புதிய பிளாக்பெர்ரி போன்: நடிகை கேத்ரீனா கைப் அறிமுகம் செய்தார்

By Super
|
புதிய பிளாக்பெர்ரி போன்: நடிகை கேத்ரீனா கைப் அறிமுகம் செய்தார்

புதிய கர்வ்-9220 பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனை பாலிவுட் நடிகை கேத்ரீனா கைப் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதிக ஆற்றல் கொண்ட பேட்டரியை இந்த ஸ்மார்ட்போனில் வழங்கி உள்ளது பிளாக்பெர்ரி.

பிளாக்பெர்ரி-7.1 இயங்குதளத்தில் இயங்கும். கியூவர்டி கீப்பேடில் கலக்கும் இந்த ஸ்மார்ட்போன் 2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்கும்.

பிளாக்பெர்ரி மெசன்ஜர் வசதிக்காக பிரத்தியேக பட்டனையும் பிளாக்பெர்ரி கர்வ்-9220 ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும். 2.44 இஞ்ச் திரை வசதியினை கொண்ட இந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் மூலம் பெற முடியும்.

பிளாக்பெர்ரி நிறுவனத்தின் இந்த கர்வ்-9220 ஸ்மார்ட்போனை ரூ.10,990 விலையில் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனை சந்தைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X