வைரக்கண்ணாடிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் விரைவில்.!

வைரக் கண்ணாடிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுகுறித்து ஓர் அலசல் .

By Ilamparidi
|

இன்றைய காலக்கட்டத்தில் நமது வாழ்வின் அத்துணை அத்தியாவசிய செயல்களுமே ஸ்மார்ட்போன்கள்,இணையம்,கணினி ஆகியவற்றை முன்னிறுத்தியே நிகழ்கின்றன.அத்தகைய அளவினுக்கு நமது வாழ்வின் ஓர் இன்றியமையாத பொருளாகவும்,நமது ஆறாவது விரலாகவுமே ஆகிப்போய்விட்டன ஸ்மார்ட்போன்கள்.

முக்கியமாக ஸ்மார்ட்போன்கள் தகவல் தொடர்பு சாதனம் என்கிற நிலை மாறி இப்போது நமது வாழ்வினூடே இரண்டறக் கலந்து தவிர்க்க இயலாத பொருளாக உள்ளன.

அத்தகைய ஸ்மார்ட்போன்கள் வைரக்கண்ணாடிகளைக் கொண்டு வெளிவரக்கூடிய வகையில் தயாரிக்கப்படுமெனத் தெரிகிறது.
அதுகுறித்த தகவல் கீழே..

ஸ்மார்ட்போன்கள்:

ஸ்மார்ட்போன்கள்:

நமது வாழ்வினுடைய தவிர்க்க இயலாத பொருட்களாக ஸ்மார்ட்போன்கள் ஆகிப்போனதற்கான காரணம் தொலைத் தொடர்பு கருவி என்பதனைத் தவிர்த்து நொடிப்பொழுதில் நமக்கு தேவையான செயல்களை செயல்படுத்தித் தருகிற கருவிகளாக ஆகிப்போனதுதான்,இன்றைய காலகட்டத்தில் செய்திகளைப் பறிமாறிக்கொள்ள,பணப்பரிவர்த்தனை,மொபைல் பாங்கிங் உள்ளிட்ட அத்துணை செயல்களிலுமே இத்தகைய ஸ்மார்ட்போன்களின் துணை கொண்டே நிகழ்கின்றன-நிகழ்த்தமுடிகிறது.

தேவை:

தேவை:

மேற்குறிப்பிட பயன்பாடுகள் அத்தனைக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுவதனால் இத்தகைய ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகப்படுகிறது.இதற்காக பல விதமான ஸ்மார்ட்போன்களை ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன.

அம்சங்கள்:

அம்சங்கள்:

சந்தையில் பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஈடாகவும் அதேசமயம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பல அம்சங்களைப் புகுத்தி புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட வேண்டிய தேவை ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனசங்களுக்கு இருப்பதனால் அவை அத்தகைய முயற்சியை மேற்கொள்ளவே செய்கின்றன.அத்தகைய முயற்சியின் வெளிப்பாடே செல்ஃபீ கேமரா உள்ளிட்டவை.

வைரக்கண்ணாடி டிஸ்பிளே:

வைரக்கண்ணாடி டிஸ்பிளே:

மேற்குறிப்பிட்ட வகையில் தனது தயாரிப்புகளில் வாடிக்கையாளர்களுக்காக புதிய அம்சங்களை புகுத்தும்,புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் முயற்சியாகவே வைரக்கண்ணாடிகளுடைய டிஸ்பிளேவினை உடைய புதிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்கவுள்ளது எச்டிசி.

ஏற்கனவே மாணிக்கம்:

ஏற்கனவே மாணிக்கம்:

இத்தகைய ஆச்சரியப்படுத்தும் வகையிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ள எச்டிசி நிறுவனம் ஏற்கனவே 2014ஆம் ஆண்டில் மாணிக்க கல் கொண்டு தயாரித்த டிஸ்பிளேவுடைய எச்டிசி யு அல்ட்ரா 128 என்கிற மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

எதற்காக வைர டிஸ்பிளே:

எதற்காக வைர டிஸ்பிளே:

எதற்காக வைரத்தினைக்கொண்டு ஸ்மார்ட்போன்களுக்கான டிஸ்பிளேக்களை தயாரிக்கிற முயற்சியில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஈடுபடுகிறதெனில் இப்போது நாம் பயன்படுத்துகிற ஸ்மார்ட்போன்கள் தவறுதலாக கை தவறி விழுந்தாலோ அல்லது ஏதேனும் விபத்தின் போதே எளிதில் உடைந்து போகின்றன.ஆனால் வைரைத்தினைக்கொண்டு தயாரிக்கப்படுகிற டிஸ்பிளேக்கள் எளிதில் உடையாது.
இயல்பிலேயே வைரம் உறுதியான பொருளாகும்.மேலும் இப்போது நாம் பயன்படுத்துகிற கண்ணாடிகளை விட 10 மடங்கு கடினமானதாகவும்,6 மடங்கு உறுதியானதாகவும் இருக்கும்.

நீர் புகாத:

நீர் புகாத:

மேலும் வைரத்தின் மூலக்கூறுகள் வழியாக நீர் உட்ருவுதல் ஏற்படாது.இது நீர் உள்ளிட்டவற்றில் ஸ்மார்ட்போன்கள் தவறுதலாக விழுந்தாலும் எத்தகைய பிரச்சனையும் ஏற்படாது.மேலும் வைரம் இதர பொருட்களை விட 800 மடங்கு எலக்ட்ரானிக் பொருட்களை குளிர்ந்த நிலையில் வைத்திருக்க உதவும்.

ஒளிதனை வெளிக்காட்ட:

ஒளிதனை வெளிக்காட்ட:

இது சிறந்த வகையில் ஒளிகளை வெளிக்காட்டுவதால் பயனாளர்களுக்கு பயன்படுத்துவதற்கு பிடித்தமான ஒன்றாகவும் இருக்க கூடும்.மேலும் மாணிக்கத்தினை கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் அதிக எடை உள்ளதாகவும்,உற்பத்திசெய்திட அதிக அளவிலான செலவீனங்கள் ஏற்படுவதாகவும் ஆனால் வைரத்தினைக்கொண்டு ஸ்மார்ட்போன்களுக்கான டிஸ்பிளேக்களை தயாரிப்பதால் தயாரிப்புச் செலவு மற்றும் மாணிக்கத்தினை விட மெல்லியதொன்றாகவும் இது இருந்திடும்.

அதிக விலையுள்ளதாக:

அதிக விலையுள்ளதாக:

நாம் இப்போது பயன்படுத்துகிற ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளே கண்ணாடிகளை விட இது உறுதியானதாகவும்,வலுவானதாகவும் இருக்கிற காரணத்தால் கொரில்லாகிளாஸ் உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படுகிற ஸ்மார்ட்போன்களை விட விலை அதிகமானதொன்றாக இருந்திடும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்கள் லேப்டாப்பை ஒரு வைஃபை ஹாட்ஸ்பாட் ஆக மாற்றுவது எப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
Smartphones with diamond glass displays coming soon: All you need to know.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X