Home
News

ஸ்மார்ட் டிவி வைத்திருக்கும் பயனர்களுக்கு குட் நியூஸ் சொன்ன Elon Musk.! இனி YouTube-க்கு வேலை இருக்காது போலயே!

கடந்த ஆண்டு ட்விட்டரை தன்வசப்படுத்தினார் உலப் பணக்காரர்களில் முதன்மையானவர் எலான் மஸ்க். குறிப்பாக இந்த ட்விட்டர் தளத்தின் உரிமையாளரானதும் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். பின்பு உயர் பதவி வகித்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார்.

அதன்பின்பு ட்விட்டருக்கு கட்டண தொகை செலுத்தும் சந்தாதாரர் வசதியை அறிமுகப்படுத்தினார். இதுதவிர அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ட்விட்டரில் ராபின்சன் என்ற கணக்கின் பெயர் கொண்ட பயனாளர் ஒருவர்,ஸ்மார்ட் டிவிக்கான ட்விட்டர் வீடியோ செயலி ஒன்று உண்மையில் எங்களுக்குத் தேவையாக உள்ளது. ட்விட்டரில் ஒரு மணிநேரம் ஓட வீடியோவை என்னால் காண முடியவில்லை என்று பதிவிட்டு உள்ளார்.

ஸ்மார்ட் டிவி வைத்திருக்கும் பயனர்களுக்கு குட் நியூஸ் சொன்ன Elon Musk!

உடனே இதற்குப் பதிலளித்த மஸ்க், அது வந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்து உள்ளார். மேலும் இதற்கு அந்த நபர், பாராட்டுகிறேன், யூடியூப்புக்கான சந்தாவை ரத்து செய்து விட்டு, பின்னர் ஒரு போதும் திரும்பிப் திரும்பி பார்க்காத ஒரு நாள் வரும். அதனை நான் பார்க்க முடியும் என பதிவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ட்விட்டர் தளம் விரைவில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதனை ட்விட்டர் தளத்தை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இந்த அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஸ்மார்ட் டிவி வைத்திருக்கும் பயனர்களுக்கு குட் நியூஸ் சொன்ன Elon Musk!

ட்விட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவிடும் ட்விட்களில் விளம்பரங்களை வழங்கி, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பின்பு இதற்காக முதற்கட்டமாக 5 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு கிரியேட்டர் வெரிஃபைடு பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

அதேபோல் ட்விட்டர் தளத்தில் பயனர்களுக்கு வெரிஃபைடு அந்தஸ்தை வழங்கும் வகையில் புளூ சந்தா அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கட்டணம் செலுத்துவோருக்கு வெரிஃபைடு அந்தஸ்து. கூடுதலாக புதிய வசதிகளை விரைந்து வழங்கி கொண்டே இருக்கிறது இந்த ட்விட்டர் நிறுவனம்.

ஸ்மார்ட் டிவி வைத்திருக்கும் பயனர்களுக்கு குட் நியூஸ் சொன்ன Elon Musk!

மேலும் சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் 2 மணி நேரம் வீடியோ பதிவேற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்தனர். இந்த வசதி கிடைத்ததும் பல பயனர்கள் சில அசத்தலான படங்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்தனர். மேலும் ட்விட்டர் நிறுவனம் வீடியோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Twitter is developing video app for smart TVs: Elon Musk says it is coming soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X