ஜியோ பயனர்களுக்கு இனி இந்த 2 மலிவு விலை திட்டம் கிடைக்காதா? ஏன் என்ன காரணம்?

|

இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, மிகவும் மலிவான இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இந்த மாற்றங்கள் ஏற்கனவே இணையதளத்தில் தெரியத் தொடங்கியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை நிறுவனத்திலிருந்து ஜியோபோன் நெக்ஸ்ட் வெளியீட்டுக்கு அளவீடு செய்யப்பட்ட அணுகுமுறையாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டுள்ளது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இது வரை வழங்கி வந்த இரண்டு ஜியோபோன் திட்டங்களை வழங்குவதை நிறுத்திவிட்டது.

இந்த மலிவு விலை திட்டங்கள் எல்லாம் இனி கிடைக்காதா?

இந்த மலிவு விலை திட்டங்கள் எல்லாம் இனி கிடைக்காதா?

ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது நீக்கப்பட்ட திட்டங்கள் ரூ. 39 மற்றும் ரூ. 69 விலை கொண்ட ஜியோபோன் திட்டங்கள் ஆகும். இந்த இரண்டு திட்டங்களும் சூப்பர் மலிவு வகையின் கீழ் வருகின்றது. இது PAN-India அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல், ரிலையன்ஸ் ஜியோ தனது பல திட்டங்களிலிருந்து கிடைக்கும் ''Buy 1 Get 1 Free' சலுகையை நிறுத்தியுள்ளது. இது கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை வழியாக மக்களுக்கு உதவ டெல்கோ சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 39 மற்றும் ரூ. 69 திட்டங்கள் என்ன நன்மையை வழங்கின?

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 39 மற்றும் ரூ. 69 திட்டங்கள் என்ன நன்மையை வழங்கின?

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 39 திட்டமானது 14 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது 100 எம்பி தினசரி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குக்கும் செல்லுபடியாகும் வரம்பற்ற குரல் அழைப்புடன் வருகிறது. அதே நேரத்தில், ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 69 திட்டத்தில் 0.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு 100 எஸ்எம்எஸ் உடன் 14 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த இரண்டு மலிவு விலை திட்டங்களை நிறுவனம் தற்போது நிறுத்தியுள்ளது.

சுந்தர் பிச்சை பகிர்ந்த ஒரு வீடியோ.! இணையதளத்தில் வைரல்.! இப்படி செய்யக் கூடாது மக்களே.!சுந்தர் பிச்சை பகிர்ந்த ஒரு வீடியோ.! இணையதளத்தில் வைரல்.! இப்படி செய்யக் கூடாது மக்களே.!

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம்?

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம்?

மேற்கூறிய இந்த இரண்டு திட்டமும் இனி டெல்கோவின் வாடிக்கையாளர்களுக்கு அதன் இணையதளத்தின் வழியாகவோ அல்லது மொபைல் அப்ளிகேஷன் வழியாகவோ கிடைக்காது என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இந்த இரண்டு ஜியோபோன் திட்டங்களையும் நிறுத்தியுள்ளது. இந்த திடீர் முடிவிற்கு பின்னணியில் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜியாபோன் நெக்ஸ்ட் இன்று அறிமுகப்படுத்தப்படுவதாக முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் இல்லையா?

புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் இல்லையா?

ஆனால், இன்று இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் அறிமுகம் செய்யப்போவதில்லை என்று திடீர் அறிவிப்பை ஜியோ வெளிப்படுத்தியுள்ளது. இந்த திடீர் முடிவிற்குப் பின்னணியில் உள்ள காரணத்தைப் பற்றியும் நிறுவனம் சில தகவலை வெளிப்படுத்தியுள்ளது. புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் கடுமையான சோதனையின் கீழ் இருப்பதனால் இன்று அறிமுகம் செய்யப்படவில்லை என்றும், தரமான தயாரிப்பாக இந்த புதிய சாதனம் வரும் தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

சுந்தர் பிச்சை பகிர்ந்த ஒரு வீடியோ.! இணையதளத்தில் வைரல்.! இப்படி செய்யக் கூடாது மக்களே.!சுந்தர் பிச்சை பகிர்ந்த ஒரு வீடியோ.! இணையதளத்தில் வைரல்.! இப்படி செய்யக் கூடாது மக்களே.!

ஜியோ அதன் 'Buy 1 Get 1 Free' சலுகையை நிறுத்தியுள்ளது

ஜியோ அதன் 'Buy 1 Get 1 Free' சலுகையை நிறுத்தியுள்ளது

ஜியோ தனது பல ஜியோபோன் திட்டங்களிலிருந்து Buy 1 Get 1 Free சலுகையை நிறுத்தியுள்ளது என்பதை நினைவில் கொள்க. வாடிக்கையாளர்கள் ஒரு ரீசார்ஜிற்கு பணம் செலுத்தும் போது கூடுதல் ரீசார்ஜ் செய்ய வரிசையில் நிற்க இந்த நன்மை பயன்படுத்தப்படுகிறது. தொற்றுநோய்களின் போது நிறையப் பணம் இல்லாத மற்றும் தொற்றுநோய்களின் காரணமாக வெளியே சென்று சம்பாதிக்க முடியாத மக்களுக்கு உதவ இந்த சலுகை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Has Removed Rs 39 and Rs 69 Affordable JioPhone Plans From Its List : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X