ஜியோவின் புதிய அவதாரம்! தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!

|

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ஆண்டு பொது கூட்டத்தின் வாயிலாக இந்தியாவில் முத்திரை பதித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய நிறுவனம், மிகப்பெரிய ஏற்றுமதியாளர், அதிக வரிசெலுத்தும் நிறுவனம், வேகமாக வளர்ந்துவரும் தொலைதொடர்பு நிறுவனம் என தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட அறிவித்துக்கொண்ட இந்நிறுவனம், மிகப்பெரிய ப்ராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கவும் திட்டமிடுகிறது.

பெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா?

இந்நிறுவனத்தின் அதிவேக ப்ராட்பேண்ட் பைப்பான, ஜியோஜிகாபைபர் செயல்படுத்தப்பட்டவுடன், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் உள்ள பயனர்களின் மிகப்பெரிய தனிப்பட்ட தகவல் தொகுப்பான இது விளங்கும். இது எவ்வளவுக்கு எவ்வளவு பிரம்மிக்கதக்க விசயமோ அதே அளவிற்கு அச்சுறுத்தலானதும் கூட. ஏனெனில் பயனர்களின் தகவல் அனைத்தும் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருப்பது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை.

ஸ்மார்ட் ஹோம்

ஸ்மார்ட் ஹோம்

ஸ்மார்ட் ஹோம் அனுபவத்தை தரும் வகையில் இல்லங்களில் ஊடுருவும் ஜியோஜிகாபைபர் மூலம் ஜியோ உங்களின் டிஜிட்டல் வேலைக்காரனாக மாறவுள்ளது. மேலும் இது சில்லறை வர்த்தகர்களையும் இணைப்பதுடன், அதன் சொந்த சில்லறை விற்பனை அங்காடிகளை அனைத்து தரப்பினர்களுடன் இணைக்கிறது. இனி வருங்காலத்தில் அனைத்தும் ஐ.ஓ.டி மயமாகும் நிலையில், இயந்திரங்கள், சேவைகள், அமைப்புகள் மற்றும் பொருட்கள் இணையத்துடன் இணைந்தே இருக்கும் என்பதால் ஜியோ தனிக்காட்டு ராஜாவாக ஆதிக்கம் செலுத்தும்.

இந்தியர்களுக்கு செழிப்பை ஏற்படுத்தும்

இந்தியர்களுக்கு செழிப்பை ஏற்படுத்தும்

இந்தியர்களுக்கு செழிப்பை ஏற்படுத்தும் என இந்த ஆச்சர்ய அற்புதத்தை விற்கிறது ரிலையன்ஸ் நிர்வாகம். ஆனால் இது பாதி உண்மை தான். அதேநேரம், பயனர்கள் தங்களுக்கே தெரியாமல் அளவில்லா அதிகாரத்தை இந்த மாபெரும் நிறுவனத்துடன் வழங்குகின்றன. மேலும் பயன்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க அதிகாரமும் சேர்ந்தே அதிகரிக்கும்.

அப்பாய்ண்ட்மெண்ட்களை கண்காணிக்கும்

அப்பாய்ண்ட்மெண்ட்களை கண்காணிக்கும்

ஸ்மார்ட் வீடுகளில் இந்த ஜியோ, லைட்களை இயக்கும், மளிகைப்பொருட்களை ஆர்டர் செய்யும், அப்பாய்ண்ட்மெண்ட்களை கண்காணிக்கும், நகரத்தில் உள்ள சிறந்த டீல்களை கண்டறியும். இந்த அனைத்து வசதிகளும் பெரும்பான்மையான மொழிகளில் கிடைக்கிறது. இந்த ஜியோ கருவி அனைத்தையும் கணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள செயற்கை நுண்ணறிவுடன் கூடிய டேட்டா மைனிங் அல்காரிதம்கள் ஜியோவின் முதுகெலும்பாக செயல்படுகின்றன. இதன் மூலம் இரவு உணவு என்ன, வீட்டில் மனைவி எப்படி பொழுதுபோக்குகிறார் , வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது என அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் , எப்போது தூங்க செல்வீர்கள் என அனைத்தும் இதற்கு தெரியும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாதவை கூட இதற்கு தெரியும்.

 அல்காரிதம்களால் கண்காணிக்கப்படுகிறது

அல்காரிதம்களால் கண்காணிக்கப்படுகிறது

இனி வரும் புதிய உலகில் யார் இந்த தகவல்களை கட்டுபடுத்துகிறார்களே, அவர்களே இந்த உலகையும் கட்டுப்படுத்துவர். Homo Deus: A Brief History of Tomorrow என்ற புத்தகத்தில் யூவல் நோக் ஹராரி குறிப்பிட்டுள்ளதாவது, "ஒவ்வொரு தனிநபரும் யாரும் புரிந்துகொள்ள முடியாத சிறு சிப் ஆக மாறிவருகின்றனர். உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் செயலும் தொடர்ந்து அல்காரிதம்களால் கண்காணிக்கப்படுகிறது" என்கிறார்.

பயனர்களின் தகவல்கள்

பயனர்களின் தகவல்கள்

பயனர்களின் தகவல்கள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இது விளம்பரதாரர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல், உங்கள் விருப்பங்களில் தாக்கம் செலுத்தி , உங்கள் சுதந்திரத்தை நசுக்க விரும்புபவர்களுக்கும் தகவல்கள் மிகவும் மதிப்புமிக்கவை.

எந்தவொரு சட்டமும் இல்லை

எந்தவொரு சட்டமும் இல்லை

ஏற்கனவே பேஸ்புக் தகவல்கள் மைன் செய்யப்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் எப்படி அமெரிக்க மற்றும் பிரிட்டன் தேர்தல்களில் தாக்கம் செலுத்தியது என நாம் அறிவோம். பேஸ்புக் போல கூகுள், அமேசான் மற்றும் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் இந்த தகவல்களை கட்டுப்படுத்தினால் என்ன நிகழும்? அரசாங்கத்தை விட இவர்கள் தனிநபர்களின் மீது அதிக அதிகாரம் செலுத்தும் நிலை ஏற்படும்.

பல பில்லியன் மக்கள் உள்ள இந்தியாவில் பயனர்களின் தகவல் மற்றும் தனியுரிமையை பாதுகாக்க எந்தவொரு சட்டமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்:  இனிமே கலக்குவோம்ல.!

சிறு துரும்பும் பல் குத்த உதவும்: இனிமே கலக்குவோம்ல.!

"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" - என்ற பழமொழி ஞாபகம் இருக்கிறதா.?? இனி எப்போதும் ஞாபகத்தில் இருக்கும், மறக்கவே மாட்டீர்கள். அதெப்படி.? - என்று கேட்கிறீர்களா.?? சொல்கிறேன்.

சின்ன ரப்பர் பேண்ட், பயன்படுத்தாத பழைய சிரிஞ்ச் (syringe) தொடங்கி காலியான வாட்டர் பாட்டில்கள் வரை நாள்தோறும் குப்பைதொட்டிக்குள் போடப்படும் பல பொருட்கள் மிகவும் பயன்தரும் பொருட்களென்று கூறினால் நம்புவீர்களா.?? - நம்பித்தான் ஆக வேண்டும்.

ஸ்டார் வார்ஸ் பிரியர்களுக்கான 5 கேஜெட்கள் அல்லது சேகரிப்புகள்.!

இங்கே தொகுக்கப்பட்டுள்ள புத்திசாலித்தனமான 13 ஸ்மார்ட்போன் ஹேக்ஸ்களை பற்றி அறிந்து கொண்டபின், ஒரு குண்டூசியை தூக்கியெறிக்கூட நூறு முறை யோசிப்பீர்கள்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #10

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #10

எப்போதுமே ஒரு ஸ்டைலஸ்தனை (stylus) தான் பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை, அவசரத்திற்கு பேட்டரி ஒன்றையும் பயன்படுத்தலாம். பேட்டரியின் எதிர்மறை பக்கத்தை கொண்டு தன திரையை தொட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #09

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #09

பேப்பர் கிளப் (Paperclip) தளர்ந்து விட்டால் தூக்கிப்போட்டு விடாதீர்கள் அதனை கொண்டு போன் ஸ்டாண்ட் ஒன்றை செய்யுங்கள். இப்போது தொலைபேசி கீழே விழுமென்ற கவலை இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #08

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #08

மிகவும் குளிர்கிறதென்பதால் கையுறை அணிந்து கொண்டீர்களா.? ஆனால் கையுறை போட்டுக்கொண்டே ஸ்மார்ட்போனை இயக்க முடியவில்லையா.? கவலையை விடுங்கள். உங்கள் விரல் மீது சில அலுமினிய தாள்களை சுற்றிக்கொள்ளுங்கள், இப்போது டச் வேலை செய்யும்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #07

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #07

ஸ்மார்ட்போன்களின் போர்ட்களில்/ துளைகளில் உள்ள அழுக்கு மற்றும் தூசியை சுத்தம் செய்ய ஒரு ஊசியை பயன்படுத்தவும். ஊசியில் ஏற்றப்பட்ட காற்றை வெளிப்படுவதின் மூலம் மிகவும் சிறிய அளவிலான சுத்தத்தை பெறலாம்; பெரிய அளவிலான சுத்தத்தை எதிர்பார்க்க வேண்டாம்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #06

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #06

நீங்கள் ஒரு பொறுமையான திறமைசாலியாய் இருப்பின், பலூன் ஒன்றின் மூலம் ஒரு ஸ்மார்ட்போன் கேஸை உருவாக்கலாம். முதலில் பாதி கொள்ளளவில் பலூனை ஊதி, பின் அதனுள் தொலைபேசி திணிக்க, பலூன் ஒரு கையுறை போன்று உங்கள் ஸ்மார்ட்போனில் ஒட்டிக்கொள்ளும்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #05

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #05

ஒரு டேப் மற்றும் சில ரப்பர் பேண்டுகளில் இருந்து உங்கள் மிக எளிமையான "ட்ரைபாட்" ஒன்றை செய்திட முடியும். ஸ்மார்ட்போனை டேப்பிற்குள் திணித்து, ரப்பர் போட்டு விழாத வண்ணம் லாக் செய்துகொள்ளவும். இந்த "டேப் ட்ரைபாட்" ஆனது பார்க்கும் பாதி வீடியோவை இது மறைக்கும் என்றாலும் கூட செல்பீக்கள் மற்றும் விடியோக்கள் எடுக்க சிறப்பாக பயன்படும்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #04

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #04

நீர் நிரப்பட்ட வாட்டர் பாட்டில் ஒன்றை உங்களின் பிளாஷ் லைட்டின் மீதி நிலைநிறுத்த உங்களால் ஒரு நைட் லேம்ப்தனை உருவாக்க முடியும். பெரிய அளவிலான பிரகாசத்தை எதிர்பார்க்க முடியாதெனினும்; இரவு நேரங்களில் பிறரை தொந்தரவு செய்யாத அளவு இது உதவும்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #03

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #03

ரிஸ்க் எடுக்க விரும்பினால் உங்களின் ஸ்மார்ட்போனை நீருக்கடியில் அனுப்பி புகைப்படம் எடுக்க விரும்பினால் ஒரு ஆணுறை உங்களுக்கு நிச்சயம் உதவும்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #02

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #02

நம்பினால் நம்புங்கள் உங்கள் இயர்போனின் வயரில் உள்ள பொத்தான் ஒரு கேமரா ட்ரிகர் பட்டன் ஆகும். கருவியுடன் செருகி, கேமராவை ஆன் செய்து எங்காவது நிலைநிறுத்திய பின்னர் ஹெட்போன் பொத்தானை அழுத்தவும், போட்டோ தானாக கிளிக் ஆகும்.

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #01

ஜீனியஸ் ஸ்மார்ட்போன் ஹேக்ஸ் #01

அசைவப்பிரியர்களே இது உங்களுக்கான ஸ்பெஷல் ஹேக் என்றே கூறலாம். சரிபாதியாக உடையப்பெற்ற முட்டையோடு ஒன்றை எடுத்து உங்களின் பிளாஷ் லைட்டின் மேல் கவிழ்த்தி மிகவும் கவனமாக டேப் ஒன்று போட்டு ஒட்டிவிட்டால் - பிரகாசமான ஸ்பாட் லைட் ரெடி.!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Sold on Jios new avatar The price you pay could be quite a shocker : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X