இனி பிளாக் மட்டும் தான்.. இருளாகும் டிவிட்டர்.. ஆனா எதிர்காலம் ஒளிமயமானது - எலான் மஸ்க் விளக்கம்..
எலான் மஸ்க் கைகளுக்கு டிவிட்டர் கைமாறியதில் இருந்து, இன்று வரை டிவிட்டர் (Twitter) தளம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. சமீபத்தில் டிவிட்டர் 'X' என்று பெயர் மாறிய பிறகு, மற்றொரு மாற்றத்தையும் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் தளம், விரைவில் பிளாக் நிறத்தில் வெள்ளை எழுத்துக்களை கொண்ட டார்க் மோட் பயன்முறைக்கு மாறவுள்ளதாக கூறப்படுகிறது. டார்க் மோட் என்பது ஒரு விருப்பம் தானே.. அதை பயனர் விருப்பம் போல அமைத்துக்கொள்ளும் ஒரு அம்சம் தானே என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம், இதுவரை அப்படி தான் டார்க் மோட் (dark mode) அம்சம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், எலான் மஸ்கின் பிளான் வேறாக உள்ளது. டிவிட்டர் பயன்பாட்டை திறந்தவுடன், டிவிட்டர் ப்ளூ நிற பேக் கிரௌண்ட் உடன் வெளிவரும். இது டிஃபால்ட்டாக (default) இருக்கும் நிறமாகும்.
ஆனால், சமீபத்திய தகவலின் படி, இனி டிவிட்டர் தளம் டிஃபால்ட்டாக கருப்பு நிறத்திற்கு மாறவுள்ளதாக கூறப்படுகிறது. டிவிட்டரில் வரவிருக்கும் சமீபத்திய மாற்றம் டார்க் மோடை இயல்புநிலை அமைப்பாக மாற்றும் என்றும், மற்றும் லைட் பயன்முறைக்கு மாற விருப்பம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
டிவிட்டர் தற்போது எக்ஸ் என்று பெயர் மாற்றிய பிறகு, இந்த செய்தி வெளி வந்துள்ளது. டிவிட்டரில் ஒரு பயனருக்கு மஸ்க் அளித்த பதிலில், தளம் விரைவில் டார்க் மோட் அம்சத்தை மட்டுமே கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். "இது எல்லா வகையிலும் சிறந்தது" என்று மஸ்க் பதிலா அளித்துள்ளார்.

டிவிட்டரில் சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு ப்ளூ நிற (Blue Tick) டிக்கிற்குப் பதிலாக இனி பிளாக் நிற டிக் மார்க் (Black tick mark) அடையாளத்தை பரிந்துரைத்த இந்த வடிவமைப்பாளரின் பகிர்வுக்கு மஸ்க் பதிலளித்துள்ளார். எலான் மஸ்க் எப்படி ட்விட்டரை முழுவதுமாக மாற்றுகிறார் என்பதைப் பார்க்கும்போது, ப்ளூ நிற டிக் விரைவில் நிறம் மாறவுள்ளதும் தெரிகிறது.
டிவிட்டர் தற்போது வரை மூன்று காட்சி விருப்பங்களை வழங்குகிறது. டிவிட்டர் இயல்புநிலையில் (வைட்), டிம் (Dim) மற்றும் லைட்ஸ் அவுட் (Lights Out) போன்ற விருப்பங்களை டிவிட்டர் கொண்டுள்ளது. நீங்கள் யூகித்தபடி, முதல் விருப்பம் உங்களுக்கு நிலையான வெள்ளை பின்னணியை வழங்குகிறது. மங்கலான விருப்பம் அடிப்படையில் ட்விட்டரை டார்க் ப்ளூ - க்ரேய் நிறத்தில் வருகிறது.
மேலும் லைட்ஸ் அவுட் பிளாக் நிற பின்னணியைக் கொண்டுள்ளது. எனவே மஸ்க் இந்த மாற்றத்தைக் கொண்டுவரும் வரை நீங்கள் இன்னும் மூன்று விருப்பங்களைத் தேர்வுசெய்யலாம். அதேபோல், டிவிட்டர் டெக்ஸ்ட் அளவு மற்றும் டெக்ஸ்ட் நிறத்தை மஞ்சள் (yellow), பிங்க் (pink), பர்பிள் (purple), ஆரஞ்சு (orange) மற்றும் க்ரீன் (green) நிறமாக மாற்ற அனுமதிக்கிறது.

ஆனால் இதுவும் எலான் மஸ்கிங் புது பிளான் படி மாற்றப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. டிவிட்டர் டார்க் மோட் (Twitter dark mode) முறையில் மட்டும் டிவிட்டரில் இனி இது செயல்படும் என்பது பெரிய மாற்றமாக இருக்கிறது. இந்த வார தொடக்கத்தில், மஸ்க் டிவிட்டருக்கான புதிய லோகோவை எக்ஸ் (X) என்று மாற்றியுள்ளதாக அறிவித்து வெளியிட்டார்.
அது இப்போது 'எக்ஸ்' (X) என்ற எழுத்துடன் கருப்பு பின்னணியில் வெள்ளை நிறத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சிறிய ப்ளூ நிற பறவை லோகோவில் (Twitter blue bird logo) இருந்து இது முற்றிலுமாக இப்போது மாற்றப்பட்டுள்ளது. இதுவரை, ட்விட்டர் வெப் (Twitter web) மட்டுமே எக்ஸ் என்று லோகோவுடன் மாற்றப்பட்டுள்ளது.
விரைவில் iOS மற்றும் Android-க்கான ஆப்ஸ்களிலும் X ஐகான் ஆக லோகோ மாறும். டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ கூறுகையில், "எக்ஸ் என்பது எதிர்கால டிஜிட்டல் கனவாகும். இது ஆடியோ, வீடியோ, மெசேஜ் அனுப்புதல், பணம் செலுத்துதல், பேங்கிங், ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் சேவை மற்றும் வாய்ப்புகளுக்கான உலகளாவிய சந்தையை உருவாக்குவது போன்ற நோக்கங்களை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் டிவிட்டர் ஒளிமயமான டிஜிட்டல் தளமாக திகழப்போகிறதாம்.


Click it and Unblock the Notifications








