பிளாக்பெரி & விண்டோஸ் கருவிகளுக்கு வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தம்.!

ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் பழைய பதிப்புகளுக்கு 2020-ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்படும் என இணையதளத்தில்தகவல்கள் வெளிவந்துள்ளது.

By Prakash
|

இந்திய முழுவதும் வாட்ஸ்ஆப் சேவை அதிகளவு பயன்படுகிறது, இந்தியாவில் சில ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வாட்ஸ்ஆப் சேவை நிறுத்த வாட்ஸ்ஆப் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. மேலும் வாட்ஸ்ஆப் சேவையில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய என்க்ரிப்ஷன் சேவை வழங்கப்பட்டது முதல் இந்த பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது என இணையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தம்:

வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தம்:

ப்ளாக்பெரி 10, ப்ளாக்பெரி ஒ.எஸ்., விண்டோஸ் 8.0, போன்ற இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் சாதனங்களில் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்பட இருக்கிறது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

2018:

2018:

வரும் 2018-ம் ஆண்டு முதல் நாள் ப்ளாக்பெரி மற்றும் விண்டோஸ் கருவிகளுக்கு வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020:

2020:

ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் பழைய பதிப்புகளுக்கு 2020-ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்படும் என இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது, மேலும் வாட்ஸ்ஆப் சேவைப் பொறுத்தவரை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பிக்சர் மோட்:

பிக்சர் மோட்:

தற்சமயம் பிரைவேட் ரிப்ளை அம்சம் மற்றும் பிக்சர்-இன்-பிக்சர் மோட் வாட்ஸ்ஆப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு புதிய அப்டேட் உடன் செயல்படுகிறது வாட்ஸ்ஆப் சேவை.

விளம்பரம்:

விளம்பரம்:

மெசேஜிங் தளங்களில் ஒன்றான வாட்ஸ்ஆப், ஒரு காலத்தில் விளம்பரங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி வந்தது. ஆனால் வாட்ஸ்அப்பை, பேஸ்புக் நிறுவனம் சொந்தமாக வாங்கிய பிறகு, அந்தப் பிரபல மெசேஜிங் தளத்தின் மூலம் வருமானத்தை ஈட்டும் முயற்சிகளில் பேஸ்புக்
நிறுவனம் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.

வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் :

வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் :

வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி தனிநபர்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் பயன்படுத்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
WhatsApp will stop working on BlackBerry OS Windows Phone 8 0 after Dec 31; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X