முரட்டுத்தனமான அம்சங்கள்; நியாயமான விலை; மிரண்டுப்போன நோக்கியா, ஒன்ப்ளஸ்.!

இந்தியர்களின் கனவு போன்கள் என்கிற நோக்கியா மற்றும் ஆப்பிள் ஐபோனுக்கு அடுத்தபடியாக இருக்கும் ஒரு மொபைல் தான் பிளாக்பெர்ரி.

|

இந்தியர்களின் கனவு போன்கள் என்கிற நோக்கியா மற்றும் ஆப்பிள் ஐபோனுக்கு அடுத்தபடியாக இருக்கும் ஒரு மொபைல் தான் பிளாக்பெர்ரி. கடுமையான போட்டி காரணமாக, மிக நீளமான இடைவெளியை எடுத்துக்கொண்ட பிளாக்பெர்ரி நிறுவனம் கடந்த ஆண்டு, அதன் பிளாக்பெர்ரி KEYONE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

முரட்டுத்தனமான அம்சங்கள்; நியாயமான விலை; மிரண்டுப்போன நோக்கியா.!

போதுமான அளவு வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் வன்பொருள் மேம்பாடுகளுடன் வெளியான அந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் எதிர்பார்த்த அளவிலான வெற்றியையும் பெற்றது. அதை மென்மேலும் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பின் கீழ் தற்போது, பிளாக்பெர்ரி KEY2 ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை நம்பி வாங்கலாமா.? வேண்டாமா.?

இதை நம்பி வாங்கலாமா.? வேண்டாமா.?

வெளியாகியுள்ள KEY2 ஸ்மார்ட்போன் ஆனது KEYONE ஸ்மார்ட்போனுடன் ஒற்றுப்போகிறதா.? இல்லை வேறுபடுகிறதா.? இதன் அம்சங்கள் என்ன.? விலை நிர்ணயம் என்ன.? இதை நம்பி வாங்கலாமா.? வேண்டாமா.? போன்ற பல கேள்விகளுக்கான விடையை ஆராய்வோம் வாருங்கள். மேலோட்டமாக பார்த்தல் பிளாக்பெர்ரி KEY2 ஆனது KEYONE போன்றே தான் உள்ளது. ஆனால்...

இனிமே எளிமையான கிளிக்குகளை வழங்கும்.!

இனிமே எளிமையான கிளிக்குகளை வழங்கும்.!

உற்றுநோக்கினால் KEY2 ஸ்மார்ட்போனின் கீபேட் ஆனது KEYONE-ன் கீபேட்டை விட 20% பெரியதாகும். பிளாக்பெர்ரி பயனர்களை பொறுத்தவரை இதுவொரு சிறப்பான மாற்றமாகும். மேலும், பிளாக்பெர்ரி நிறுவனத்தின் படி, இந்த ஸ்மார்ட்போனை கீபேட் ஆனது கடினமாக இருக்காது, எளிமையான கிளிக்குகளை வழங்கும். ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை மிகவும் அழகான மற்றும் கண்ணியமான அம்சங்களையே கொண்டுள்ளது.

பிளாக்பெர்ரி KEY2 அம்சங்கள்.!

பிளாக்பெர்ரி KEY2 அம்சங்கள்.!

KEY2 ஸ்மார்ட்போன் அதே 4.5 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கிறது. அதாவது 3: 2 என்கிற திரை விகிதம் மற்றும் 1080 x 1620 என்கிற பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டுள்ளது. க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 மொபைல் பிளாட்பார்ம் உடனான 6 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு வெவ்வேறு சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கும் - 64 ஜிபி மற்றும் 128 ஜிபி. இரண்டு வகைகளுமே 6 ஜிபி ரேம் கொண்டு இயங்கும். உடன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2 டிபி வரை சேமிப்பு விரிவாக்க ஆதரவையும் வழங்கும்.

முதல் முறையாக டூயல் கேமரா.!

முதல் முறையாக டூயல் கேமரா.!

பிளாக்பெர்ரி, முதல் முறையாக, அதன் ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பை பயன்படுத்தப்படுகிறது. KEY2 ஸ்மார்ட்போனின் பின்னால் இரண்டு 12 எம்பி சென்சார்கள் உள்ளது. முதன்மை 12 எம்பி சென்சார் ஆனது ஒரு எப் / 1.8 துளை, லேசர் ஆட்டோஃபோகஸ் மற்றும் PDAF போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது சென்சார் ஆனது எப் / 2.6 துளையுடன் கூடிய ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ் ஆக செயல்படுகிறது.

3500mAh பேட்டரி.!

3500mAh பேட்டரி.!

இதன் பின்புற கேமராவானது 4கே வீடியோக்களை 60fps என்கிற வேகத்திலும், 1080p வீடியோக்களை 30fps என்கிற வேகத்திலும் படப்பிடிப்பு செய்ய உதவும். முன்பக்கத்தை பொறுத்தவரை ஒரு 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரி அளவை பொறுத்தவரை ஒரு 3500mAh மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இது பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ் பாரில் கைரேகை ஸ்கேனர்.!

ஸ்பேஸ் பாரில் கைரேகை ஸ்கேனர்.!

இந்த ஸ்மார்ட்போன் நீர் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கவில்லை. மற்றும் இதன் கைரேகை ஸ்கேனர் இன்னமும் ஸ்பேஸ் பாரில் தான் வைக்கப்படுகிறது. எப்போதும் போல், பிளாக்பெர்ரி அதன் பாதுகாப்பு அம்சங்களையும் KEY2-வில் சேர்த்துள்ளது. DTEK பாதுகாப்பு தொகுப்பு மற்றும் FIPS 140-2 புல் டிஸ்க் என்க்ரிப்ஷன் போன்றவைகளை கொண்டுள்ளது. உடன் 4ஜி LTE, வோல்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் GLONASS போன்ற இணைப்பு விருப்பங்களையும் கொண்டுள்ளது. அளவீட்டில் 8.5 மிமீ தடிமன் மற்றும் 168 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

பிளாக்பெர்ரி KEY2 விலை.!

பிளாக்பெர்ரி KEY2 விலை.!

பிளாக்பெர்ரி KEY2 ஆனது 649 அமெரிக்க டாலர்கள் என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. அதாவது இந்திய விலைப்படி சுமார் ரூ.43,200/- ஆகும். இருந்தாலும் கூட இது KEYONE ஸ்மார்ட்போனை (ஆகஸ்ட் 2017-ல் வெளியானது) போலவே ரூ.39,999/-ஐ சுற்றிய ஒரு விலையில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பிளாக்பெர்ரி நிறுவனமானது இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகெனவே இரண்டு ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக வதந்திகள் கூறுகின்றன. அதாவது பிளாக்பெர்ரி கோஸ்ட் மற்றும் கோஸ்ட் புரோ.!

Best Mobiles in India

English summary
BlackBerry KEY2 Announced With Android Oreo and Snapdragon 660. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X