டூயல் ரியர் கேமராவுடன் களமிறங்கும் பிளாக்பெரி அத்னா.!
பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் கேமரா பொறுத்தவரை வழக்கமான ரக்டு அமைப்பு கொண்டுள்ளது.
தற்சமயம் பிளாக்பெரி நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் புதிய பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்தம் உள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக தொடுதிரை வசதி மற்றும் க்வெர்டி கீபேட் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக்பெரி நிறுவனம் அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
தற்சமயம் பிளாக்பெரி சார்பாக வெளியிடப்பட்ட அத்னா ஸ்மார்ட்போன் புகைப்படத்தில் வழக்கமான க்வார்டி கீபேட் வடிவமைப்பு மற்றும் டூயல் ரியர் கேமரா போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது, மேலும் சாம்சங் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் பொதுவாக 18:9 என்ற திரைவிகிதம் மற்றம் 1080பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
அத்னா ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த அத்னா ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் கேமரா பொறுத்தவரை வழக்கமான ரக்டு அமைப்பு கொண்டுள்ளது, அதன்பின்பு இதன் டூயல் கேமரா அமைப்பு கிடைமட்டமாக உள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக இருக்கும்.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம், சென்சார் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவிரங்கள் வெளிவரவில்லை.


Click it and Unblock the Notifications