அப்போ அந்த விலை ஆனா இப்போ: விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

|

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் ஏணைய ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. ஸ்மார்ட்போனின் அம்சங்களை ஒப்பிட்டு பார்க்கையில் எதை வாங்கலாம் என்பதில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் குழப்பமே ஏற்படும். எனவே விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

விலை குறைப்பு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

விலை குறைப்பு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

இந்தியாவில் விலை குறைப்பு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதில் சமீபத்திய ஸ்மார்ட்போன்களும் சற்று முந்தைய மாடல் ஸ்மார்ட்போன்களும் அடங்கும். விலை குறைப்பு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஆப்பிள் சாதனங்களும் அடங்கும். ஐபோன் 14 அறிமுகமாக இருக்கும் நிலையில் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12 உள்ளிட்ட சாதனங்களின் விலை குறைக்கப்பட்டது. அதேபோல் Hasselblad கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள ஒன்பிளஸ் 9 5ஜி சாதனத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

பிரபல ஸ்மார்ட்போன்களும் பட்டியலில்

பிரபல ஸ்மார்ட்போன்களும் பட்டியலில்

அதுமட்டுமின்றி ரெட்மி நோட் 10எஸ், ரெட்மி நோட் 10டி 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்32, கேலக்ஸி எம்52, விவோ ஒய்21 மற்றும் விவோ ஒய்15சி போன்ற பிரபலமான ஸ்மார்ட்போன்களுக்கும் விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

OnePlus 9 5G

OnePlus 9 5G

ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.7000 விலைக் குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

 • 6.55 இன்ச் Full HD+ டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்
 • 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
 • 12 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
 • ஆக்ஸிஜன் ஓஎஸ் உடனான ஆண்ட்ராய்டு 11
 • 48 எம்பி + 50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
 • 16 எம்பி செல்பி கேமரா
 • 4500 எம்ஏஎச் பேட்டரி
 • Iphone 13

  Iphone 13

  ஐபோன் 14 அறிமுகமாக இருக்கும் நிலையில் ஐபோன் 13 க்கு ரூ.9,901 விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

  • 6.1 இன்ச் டிஸ்ப்ளே
  • 12 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • 12 எம்பி + 12 எம்பி டூயல் கேமரா
  • 12 எம்பி செல்பி கேமரா
  • ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட்
  • 3227 எம்ஏஎச் பேட்டரி
  • Iphone 12

   Iphone 12

   ஐபோன் 12 சாதனத்தின் விலை ரூ.12,500 வரை குறைக்கப்பட்டிருக்கிறது

   • 6.1 இன்ச் டிஸ்ப்ளே
   • 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
   • ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட்
   • 2851 எம்ஏஎச் பேட்டரி
   • Samsung Galaxy M32

    Samsung Galaxy M32

    சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

    • 6.5 இன்ச் டிஸ்ப்ளே
    • 6 ஜிபி, 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
    • 48 எம்பி + 8 எம்பி + 5 எம்பி + 2 எம்பி குவாட் பிரைமரி கேமரா
    • 13 எம்பி செல்பி கேமரா
    • மீடியாடெக் டைமன்சிட்டி 720 சிப்செட்
    • 5000 எம்ஏஎச் பேட்டரி
    • Redmi Note 10S

     Redmi Note 10S

     ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 விலைக் குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

     • 6 ஜிபி, 8 ஜிபி ரேம், 64 ஜிபி, 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்
     • 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா
     • 13 எம்பி செல்பி கேமரா
     • 6.43 இன்ச் டிஸ்ப்ளே
     • மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட்
     • 5000 எம்ஏஎச் பேட்டரி
     • Redmi Note 11T 5G

      Redmi Note 11T 5G

      ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 விலைக் குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

      • 6.6 இன்ச் டிஸ்ப்ளே
      • 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி, 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
      • 50 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா
      • 16 எம்பி செல்பி கேமரா
      • மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்
      • 5000 எம்ஏஎச் பேட்டரி
      • Samsung Galaxy A53 5G

       Samsung Galaxy A53 5G

       சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

       • 6.52 இன்ச் டிஸ்ப்ளே
       • 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
       • 64 எம்பி + 12 எம்பி + 5 எம்பி + 5 எம்பி குவாட் பிரைமரி கேமரா
       • 32 எம்பி செல்பி கேமரா
       • ஆக்டோ கோர் எக்ஸினோஸ் 1280 சிப்செட்
       • 5000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
List of smartphones with price cuts in India: Oneplus, xiaomi redmi, vivo, Samsung

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X