Xiaomi 12 வரிசையில் இப்படி ஒரு Lite வெர்ஷன் மாடலா? மக்கள் அதிகம் கவர்ந்த புதிய Xiaomi 12 Lite இதான்

|

சியோமி நிறுவனம் புதிதாக அதன் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் Xiaomi 12 Lite என்ற டிவைஸை இப்போது உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் 108 மெகாபிக்சல் பிரைமரி ரியர் கேமராவுடன் வருகிறது. சியோமி 12 லைட் சாதனம் ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Xiaomi இரண்டு வாரங்களாக இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்து டீஸ் செய்து வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் மற்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

புதிய சியோமி 12 லைட்

புதிய சியோமி 12 லைட்

சியோமி 12 லைட் டிவைஸ் நான்கு வண்ண விருப்பங்களைப் பெறுகிறது மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் நேர்த்தியான 7.29மிமீ அளவு கொண்ட ஸ்லிம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த டிவைஸ் ஒட்டுமொத்தமாக வெறும் 173 கிராம் மட்டுமே எடையைக் கொண்டுள்ளது. Xiaomiயின் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் சேனல்கள் மூலம் இந்த போனுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் இன்று தொடங்குகிறது.

Xiaomi 12 Lite விலை என்ன?

Xiaomi 12 Lite விலை என்ன?

Xiaomi 12 Lite மூன்று ஸ்டோரேஜ் மடல்களில் வருகிறது. இந்த டிவைஸின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் $399 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 31,600 ஆகும். இந்த டிவைஸின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை $449 ஆகும். இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 35,600 ஆகும். இதன் 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை $499 ஆகும். இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 39,600 விலைக்கு கிடைக்கும்.

புதிய சியோமி 12 லைட் நிறங்கள்

புதிய சியோமி 12 லைட் நிறங்கள்

இந்த புதிய சியோமி 12 லைட் ஸ்மார்ட்போன் பிளாக், லைட் கிரீன் மற்றும் லைட் பிங்க் ஆகிய மூன்று வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய டிவைஸ் ப்ரீ-ஆர்டர் செய்ய இன்று முதல் கிடைக்கிறது. Xiaomi 12 Lite ஸ்மார்ட் போன் மாடலை விருப்பமுள்ள பயனர்கள் Xiaomiயின் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் சேனல்கள் வழியாக வாங்கலாம்.

Xiaomi 12 Lite சிறப்பம்சம்

Xiaomi 12 Lite சிறப்பம்சம்

சியோமி 12 ஸ்மார்ட்போன் 20:9 என்ற ரெட்ஸியோவுடன் 6.55' இன்ச் AMOLED புள் HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 2,400 x 1,080 பிக்சல் தீர்மானம் கொண்ட 950nits ஹை-பிரைட்னஸ் உடன் HDR10+ மற்றும் Dolby Vision ஆதரவு இரண்டையும் ஆதரிக்கிறது. இது 120Hz ரெப்பிரேஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் வீதத்துடன் வருகிறது. சியோமி 12 லைட், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் உடன் வருகிறது. இது ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 உடன் MIUI 13 இல் இயங்குகிறது.

Xiaomi 12 Lite கேமரா

Xiaomi 12 Lite கேமரா

Xiaomi 12 Lite ஆனது சாம்சங் HM2 சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்ட 108 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக இந்த டிவைஸில் Samsung GD2 சென்சார் கொண்ட 32 மெகாபிக்சல் முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது. Xiaomi Selfie Glow அம்சத்துடன் ஆட்டோஃபோகஸையும் இந்த டிவைஸ் பெறுகிறது.

Xiaomi 12 Lite பட்ஜெட் விலையில் பெஸ்ட் போனா?

Xiaomi 12 Lite பட்ஜெட் விலையில் பெஸ்ட் போனா?

Xiaomi 12 Lite இல் உள்ள இணைப்பு விருப்பங்களைப் பொறுத்த வரையில், இது USB Type-C, NFC, Bluetooth v5.2 மற்றும் Wi-Fi 6 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் சிறந்த ஆடியோ தரத்திற்காக Dolby Atmos சிறப்பு ஆடியோ தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு நிகரான புதிய டிவைஸை வாங்க விரும்பினால் இந்த சாதனம் உங்களுக்கானது தான்.

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi 12 Lite With 108 Megapixel Camera Snapdragon 778G SoC Launched

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X