுகளுக்கு பின் ட்வீட்! எலான் மஸ்க் பாணியில் மார்க் ஜூக்கர்பெர்க்

இந்த திரெட்ஸ் ஆப் வெளியான 2 மணி நேரத்தில், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், அதை டவுன்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்த மாபெரும் வரவேற்பை பார்த்தால், அடுத்த சில வாரங்களில் கோடிக்கணக்கான மக்களிடம் திரெட்ஸ் ஆப் இருக்கும் என்று தெரிகிறது.

இந்த நேரத்தில், ட்விட்டர் பயனர்கள் எலான் மஸ்க்கின் மீது கொண்ட அதிருப்தியை, மார்க் ஜூக்கர்பெர்க் தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக்கொண்டார். அவரது கார்ப்பரேட் பனிப்போருக்கு மிகப்பெரும் ஆயுதமாக திரெட்ஸ் ஆப் எப்படி உருவானது உள்ளிட்டவை குறித்து தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

பொதுவாக, எலான் மஸ்க், சர்ச்சையாகும் கருத்துகளை ட்விட்டரில் தைரியமாக தெரிவிக்கும் பழக்கம் கொண்டவராக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கருத்துக்கள், அவரது கோடிக்கணக்கான பாலோயர்களின் என்டர்டெயின்மென்ட்டுக்கு தீனிபோடும் விதமாக இருந்தாலும், அது எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய போட்டியாளரை உருவாக்கும் என்பதை அவரே அறிந்திருக்க மாட்டார்.

11 ஆண்டுகளுக்கு பின் ட்வீட்! எலான் மஸ்க் பாணியில் மார்க் ஜூக்கர்பெர்க்

கடந்த காலங்களில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் குறித்து எலான் மஸ்க் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். ஆனால், மார்க் ஜூக்கர்பெர்க் குறித்து அவர் தெரிவித்த கருத்தே, திரெட்ஸ் ஆப்புக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பது போல் தோன்றுகிறது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுடனே எலான் மஸ்க், மாதாந்திர சந்தா, ப்ளூ டிக் போல வெவ்வேறு கலர்களில் டிக்ஸ், சந்தா கட்டாத அக்கவுண்ட் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இந்த மாற்றங்கள் ட்விட்டர் பயனர்களுக்கு கடும் அதிருப்தியை கொண்டு வந்தது. ட்விட்டர் போல வேறு ஆப் கிடைக்காதா என்று நினைக்கும் மனநிலைக்கே பல யூசர்கள் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மார்க் ஜூக்கர்பெர்க், ட்விட்டர் போலவே ஒரு மைக்ரோபிளாகிங் ஆப்பை உருவாக்கும் பணிகளை தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். இதற்கு எலான் மஸ்க், கிண்டலடிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்த முடிவாவது, புத்திசாலிதனமான இருக்குமா?" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு மார்க் ஸூகர்பெர்க் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

இருப்பினும், ட்விட்டரில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள், "மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு தற்காப்பு கலை தெரியும், எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்" என்று எலான் மஸ்கிடம் வம்பு இழுந்துள்ளனர். இதற்கு எலான் மஸ்க்கும் "நான் கேஜ் பைட்டுக்கு (கூண்டு சண்டை) தயார்" என்று பதிவிட்டு, மேலும் சூட்டை கிளப்பிவிட்டார். இதற்கு, மார்க் ஸூகர்பெர்க் "லோக்கோஷனை அனுப்பு" என்று சண்டைக்கான இடம் எங்கே என்று கேட்பது போல் பதிவிட்டார்.

இப்படி மாற்றி மாற்றி சோஷியல் மீடியாவில் அவர்களின் வார்த்தை போர் நீண்டு வருகிறது. வெளியே நமக்கு அவர்கள் இருவரும் விளையாட்டாக நடந்துகொள்வது போல தோன்றலாம். ஆனால், மார்க் ஜூக்கர்பெர்க், திரெட்ஸ் ஆப்பை திட்டமிட்டதைவிட அதிவிரைவாக அறிமுகம்படுத்தும் பணியை செய்துவந்துள்ளதும், இதை உறுதிப்படுத்தும் விதமாக, திரெட்ஸ் ஆப் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளதும் நமக்கு காட்டுகிறது.

இந்த நேரத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் ஒரு மீம்மை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த மீம் ஒரே யுனிவர்ஸில் இருக்கும் இரண்டு "ஸ்பைடர் மேன்களை" குறிக்கும் விதமாக இருக்கிறது. இந்த மீம்மை பார்த்தால் உங்களுக்கு சாதாரணமாக தோன்றாலாம், ஆனால், அது ஒரே மாதிரியான திறமை கொண்ட இரண்டு ஸ்பைடர் மேன்கள், ஒரே உலகத்தில் இருப்பதை குறிக்கிறது.

இது உங்களுக்கு மார்வெல் படங்களை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். ஆகவே, அவர் தனக்கு போட்டியாக யாரையும் கருதவில்லை. அவரையே அவருக்கு போட்டியாக நினைக்கிறார் என்பதை அந்த மீம் குறிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. ஒருவேளை எலான் மஸ்க்கை கூட அவர் சமபலம் வாய்ந்த போட்டியாளராக குறிப்பிட்டிருக்கலாம், ஆனால், அதன் உண்மை அவருக்கு மட்டுமே தெரியும்.

இதுபோன்று மீம்ஸ் மூலம் கருத்து தெரிவிப்பது எலான் மஸ்க் பாணியாகும் என்பதும், இந்த மீம் மூலம் மார்க், 11 ஆண்டுகளுக்கு பின் ட்வீட் செய்துள்ளார் என்பதுமே இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Meta CEO Mark Zuckerberg Tweet A Meme After 11 Years With Threads App Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X