ஜியோவையே திணறடித்த Vi திட்டம்.. நன்மையை கேட்டா நீங்களே யோசிப்பிங்க.. Vi சிம் வாங்கலாமோ?

|

வோடபோன் ஐடியா (Vi) அதன் போட்டியாளர்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் சில சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பயனர்களுக்காக வழங்குகிறது. நன்மைகள் என்று வரும்போது Vi இன் ப்ரீபெய்ட் திட்டங்களை வேறு எந்த ஆபரேட்டராலும் முறியடிக்க முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன, முதல் காரணம் இது வீக்கெண்டு டேட்டா ரோல்ஓவர் வசதி மற்றும் இரண்டாவது இரவு முழுவதும் இலவச டேட்டா சலுகையை வழங்குகிறது.

ஜியோ vs வோடபோன் ஐடியா திட்டம்.. எது சிறந்தது?

ஜியோ vs வோடபோன் ஐடியா திட்டம்.. எது சிறந்தது?

இந்த இரண்டு சலுகைகளும் நிறுவனம் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் மாறும் தன்மையை மாற்றுகிறது. இன்று, வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 500 விலை பிரிவின் கீழ் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கிறோம். Vi இன் ரூ. 500 ப்ரீபெய்ட் திட்டம், ரிலையன்ஸ் ஜியோவிடமிருந்து நீங்கள் பெறுவதை விட இது சிறந்த சலுகைகளை உங்களுக்கு வழங்குகிறது என்பதே உண்மை. இதற்கான காரணம் கீழே உள்ள சம்பந்தப்பட்ட திட்டங்களால் வழங்கப்படும் நன்மைகளைப் பார்க்கவும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ. 499 விலை திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் திட்டங்களின் விலைக் கட்டமைப்பை மாற்றியபோது இது சமீபத்தில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்துடன், ரிலையன்ஸ் ஜியோ 28 நாட்களுக்குச் சேவை செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

உங்கள் WhatsApp சாட்டை ஏன் Google Drive-ல் இருந்து நீக்குவது சிறந்தது? காரணம் இருக்கு மக்களே..உங்கள் WhatsApp சாட்டை ஏன் Google Drive-ல் இருந்து நீக்குவது சிறந்தது? காரணம் இருக்கு மக்களே..

மொத்தம் 90 ஜிபி டேட்டாவை ஜியோ வழங்குகிறதா?

மொத்தம் 90 ஜிபி டேட்டாவை ஜியோ வழங்குகிறதா?

பயனர்கள் முழு 28 நாட்களுக்கும் 3 ஜிபி தினசரி டேட்டாவைப் பெறுகிறார்கள், மேலும் நிறுவனம் 6 ஜிபி போனஸ் தரவையும் வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் வழங்கப்படும் ஒட்டு மொத்த டேட்டா 90ஜிபி வழங்குகிறது.இது போனஸ் டேட்டா உட்படச் சேர்த்த டேட்டா அளவாகும். இந்த திட்டத்துடன் நிறுவனம் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா

இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா

இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் இத்திட்டம் வழங்குகிறது. இந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவின் தனிச் செலவு ரூ. 499 ஆகும். இத்துடன் பயனர்கள் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான இலவச அணுகலையும் பெறுகிறார்கள். இப்போது வோடபோன் ஐடியா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தைப் பார்ப்போம்.

'ஏர்டெல் பிளாக்' கீழ் கிடைக்கும் ஏகபோக நன்மைகள்.. பல சேவை ஒரு கட்டணம்.. மலிவான திட்டம் இது தான்..'ஏர்டெல் பிளாக்' கீழ் கிடைக்கும் ஏகபோக நன்மைகள்.. பல சேவை ஒரு கட்டணம்.. மலிவான திட்டம் இது தான்..

வோடபோன் ஐடியா ரூ. 501 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ. 501 திட்டம்

வோடபோன் ஐடியா பயனர்களுக்கு ரூ. 501 விலையில் அதன் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டமும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வீக்கெண்டு டேட்டா ரோல்ஓவர் மற்றும் இரவு முழுவதும் இலவச டேட்டா வழங்கும் ஆள்நைட் டேட்டா சலுகைகள் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில், பயனர்களுக்குத் தினசரி 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். Vi அதன் ரூ. 501 திட்டத்தை 28 நாட்கள் சேவை செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.

100 ஜிபி டேட்டாவை வழங்குகிறதா Vi?

100 ஜிபி டேட்டாவை வழங்குகிறதா Vi?

இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 16 ஜிபி போனஸ் டேட்டாவும் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இதை நாம் ஜியோவுடன் ஒப்பிடுகையில், ஜியோ 6ஜிபி போனஸ் டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. விஐ இன் ரூ. 501 திட்டத்தால் வழங்கப்படும் மொத்த தரவு 100 ஜிபி என்பது குறிப்பிடத்தக்கது. வோடபோன் ஐடியா பயனர்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல் ஒரு வருடத்திற்கு ரூ. 499 மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் மட்டும் சந்தா வழங்குகிறது.

ஜியோவையே மிஞ்சும் Vi இன் ரூ. 249 திட்டம்.. அதிக டேட்டாவுக்கு 'இந்த' அபார திட்டம் தான் ரைட் சாய்ஸ்..ஜியோவையே மிஞ்சும் Vi இன் ரூ. 249 திட்டம்.. அதிக டேட்டாவுக்கு 'இந்த' அபார திட்டம் தான் ரைட் சாய்ஸ்..

ஜியோவை விட Vi சிறந்தது.. புது Vi சிம் வாங்கலாமோ..

ஜியோவை விட Vi சிறந்தது.. புது Vi சிம் வாங்கலாமோ..

ரிலையன்ஸ் ஜியோவின் சலுகையை விட இந்த திட்டம் சிறப்பாக இருப்பதற்கான காரணம் கூடுதல் போனஸ் தரவு மட்டுமல்ல. இது வார இறுதியில் டேட்டா ரோல்ஓவர் நன்மையை வழங்குகிறது. இத்துடன் இரவு நேரம் முழுதும் பயனர்களுக்கு இலவச டேட்டா நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது. வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் பல டேட்டா அனுபவங்களை இவை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் திட்டமும் நன்றாக உள்ளது, ஆனால் வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்திற்கு முன்னால், ஜியோவின் திட்டம் கொஞ்சம் நிறமற்றதாக தெரிகிறது. Vi இன் நன்மைகள் ஜியோவை விட அதிகமாகி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Offers Better Benefits Than Reliance Jio For Just Rs 500 Plan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X