அடேங்கப்பா ரூ.600-க்கு கீழ் இப்படியொரு Jio திட்டமா? எக்கச்சக்க நன்மைகள்.!

|

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து அட்டகாசமான சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

 ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

அதேபோல் இந்நிறுவனம் ரூ.600-க்கு கீழ் அதிகமான நன்மைகளை தரும் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. கண்டிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். இப்போது அந்த திட்டத்தைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ரூ.99 முதல் ரூ.200 விலைக்குள் பட்ஜெட் பிரண்ட்லி திட்டங்கள்.. பெஸ்ட் மலிவு விலை Airtel திட்டங்கள் இதோ..ரூ.99 முதல் ரூ.200 விலைக்குள் பட்ஜெட் பிரண்ட்லி திட்டங்கள்.. பெஸ்ட் மலிவு விலை Airtel திட்டங்கள் இதோ..

ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டம்

அதாவது ஜியோ நிறுவனம் ரூ.583 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் சூப்பரான நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஜியோவின் ரூ.583 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56
நாட்கள் ஆகும்.

ஸ்டைலா., கெத்தா ஒரு ஸ்மார்ட்போன்- அறிமுகமானது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி., 50 எம்பி கேமரா உட்பட நான்கு கேமராக்கள்!ஸ்டைலா., கெத்தா ஒரு ஸ்மார்ட்போன்- அறிமுகமானது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி., 50 எம்பி கேமரா உட்பட நான்கு கேமராக்கள்!

ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

ஜியோ ரூ.583 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 84ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர கூடுதல் நன்மையும் இந்த திட்டத்தில் உள்ளது. அதாவது 90 நாட்களுக்கு ரூ.149 மதிப்புள்ள Disney+ Hotstar மொபைல் சந்தா கிடைக்கும். பின்பு ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. கண்டிப்பாக இந்ததிட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

மேலும் ஜியோ நிறுவனம் அற்புதமான நன்மைகள் வழங்கும் திட்டங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..

ஜியோ ரூ.2999 திட்டம்

ஜியோ ரூ.2999 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் Jio Rs 2999 prepaid திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!

 ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தின் கூடுதல் நன்மைகள்

ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தின் கூடுதல் நன்மைகள்

ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 75ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு Ajio, Netmeds, Ixigo, Reliance Digital மற்றும் Jio Saavn Pro ஆகியவற்றின் கூப்பன்கள் கிடைக்கும்.

இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..

ஜியோவின் ரூ.750  திட்டம்

ஜியோவின் ரூ.750 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.750 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது ரூ.749-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. குறிப்பாக ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..

ஜியோ ரூ.533 திட்டம்

ஜியோ ரூ.533 திட்டம்

ஜியோவின் ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி,ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்றஅட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Prepaid Plan Offers 84GB Data Under Rs.600: Full Details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X