பெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா?

இது போன்ற பிரபல தொழில்நுட்ப தொழில்முனைவோரின் நிலைத்தன்மை மற்றும் தலைமைப் பண்பு குறித்து கேள்வியழுப்பி உள்ளது.

|

டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வால் ஸ்டீரிட் ஆய்வாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

பெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்.!

ஆனால் சமீபத்தில் தாய்லாந்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட பிரிட்டிஷ் பணியாளரை டிவிட்டர் வாயிலாக தாக்கி தனது கோபத்தை வெடித்து சிதறியிருப்பது, இது போன்ற பிரபல தொழில்நுட்ப தொழில்முனைவோரின் நிலைத்தன்மை மற்றும் தலைமைப் பண்பு குறித்து கேள்வியழுப்பி உள்ளது.

6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.!6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்

தென்ஆப்ரிக்காவில் பிறந்து டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் என்ற இருபெரு நிறுவனங்களுக்கு பின்னால் இருக்கும் பில்லியனரான மஸ்க், தாய்லாந்து குகையில் சிக்கிய கால்பந்து குழுவை சேர்ந்த 13 சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட பிரிட்டிஷ் முக்குளிக்கும் வீரரான வெர்ன் உன்ஸ்வெர்த் தனது மீட்பு திட்டத்தை நிராகரித்த காரணத்திற்காக அவமானப்படுத்தியதற்காக பெயரை கெடுத்துக்கொண்டார்.

எல்லை மீறி நடந்து கொண்டாரா

எல்லை மீறி நடந்து கொண்டாரா

கடந்த வாரம் அவர் நீக்கிய டிவிட்டில் உன்ஸ்வெர்த்-ஐ முஸ்க், 'பீடோ கய்' அதாவது சிறுவர்கள் மீது பாலியல் இச்சை கொண்டவர் என பொருள்படும்படி குறிப்பிட்டதால், சமூக வலைதளங்களில் விமர்சன பிரளயத்தை சந்தித்து வருகிறார். மேலும் ஆய்வாளர்கள் பலர், எலான் மஸ்க் தனது சி.ஈ.ஓ என்று தன்னிலை உணர்ந்து செயல்படாமல் எல்லை மீறி நடந்து கொண்டாரா என கேள்வி எழுப்புகின்றனர்.

டொனால்ட் டிரம்பை பின்தொடர்ந்து

டொனால்ட் டிரம்பை பின்தொடர்ந்து

" எலான் மஸ்க் செய்ததிலேயே இதில் தான் தனது பெயரை பெரிதும் கெடுத்துக்கொண்டார்" என கூறுகிறார் எண்ட்பாய்ண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆய்வாளர் ரோகர் கேய். முஸ்க் டிவிட்டர் பயன்படுத்துவதில் டொனால்ட் டிரம்பை பின்தொடர்ந்து, தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களை வேதனைப்படுத்தி அவமானப்படுத்துகிறார்என்கிறார் ரோகர். இது முற்றிலும் தேவையற்றது. இதன் மூலம் இவர் ட்ரம்ப் போல மாறி வருகிறார்.

ஸ்லா நிறுவனத்தின் பங்குகள்

ஸ்லா நிறுவனத்தின் பங்குகள்

இந்த சமீபத்திய சர்ச்சைகளின் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 2.75% குறைந்து 310.10 டாலாராக ஆனது. இது அந்நிறுவனத்தின் நீண்ட கால நம்பகத்தன்மையை குறைக்கும் என்பதால், எலெக்ட்ரிக் ஆட்டோ மேக்கர் மாடல்3 உற்பத்தி இலக்குகளை அடைய அழுத்தம் அதிகரித்துள்ளது.

எலான் மஸ்க் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ்

எலான் மஸ்க் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ்

சமீபத்தில் முஸ்க் தனிநபரை அவமானப்படுத்தி எல்லைமீறி நடந்துகொண்டதற்கு முன்பு வரை, எலான் மஸ்க் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் இடையை சில ஒற்றுமைகள் இருந்தன என்கிறார் மூர் இன்சைட்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் பேட்ரிக் மூர்ஹெட். ஸ்டீவ் நிலைமையை இவ்வளவு தூரம் செல்ல விட்டிருக்க மாட்டார். நீண்ட கால சேதாரத்தை தடுக்கும் பொருட்டு மஸ்க் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இதன் மூலம் இந்த அவபெயரில் இருந்து மீள முடியும் என்கிறார் இவர்.

 சிலிக்கான வேலி

சிலிக்கான வேலி

தானாகவே இயங்கும் கார்களால் கிடைக்கும் பாதுகாப்பை தவிர்த்து அதனால் ஏற்படும் விபத்துகளை மட்டுமே பெரிதுபடுத்தி டெஸ்லா நிறுவனத்தின் மீது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துவதாக, எலான் மஸ்க் ஏற்கனவே பத்திரிக்கையாளர்களுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

சிலிக்கான வேலி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப துறையை சேர்ந்த பலரும் எலான் மஸ்க்கின் செயல்பாடுகளை கண்டித்து வருகின்றனர்.

டெஸ்லா 1926-ஆம் ஆண்டிலேயே 'இதை' விவரித்தார் என்றால் நம்பவே முடியாது..!

டெஸ்லா 1926-ஆம் ஆண்டிலேயே 'இதை' விவரித்தார் என்றால் நம்பவே முடியாது..!

மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் நிக்கோலா டெஸ்லா செய்த புரட்சிகரமான பங்களிப்பை இன்றுவரை உலகம் போற்றிக் கொண்டே தான் இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிகோலா டெஸ்லா நிகழ்த்திய கண்டுபிடிப்புகளும், அவரின் படைப்பாற்றலும், யோசனைகளும் மிகவும் அசாத்தியமானவைகளாய் இருந்தன..!

முழுக்க முழுக்க எதிர்கால நோக்கத்தோடு, தொலைநோக்கு சிந்தனையோடும் உருவாக்கம் பெற்ற டெஸ்லாவின் யோசனைகளில் ஒரு நம்பவே முடியாத கருவியும் அடக்கம் என்ற தகவல் வெளியாகியுள்ளது..!

எதிர்காலவாதி :

டெஸ்லா ஒரு இயற்பியலாளர், இயந்திர மற்றும் மின்சார பொறியாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் எதிர்காலவாதி அதே போல் அருகாமை மீள்தெளிவு நினைவக சக்தி (possessor of a near-eidetic memory) கொண்டவர் ஆவார்.

மீள்தெளிவு நினைவகம் :

மீள்தெளிவு நினைவகம் :

மீள்தெளிவு நினைவகம் (Eidetic memory) என்பதை போட்டோகிராஃபிக் மெமரி என்றும் கூறுவர் அதாவது பார்த்த விடயத்தை நினைவுக்குறியீடுகள் பயன்படுத்தி தெளிவாக மீண்டும் நினைவகப்படுத்தும் உயர் துல்லியமான திறன் ஆகும்.

300 காப்புரிமை :

300 காப்புரிமை :

எட்டு மொழிகளில் பேசிய நிகோலா டெஸ்லா தனது வாழ்நாளில் மொத்தம் 300 காப்புரிமைகளை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணிப்புகள் :

கணிப்புகள் :

இப்போது சில விடயங்களை டெஸ்லா அப்போதே கணித்திருந்தார் என்றால் அதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். குறிப்பாக சக்தி மற்றும் தகவல் தொடர்பு பற்றிய அவரது கணிப்புகள் பல நடைமுறைக்கு வந்துள்ளன.

தீர்க்கதரிசன சக்தி :

தீர்க்கதரிசன சக்தி :

டெஸ்லா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசன சக்தி கொண்டவராக இருந்திருந்தால் 1926-ஆம் ஆண்டிலேயே ஒரு அடிப்படை நவீன ஸ்மார்ட்போனை விவரித்திருப்பார்..!

ஒருமித்த நிலை :

ஒருமித்த நிலை :

"உலகம் முழுவதும் வயர்லெஸ் வசதி நடைமுறைப் படுத்தப்பட்ட பின்பு அதுவொரு மூளைப்போல செயல்படும் போது அனைத்துமே நிஜத்தின், ஒருமித்த நிலையின் துகள்களாய் செயல்படும்" என்று கூறியுள்ளார்.

தொலைவு :

தொலைவு :

"அந்த நிலையில் தொலைவு பற்றிய கவலையின்றி நாம் யாரிடம் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும்" என்றுள்ளார் நிகோலா டெஸ்லா..!

நேரடி

நேரடி

"இதுமட்டுமின்றி தொலைக்காட்சி மற்றும் டெலிபோனி மூலம் பல மைல்கள் கடந்து இருப்பவரிடம் நேரடியாக முகம் பார்த்து தொடர்பு கொள்ளக் கூடிய வசதியும் ஏற்படும்" என்றுள்ளார்.

எளிமை :

எளிமை :

"குறிப்பாக அந்த கருவிகள் ஆனது நாம் இப்போது உபயோகித்து பயன்படுத்தும் தொலைபேசிகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக எளிமையானதாக இருக்கும்" என்றும் நிகோலா தெளிவாக கூறியுள்ளார்.

"அந்த கருவியை நாம் நமது பாக்கெட்களில் வைத்துக் கொள்ளும் படியாக இருக்கும்" என்று நிகோலா கூறியது தான் அனைத்தை விடவும் மிகப் பெரிய தீர்க்க தரிசனமாகும், இதையெல்லாம் 1926 ஆம் ஆண்டு டெஸ்லா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உலகின் உண்மையான 'ஐயன் மேன்' (இரும்பு மனிதன்) : எலான் மஸ்க்.!!


அறிவியல் ஆர்வம், ஆர்வக்கோளாறான ஆய்வுகள்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
This may be the most brand-damaging thing Tesla CEO Elon Musk has ever done, according to analyst : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X