இந்தியாவில் பிளாக்பெர்ரி கோஸ்ட் ப்ரோ: நாம் காண்பது நிஜமா.? இல்லை கனவா.?

மேலும் இந்த புதிய கோஸ்ட் ப்ரோ ஸ்மார்ட்போனில் பிளாக்பெர்ரி நிறுவனத்தின் மிகப் பிரபலமான க்வார்ட்டி கீபேட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

|

பிரபல மொபைல் உற்பத்தியாளரான பிளாக்பெர்ரி இந்த ஆண்டு மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதில் பிளாக்பெர்ரி கோஸ்ட் ப்ரோ எனப்படும் ஸ்மார்ட்போன் ஆனது பெரும்பாலானோர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்போது அக்கருவி சார்ந்த லீக்ஸ் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதில் இருந்து கோஸ்ட் ப்ரோ ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சார்ந்த விவரங்களை பெறமுடிகிறது.

இந்தியாவில் பிளாக்பெர்ரி கோஸ்ட் ப்ரோ: நாம் காண்பது நிஜமா? இல்லை கனவா?

முதல் பார்வையிலேயே, கூறப்படும் கோஸ்ட் ப்ரோ ஆனது (ஒரிஜினல் ப்ளாக்பெர்ரி கோஸ்ட் ஸ்மார்ட்போனில் காணப்பட்டதை போலவே) ஒரு 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளதை காண முடிகிறது. மேலும் இந்த புதிய கோஸ்ட் ப்ரோ ஸ்மார்ட்போனில் பிளாக்பெர்ரி நிறுவனத்தின் மிகப் பிரபலமான க்வார்ட்டி கீபேட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மற்ற பகுதிகளில், ஆப்டிமீஸ் (பிளாக்பெர்ரி பிராண்ட் கருவிகளின் மீதான உரிமம் பெற்றுள்ள நிறுவனம்) மூலமாக அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே, பிளாக்பெர்ரி கோஸ்ட் ப்ரோ மற்றும் பிளாக்பெர்ரி கோஸ்ட் ஸ்மார்ட்போன்கள் இந்திய விற்பனையை சந்திக்கும். கோஸ்ட் ப்ரோ ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது மற்றும் வளைந்த விளிம்புகளுக்கு மாறாக கூர்மையான முனைகளை கொண்டுள்ளது.

வெளியான லீக்ஸ் புகைப்படமானது உண்மையானால், ஆப்டிமீஸ் நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் முதல் பிளாக்பெர்ரி (தொடர்) கருவியாக இந்த கோஸ்ட் ஸ்மார்ட்போன்கள் திகழும். இதற்கு முன்னர் டிசிஎல் மற்றும் பிபி மெஹ்ரா புட்ஹி (BB Merah Putih) ஆகியவைகள் பிளாக்பெர்ரி கருவிகளை வெளியிட்டன.

மேலும் பிளாக்பெர்ரி கோஸ்ட் மற்றும் கோஸ்ட் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆனது, மற்ற பிளாக்பெர்ரி சாதனங்களில் இடம்பெறாத தனியுரிமை பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

இனி நாம் அறிந்துகொள்ள வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் - மிகவும் பழமையான பிளாக்பெர்ரி ஓஎஸ் இயங்குதளத்தில் எப்படி சைகை-செயல்படுத்தப்பட்ட நேவிகேஷன் போன்ற அம்சங்களை கொண்டுவரும் என்பது தான் அது. அதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
BlackBerry will soon launch the bezel-less Ghost Pro in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X