Just In
- 15 min ago
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- 40 min ago
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
- 1 hr ago
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
- 2 hrs ago
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
Don't Miss
- Movies
உச்ச நடிகர் காது வரை சென்ற அந்த பட்டம் விஷயம்.. மாஸ் நடிகரின் நடவடிக்கையால் ரொம்ப அதிருப்தியாம்?
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
"இஷ்டத்துக்கு அறிவிக்க இது ஜமீன்தார் கட்சி இல்லை" கரெக்ட் டைமில் வேட்பாளரை அறிவிப்போம்..ஜெயக்குமார்
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஓ... இதுக்கு பேரு தான் ஆப்பு? ஏர்டெல்லின் பிரபலமான திட்டத்திற்கு செக் வைத்த Jio-வின் புதிய திட்டம்!
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டிக் கொடுக்கும் வகையில் ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்களையும், அருமையான சலுகைகளையும் வழங்கிவருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதலாக டேட்டா நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் பிரபலமான திட்டத்திற்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது ஜியோ நிறுவனம். அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கி வந்தது. தற்போது ஏர்டெல்-இன் இந்த திட்டத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஜியோ நிறுவனம் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

அதாவது ஜியோ நிறுவனம் சமீபத்தில் ரூ.749 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஜியோவின் இந்த புதிய திட்டத்தில் அதிக நன்மைகள் கிடைக்கிறது என்றே கூறலாம். மேலும் இப்போது ஏர்டல் நிறுவனத்தின் ரூ.779 மற்றும் ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைமுதலில் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90நாட்கள் ஆகும். பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர Wynk மியூசிக், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக் மற்றும் Apollo 24|7 Circle போன்ற கூடுதல் நன்மைகளும் ஏர்டெல் ரூ.779 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அதேபோல் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய ஜியோ திட்டம். இதுதவிர ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் இதில் உள்ளது. அதாவது JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்டவைகள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும்.

ஜியோ Vs ஏர்டெல்
குறிப்பாக ஒரே போனில் ஜியோ மற்றும் ஏர்டெல் சிம் வைத்திருக்கும் பயனர்கள் இந்த திட்டங்களில் கண்டிப்பாக ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தான் தேர்வு செய்வார்கள். அதாவது ஏர்டெல் ரூ.779 திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கொடுத்தாலும் குறைவான டேட்டா நன்மைகளை வழங்குகிறது. ஆனால் ஜியோவின் புதிய ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது.
அதேபோல் ஜியோ நிறுவனம் இந்த புதிய திட்டத்தை அறிவிக்கும் முன்பு ஏர்டெல் நிறுவனம் இரண்டு பழைய திட்டங்களில் மாற்றங்கள் செய்துள்ளது.

அதாவது ஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் ரூ.3359 மற்றும் ரூ.499 ப்ரீபெய்ட திட்டங்களில் மட்டுமே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவைப் பெற முடியும் என்று கூறி இருந்தது. இந்நிலையில் மீண்டும் கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் இந்த டிஸ்னி +ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம். அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.399 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்களில் மீண்டும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கியுள்ளது. கடந்த மாதம் வரை ரூ.399 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்களில் இந்த சந்தாவை ஏர்டெல் நிறுவனம் வழங்கவில்லை. தற்போது தான் இந்த சலுகையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3 மாதங்களுக்கு டிஸ்னி 10 ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர Wynk மியூசிக், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக் மற்றும் Apollo 24|7 Circle போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர Wynk மியூசிக், இலவச Hellotunes, ரிவார்ட்ஸ்மினி சந்தா மற்றும் Apollo 24|7 Circle போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470