களமிறங்கியது ப்ளாக்பெர்ரி எவோல்வ் மற்றும் எவோல்வ் எக்ஸ் விலை எவ்வளவு தெரியுமா?
கனடா நிறுவனமான ப்ளாக்பெர்ரி நிறுவனம் மொபைல் மற்றும் டேப் தயாரிப்பில் தனகுக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது.
கனடா நிறுவனமான ப்ளாக்பெர்ரி நிறுவனம் மொபைல் மற்றும் டேப் தயாரிப்பில் தனகுக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. ப்ளாக்பெர்ரி நிறுவனம் தனது மாடல் போன்களில் கீபேட் சேவையைத் தொடர்ந்து அதன் ரசிகர்களுக்கு வழங்கிக்கொண்டுள்ளது. ப்ளாக்பெர்ரி நிறுவனம் தன்னுடைய புதுரக ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் இறக்குமதி செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
இப்பொழுது ப்ளாக்பெர்ரி நிறுவனம் தனது அடுத்தகட்ட முயற்சியை இந்திய சந்தை நோக்கி எடுத்துவைத்துள்ளது. ப்ளாக்பெர்ரி நிறுவனம் தனது அடுத்த புது மாடல் ஸ்மார்ட்போன்களை எப்பொழுது வெளியிடும் என்று எதிர் பார்த்து காத்திருந்த தனது ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தியை வழங்கியிருக்கிறது.

ப்ளாக்பெர்ரி கீ2
மிகச் சமீபத்தில் ப்ளாக்பெர்ரி நிறுவனம் தன்னுடைய ப்ளாக்பெர்ரி கீ2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது, அதன் விலை இந்திய விளையின்படி சுமார் ரூ.42,990 ஆகும். இதனைத் தொடர்ந்து தனது ஸ்மார்ட்போன் வரிசையில் ப்ளாக்பெர்ரி எவால்வ்(BlackBerry Evolve) மற்றும் ப்ளாக்பெர்ரி எவால்வ் எக்ஸ்( BlackBerry Evolve X) என்ற இரண்டு புதுரக ஸ்மார்ட்போன்களை நேற்று அறிமுகம் செய்தது ப்ளாக்பெர்ரி நிறுவனம்.

ப்ளாக்பெர்ரி எவால்வ் விவரக்குறிப்பு
- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு
- 5.99 இன்ச் 1080 x 2160 பிக்சல் எப்எச்டி + எல்டிபிஎஸ் டிஸ்பிலே
- ஸ்னாப்டிராகன் 660 SoC அட்ரீனோ 512 ஜிபியு
- 4000 எம்எஎச் பேட்டரி
- குயிக் சார்ஜ் 3.1 ப்ளாக்பெர்ரி
- 16எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 12 + 13எம்பி டூயல் கேமரா
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

ப்ளாக்பெர்ரி எவால்வ் விவரக்குறிப்பு
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு
- 5.99 இன்ச் 1080 x 2160 பிக்சல் எப்எச்டி + எல்டிபிஎஸ் டிஸ்பிலே
- ஸ்னாப்டிராகன் 450 SoC அட்ரீனோ 506 ஜிபியு
- 16எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 12 + 13எம்பி டூயல் கேமரா
- 4000 எம்எஎச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- குயிக் சார்ஜ் 3.1 ப்ளாக்பெர்ரி
இத்துடன் யூஎஸ்பி 2.0 டைப் சி போர்ட், வைஃபை, ப்ளூடூத் 5, 4ஜி வோல்ட்டி மற்றும் ஜிபிஎஸ் சேவைகளுடன் வருகிறது.

ப்ளாக்பெர்ரி எவால்வ் மற்றும் எவோல்வ் எக்ஸ்
முந்தைய ப்ளாக்பெர்ரி கீ2 ஸ்மார்ட்போன்களைப் போல் ப்ளாக்பெர்ரி எவால்வ் மற்றும் எவோல்வ் எக்ஸ் இல் கீபோர்ட்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எவால்வ் மற்றும் எவோல்வ் எக்ஸ் இந்த மாதம் இறுதியில் விற்பனைக்கு வருமென்று ப்ளாக்பெர்ரி நிறுவனம் உறுதியாகக் கூறியுள்ளது. " Secure Your Date " உங்கள் தேதியை குறித்துக்கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்துள்ளது ப்ளாக்பெர்ரி நிறுவனம்


Click it and Unblock the Notifications