விரைவில்: 4.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் பிளாக்பெரி அத்னா.!
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அத்னா ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பிளாக்பெரி நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
பிளாக்பெரி அத்னா ஸ்மாரட்போனின் முக்கிய அம்சங்கள் பொறுத்தவரை சிறிய ரக டிஸ்பிளே, க்வெட்டி கீபேட், டச் ஜெஸ்ட்யூர் மற்றும் கைரேகை சென்சார் போன்றவை இடம்பெற்றுள்ளது, மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பிளாக்பெரி அத்னா:
பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1620x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த அத்னா ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கேம் மற்றும் ஆப் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
டூயல்-சிம், வைபை,ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போனில் 3360எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications