6ஜிபி ரேம் & ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடன் அடுத்த பிளாக்பெர்ரி.!

இது பிளாக்பெர்ரி கீடூ (KEYtwo) என்று அழைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

|

பிளாக்பெர்ரி நிறுவனத்தின் சாதனமொன்று தரப்படுத்தல் வலைத்தளமான கீக்பெஞ்ச்சில் காணப்பட்டது. வெளியான பட்டியலின் படி, வரவிருக்கும் இந்த பிளாக்பெர்ரி சாதனத்தின் மாடல் எண் க்வால்காம் பிபிஎஃப்100-1 எனக் கூறப்படுகிறது.

6ஜிபி ரேம் &  ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடன் அடுத்த பிளாக்பெர்ரி.!

இந்த பிபிஎஃப் 100-1 ஆனது, இந்த ஆண்டு தொடங்கப்பட்ட பிளாக்பெர்ரி கீஒன் மாடலின் அப்டேட் கருவியாக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, பட்டியலிலிடப்பட்டுள்ள இக்கருவியின் வெளியீடு விரைவில் நிகழலாம் என்பதால் தான் இது இணையத்தளத்தில் உலா வருவதாக தெரிவிக்கிறது.

பிளாக்பெர்ரி கீடூ

பிளாக்பெர்ரி கீடூ

பிளாக்பெர்ரி கீடூ (KEYtwo) என்று அழைக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் இந்த சாதனம் தரப்பட்டியலின், சிங்கிள் கோர் சோதனையில் 1532 மதிப்பெண்களும் மற்றும் மல்டி கோர் சோதனையில் 4185 மதிப்பெண்களும் பெற்றுள்ளது.

6 ஜிபி ரேம்

6 ஜிபி ரேம்

அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த தொலைபேசி ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. உடன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் உடனான 6 ஜிபி ரேம் உடன் இணைந்து செயல்படலாம். எதிர்பார்க்கும் வெளியீட்டு தேதி அல்லது இதற்கு மேலான விவரங்கள் ஏதுமில்லை.

ரூ.39,990/- என்ற விலை நிர்ணயம்

ரூ.39,990/- என்ற விலை நிர்ணயம்

கடந்த ஆகஸ்ட் மாதம், பிளாக்பெர்ரி நிறுவனம் இந்தியாவில் கீஒன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதன் லிமிடெட் எடிஷன் (பிளாக்) ஆனது ரூ.39,990/- என்ற விலை நிர்ணயம் பெற்றது. இக்கருவி முதலில் கடந்த ஆண்டு நிகழ்த்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீஒன் ஸ்மார்ட்போன்

கீஒன் ஸ்மார்ட்போன்

பிளாக்பெர்ரி, கீஒன் ஆனது, ஆப்டீமஸ் மற்றும் பிளாக்பெர்ரி நிறுவனங்களுக்கு இடையே நிகழ்த்த "கையொப்பமிடப்பட்ட பிராண்ட் ஒத்துழைபின்" விளைவாக உருவானதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கீஒன் ஸ்மார்ட்போன் ஆனது பிளாக்பெர்ரி நிறுவனத்தின் ஐகானிக் நான்கு வரிசை விசைப்பலகையைத் தக்கவைத்துக்கொண்டது. மேலும் நிறுவனம் வழங்கும் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

டச்-எனேபிள் பிஸிக்கல் கீபோர்ட்

டச்-எனேபிள் பிஸிக்கல் கீபோர்ட்

இந்த தொலைபேசி 1620 x 1080 என்ற தீர்மானத்திலான 4.5 இன்ச் ஐபிஎஸ்-கிரேட் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 3: 2 விஎன்கிற திரை விகிதத்தை வழங்குகிறது.உடன் டச்-எனேபிள் பிஸிக்கல் கீபோர்ட் ஒன்றும் அதன் பின் பலகத்தில் உள்ளது மற்றும் அதன் ஸ்பேஸ் பாரில் கட்டப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஒன்றும் கொண்டுள்ளது.

2டிபி

2டிபி

பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் செயலி உடனான 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் அட்ரெனோ 506 ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு (3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு), மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடியது.

Best Mobiles in India

English summary
Alleged BlackBerry KeyONE successor surfaces on Geekbench; to come with Snapdragon 660 and 6 GB of RAM. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X