எல்லாம் பண்ணியாச்சு., இதையும் செய்ய வேண்டியதுதான்- ஜியோபோன் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்!

|

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்த்தி அறிவித்தது. இந்த விலை உயர்வானது டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், ஜியோவின் தற்போதைய விலை பிற நிறுவனங்களைவிட குறைவாகவே இருக்கிறது. நிறுவனம் ஜியோபோன் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை உயர்வை அறிவித்த ஜியோ

விலை உயர்வை அறிவித்த ஜியோ

குறிப்பிடத்தக்க வகையில் விலை உயர்வை அறிவித்த ஜியோ புதிய திட்டங்களை காண்பிக்கும் வகையில் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை புதுப்பித்திருக்கிறது. இதில் 23 நாட்களில் தொடங்கி 336 நாட்கள் வரை ஜியோ போன் திட்டங்களை அறிவித்துள்ளன. இந்த திட்டங்கள் ஜியோ க்ளவுட், ஜியோ செக்யூரிட்டி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி போன்ற பல்வேறு பயன்பாடுகளின் தொகுப்பிற்கான அணுகலை வழங்குகிறது.

புதிய ஜியோபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள்

புதிய ஜியோபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள்

புதிய ஜியோபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். ஜியோபோன் ரூ.125 ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கையில் இந்த திட்டம் 300 எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 0.5 ஜிபி அதாவது 500 எம்பி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 23 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஜியோ ஆப்ஸ் போன்ற அணுகலை நிறுவனம் வழங்குகிறது.

ஜியோபோன் ரூ.152 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோபோன் ரூ.152 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோபோன் ரூ.152 ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு 500 எம்பி டேட்டாவை வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ்களை வழங்குவதோடு ஜியோ பயன்பாடுகளின் அணுகல் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு அணுகலை வழங்குகிறது.

ஜியோ போன் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ போன் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ போன் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கையில் இந்த திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ் அணுகல் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோபோன் ரூ.222 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோபோன் ரூ.222 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோபோன் ரூ.222 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் உடன் தினசரி 2 ஜிபி டேட்டா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ போன் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ போன் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ போன் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டமானது விலை உயர்ந்த திட்டமாகும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா என மொத்தம் 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 50 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகிறது. இந்த திட்டமானது 366 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது நீண்ட கால திட்டமாகும்.

பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi)

பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi)

பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரித்த பின்னர், இதே போன்ற அறிவிப்பை இப்போது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமும் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் கட்டண உயர்வை அறிவித்த பின்னர், அதன் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. இருப்பினும், தொலைத்தொடர்பு நிறுவனம், ப்ரீபெய்ட் திட்டங்களை தொழில்துறையில் மலிவானதாக வைத்துள்ளது.

சந்தைப் பங்கை அதிகரிக்க உதவும்

சந்தைப் பங்கை அதிகரிக்க உதவும்

இது சந்தாதாரர்களின் சந்தைப் பங்கை மேலும் அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு பயனருக்குச் சராசரி வருவாயை (ARPU) கணிசமாக அதிகரிக்க உதவும். இதே காரணத்தை இதற்கு முன்பு ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்து திட்டங்களும் இந்த விலை உயர்வைப் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஜியோவின் பெரும்பாலான பிரபலமான திட்டங்களின் விலை அதிகரித்துள்ளது.

ப்ரீபெய்ட் திட்டங்களின் அதிகரிக்கப்படக் கட்டணங்கள்

ப்ரீபெய்ட் திட்டங்களின் அதிகரிக்கப்படக் கட்டணங்கள்

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் அதிகரிக்கப்படக் கட்டணங்கள் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டது அதன்படி தற்போது அமலுக்கும் வந்துள்ளது. சமீபத்திய அறிவிப்பின் படி, ஜியோ நிறுவனத்தின் அடிப்படை திட்டமான ரூ. 75 மதிப்புள்ள திட்டமானது இப்போது அறிவிக்கப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பின்னர் இனி ஜியோ பயனர்களுக்கு ரூ. 91 என்ற விலையில் தான் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 50 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கும்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ) வாடிக்கையாளர்கள்

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ) வாடிக்கையாளர்கள்

கட்டண உயர்வுக்கு எதிராக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ) வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரவித்து வருகின்றனர். ஜியோ அறிமுகமான குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்தது. அதற்கு காரணம் ஜியோ குறைந்த விலையில் ஏணைய சலுகைகளை வழங்கியதே ஆகும். ஜியோ இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்த விலை உயர்வுக்கு பலரும் மீம்ஸ்கள் மூலம் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
New Jiophone Prepaid plans: New Plan Updated its official websites

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X