உலக நாடுகளை 'தெறிக்கவிட்ட' இந்தியா...!

|

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. - சி33, இந்தியாவின் ஏழாவது வழிசெலுத்தல் செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஜி (navigation satellite IRNSS-1G) சுமந்து கொண்டு, நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ( Satish Dhawan Space Centre) இருந்து சரியாக மதியம் 12.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது..!

<strong>எஸ்-400 ஏவுகணையை இந்தியா வாங்க இதுதான் காரணம்: 380 கி.மீ அப்பால் இலக்கை அழிக்கும் நரகாசூரன்.!</strong>எஸ்-400 ஏவுகணையை இந்தியா வாங்க இதுதான் காரணம்: 380 கி.மீ அப்பால் இலக்கை அழிக்கும் நரகாசூரன்.!

வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்த இந்த செயற்கைகோள் ஏவுதல் ஆனது வழக்கமான ஒரு இஸ்ரோ சாதனை மட்டுமில்லாது, ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் சாதனையாகும்..!

 கவுண்ட் டவுன் :

கவுண்ட் டவுன் :

1,425 கிலோ எடையுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஜி செயற்கைக்கோள் வெளியீட்டு கவுண்ட் டவுன் ஆனது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.20-க்கு தொடங்கியது.

ஒருங்கிணைப்பு பணிகள் :

ஒருங்கிணைப்பு பணிகள் :

51.30 மணி நேர கவுண்ட் டவுனின் போது பல்வேறு நிலைகளில் ராக்கெட் ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் ப்ரோபலன்ட் நிரப்புதல் பணிகளெல்லாம் நடைப்பெற்றன.

பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் :

பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் :

இது இந்தியாவின் தனிப்பட்ட அமைப்பு (civil domain) கொண்ட, வெறும் ஏழே செயற்கைகோள்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பாகும் ( regional navigation satellite system)

வெற்றி :

வெற்றி :

செலுத்தப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் -1ஜி செயற்கைக்கோள் ஆனது வெற்றிகரமாக துணை ஜியோ சின்க்ரோனஸ் ட்ரான்ஸ்பர் சுற்றுப்பாதைக்குள் ( sub-Geosynchronous Transfer Orbit) நுழைந்து விட்டது.

உலக பதிப்புகள் :

உலக பதிப்புகள் :

இதேபோன்ற மற்ற நாடுகளின் மூன்று உலக பதிப்புகள் அவற்றின் இராணுவங்களின் மூலம் உலகளாவிய வணிக பாதுகாப்பு வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிக துல்லியம் :

அதிக துல்லியம் :

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் ( இந்திய பிராந்திய ஊடுருவல் சாட்டிலைட் அமைப்பு) ஆனது அதிக துல்லியம் மற்றும் அதிக அளவிலான இந்திய கட்டுப்பாட்டில் ஜிபிஎஸ் வசதியை பயனர்களுக்கு வழங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

நீட்டிக்கப்படும் :

நீட்டிக்கப்படும் :

அதாவது இந்திய வட்டாரத்தில் 20 மீட்டர் அதிக அளவிலான துல்லியத்தை வழங்கும் என்றும், அது இந்திய பிராந்தியம் முழுவதும் சுமார் 1500 சதுர கிலோமீட்டர் அளவு நீட்டிக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

அமெரிக்க-ரஷ்ய-சீனா :

அமெரிக்க-ரஷ்ய-சீனா :

நன்கு அறியப்பட்ட ஜிபிஎஸ் ஆனது அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமானதாகும், அதே போல் ரஷ்யாவிற்கு ஜிஎல்ஒஎன்அஎஸ்எஸ் , சீனாவின் தனது பெய்டோ மூலம் க்ளோபல் சிஸ்டம் தனை விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறது.

28 முதல் 35 செயற்கைக்கோள்கள்:

28 முதல் 35 செயற்கைக்கோள்கள்:

ஐரோப்பாவின் க்ளோபல் சிஸ்டம் ஆன கலிலியோவில், ஒவ்வொரு நாடுகளின் 28 முதல் 35 செயற்கைக்கோள்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வான் - கடல் :

வான் - கடல் :

இந்தியாவின் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் ஆனது, வான் - கடல் - ஏனைய நாடுகளுக்கு இடையே ஆன கப்பல் போக்குவரத்து ஆகியவைகளை ஒரு நிலையான 24/7 சேவையாக அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வண்ணம் செயல்படுத்தும்.

இந்திய ராணுவம் மற்றும் ஏவுகணை :

இந்திய ராணுவம் மற்றும் ஏவுகணை :

மேலும் இது மறைகுறியாக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இந்திய ராணுவம் மற்றும் ஏவுகணை தொடர்பான திட்டங்களுக்கும் உதவ இருக்கிறது.

நிலை :

நிலை :

அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில், அனைத்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைக்கோள்களும் நிலைபெற்றுவிடும் என்றும், சமிக்ஞைகள் மற்றும் செயல்திறன் சரிபார்க்கப்பட்ட பின்பு பயன்படுத்தபடும் என்றும் இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 தயார் :

தயார் :

மேலும் செயற்கைகோளின் இரண்டு உதிரி பாகங்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணில் செலுத்தும் தயார் நிலையில் இருக்கிறது.

தரைக்கட்டுப்பாட்டு :

தரைக்கட்டுப்பாட்டு :

நாடு முழுவதும் உள்ள கண்காணிப்பு நிலையங்களின் முழு-நீள தரைக்கட்டுப்பாட்டு மையம் (ground control centre) ஆனது பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ளது.

2013 :

2013 :

இந்த அமைப்பை உருவாக்கும் பணியானது, கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை, முதல் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்து ஆரம்பமானது.

1இ மற்றும் 1எப் :

1இ மற்றும் 1எப் :

12 ஆண்டுகளுக்கு சேவை வழங்கும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ மற்றும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எப் ஆனது 2016 ஜனவரி மற்றும் மார்ச் மாதம் முறையே விண்ணில் செலுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இந்தியாவை பார்த்து 'மீண்டும் ஒருமுறை' வாயைப்பிளக்க போகின்றன உலக நாடுகள்..!


கல்பனா சாவ்லா : பிரபஞ்சத்தில் இருந்து வந்தவள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
India's very own GPS is ready with seventh navigation satellite launch. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X