தினசரி 2ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இந்த Jio ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் பெஸ்ட்.!
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ஒரு திட்டத்தின் விலையை உயர்த்தியது.
ஆனால் ஜியோ நிறுவனம் எந்த ஒரு திட்டத்தின் விலையையும் உயர்த்தவில்லை. ஆனால் கூடிய விரைவில் ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தும் என்று தகவல் வெளிவந்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஜியோ நிறுவனம் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறதுஇந்த திட்டம்.
ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி,ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்றஅட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர ஜியோசினிமா, ஜியோடிவி,ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட்போன்ற ஆப் வசதிகளுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளன. மேலும் ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப் வசதிகளுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








