Home
News

ஆரம்பிக்கவே இல்லை! அதுக்குள்ள ராஜினாமாவா? ட்விஸ்ட் கொடுக்கும் Twitter

ட்விட்டர் (Twitter) நிறுவனத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்துவரும் நிலையில், தலைமை நிர்வாகி திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவுக்கு முறையான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. தனியார் செய்தி நிறுவனத்திடம் தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த விவரங்கள் இதோ.

உலகின் மிகப்பெரும் பணக்காரரனா எலான் மஸ்க், 2022ஆம் ஆண்டில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். கிட்டத்தட்ட ரூ.3.30 லட்சம் கோடி செலவு செய்து வாங்கிய ட்விட்டர் மூலம், அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. சொல்லப்போனால், எலான் மஸ்க் கைக்கு ட்விட்டர் நிறுவனம் வருவதற்கு முன்பே, நஷ்டத்திலேயே போய்கொண்டிருந்தது.

ஆரம்பிக்கவே இல்லை! அதுக்குள்ள ராஜினாமாவா? ட்விஸ்ட் கொடுக்கும் Twitter

இருப்பினும், எலான் மஸ்க் துணிந்து வாங்கி, இப்போது மீண்டும் நஷ்டத்தில் ஓட்டிக் கொண்டிருக்கிறார். இதனாலேயே, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ட்விட்டரில் மேற்கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் ஊழியர்களை பணிநீக்கம் செய்தார், ப்ளூ டிக் யூசர்களுக்கு கட்டணம் விதித்தார். அதன்பின் பல லட்சம் பாலோயர்களை கொண்ட பிரபலங்களின் ப்ளூ டிக்குகளை பறித்தார். இப்படி அவரது பல முடிவுகள் ட்விட்டர் யூசர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நேரத்திலேயே உஷாரான எலான் மஸ்க் தன்னுடைய வியாபார தந்திரத்தை கையில் எடுத்தார். ட்விட்டர் யூசர்களை தன்பக்கம் சாய்க்க, அதிரடி அப்டேட்களை கொடுக்கத் தொடங்கிவிட்டார். புதிய ட்விட்டர் சிஇஓவை அறிமுகப்படுத்தினார். மெசஞ்சர் (Messenger), வாட்ஸ்அப் (WhatsApp) ஆப்ஸ்களில் இருக்கும் ஆடியோ, வீடியோ கால் வசதிகளை ட்விட்டரில் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார்.

இதிலேயே உற்சாகமடைந்த ட்விட்டர் யூசர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக 2 மணி நேரம் நீளம் கொண்ட வீடியோக்களை ட்விட்டரில் அப்லோட் செய்யலாம் என்று அறிவித்தார். இப்படி ட்விட்டர் நிறுவனமே அப்டேட் நிறுவனமாக போய்க்கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

புதிதாக அறிவிக்கப்பட்ட ட்விட்டர் சிஇஓ லிண்டா யாக்கரினோ (Linda Yaccarino) இன்னும் சில மாதங்களில் பதவியேற்க இருக்கும் நிலையில், ட்விட்டரின் முக்கிய நிர்வாகி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். ட்விட்டரின் டிரஸ்ட் அண்ட் சேப்டி பிரிவு தலைவராக (Twitter head of trust and safety) இருந்து வந்த எல்லா இர்வின் (Ella Irwin) தான் ராஜினாமா செய்துவிட்டதாக தனியார் செய்தி நிறுவனத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

இவருக்கு முன்னதாக இந்த பதவியில் இருந்த யோயல் ரோத் (Yoel Roth) எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுடன் ராஜினாமா செய்திருந்தார். இதனால் ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தில் கன்டென்ட் மாடரேஷன் பிரிவில் பணியாற்றி வந்த எல்லா இர்வின் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார். சொல்லப்போனால், எலான் மஸ்க்குக்கு மிக நெருக்கமான நிர்வாகிகளில் எல்லா இர்வினும் ஒருவராவார்.

இப்படிப்பட்ட சூழலில் இவர் ராஜினாமா செய்திருப்பது, ட்விட்டர் நிறுவனத்திலேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது ராஜினாமாவுக்கு முறையான காரணம் தெரியவில்லை. இதனால் புதிதாக வரவிருக்கும் சிஇஓவுக்கு வேலை பளு கூடுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Twitter Head of Trust And Safety Ella Irwin Resigns Before New Twitter CEO Linda Yaccarino Takes Control Of The Company
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X