Jio பெஸ்ட் ரீசார்ஜ்: ரூ.149 விலை முதல் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்.. மலிவு விலையில் போதுமானது..

|

இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, அதன் 1ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை ரூ. 149 முதல் வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஜியோவிடம் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில், அதிக டேட்டாவைத் தேடாதவர்களுக்கு இந்த திட்டம் மலிவு விலையில் சிறந்தது. இத்தகைய திட்டங்களின் மூலம், பயனர்கள் செல்லுபடியாகும் தன்மை, கெளரவமான அளவு டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை எந்த கவலையும் இல்லாமல் வசதியாகப் பயன்படுத்தலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 ப்ரீபெய்ட் திட்டம் 1ஜிபி தினசரி டேட்டா நன்மையுடன்

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 ப்ரீபெய்ட் திட்டம் 1ஜிபி தினசரி டேட்டா நன்மையுடன்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் தினசரி 1ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம். ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தை 20 நாட்கள் குறுகிய செல்லுபடியுடன் வழங்குகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் 20 ஜிபி மொத்த டேட்டா (ஒவ்வொரு நாளும் 1 ஜிபி), வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் அனைத்து ஜியோ பயன்பாடுகளுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது, நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) தரவு நுகர்வுக்குப் பிறகு, இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் 1ஜிபி தினசரி டேட்டாவுடன்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் 1ஜிபி தினசரி டேட்டாவுடன்

ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தை 24 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையுடன் அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் மீதமுள்ள பலன்கள் ரூ.149 திட்டத்திற்கு முற்றிலும் ஒத்ததாக உள்ளது. இங்குப் பயனர்கள் தினசரி 1ஜிபி டேட்டா , வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் அனைத்து ஜியோ ஆப்ஸுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை இந்த திட்டம் வழங்குகிறது. இதில் உள்ள ஒரே வேறுபாடு, முந்தைய திட்டத்தை விட இது 4 நாட்கள் அதிகமான செல்லுபடியுடன் வருகிறது.

உங்கள் வீட்டிற்கு கேமராவுடன் பாதுகாப்பு மாதம் ரூ.99 மட்டுமே.. ஏர்டெல் அறிமுகம் செய்த Airtel Xsafe சேவை..உங்கள் வீட்டிற்கு கேமராவுடன் பாதுகாப்பு மாதம் ரூ.99 மட்டுமே.. ஏர்டெல் அறிமுகம் செய்த Airtel Xsafe சேவை..

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் 1ஜிபி தினசரி டேட்டாவுடன்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் 1ஜிபி தினசரி டேட்டாவுடன்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தை 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி கிடைக்கும் தினசரி டேட்டா நன்மையுடன் வருகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவையும் பெறுகிறார்கள்.

1ஜிபி தினசரி டேட்டாவுடன் நீண்ட செல்லுபடியாகும் திட்டங்கள் இல்லையா?

1ஜிபி தினசரி டேட்டாவுடன் நீண்ட செல்லுபடியாகும் திட்டங்கள் இல்லையா?

ரூ.209 மற்றும் ரூ.179 ஆகிய இரண்டு திட்டங்களிலும், FUP டேட்டாவைப் பயன்படுத்தியவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைகிறது. ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து நீங்கள் வாங்கக்கூடிய மூன்று 1ஜிபி தினசரி டேட்டா பேக்குகள் இவை தான். துரதிருஷ்டவசமாக, 1ஜிபி தினசரி டேட்டாவுடன் வரும் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து பயனர்கள் நீண்ட செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தைப் பெறுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது. 1ஜிபி தினசரி டேட்டா திட்டத்தை வழங்கும் ஒரே ஆபரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

Airtel, Jio, Vi இல் ரூ.200க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. பட்ஜெட் பிரண்ட்லி பாஸ்..Airtel, Jio, Vi இல் ரூ.200க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. பட்ஜெட் பிரண்ட்லி பாஸ்..

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் வழங்கும் மலிவு விலை திட்டங்கள்

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் வழங்கும் மலிவு விலை திட்டங்கள்

ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவையும் தங்கள் பயனர்களுக்கு இதுபோன்ற ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. ஜியோ தவிர மற்ற நிறுவனத்திடம் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் பக்கத்துடன் இணைந்திருங்கள். ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் விலை மலிவான திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து, பதிவை இறுதி வரை தொடர்ந்து படித்துப் பயன்பெறுங்கள்.

Best Mobiles in India

English summary
Reliance Jio 1GB Daily Data Plans Start At Rs 149 With Unlimited Voice Call Benefits : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X