எஸ்-400 ஏவுகணையை இந்தியா வாங்க இதுதான் காரணம்: 380 கி.மீ அப்பால் இலக்கை அழிக்கும் நரகாசூரன்.!

|

நட்புற நாடான ரஷ்யாவுடன் இந்தியா எஸ்-400 ஏவுகணை உள்ளிட்ட ஏராளமான ஒப்பந்தங்களில் கையெழுத்தாகியுள்ளது.

மேலும் ரஷ்யாவில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை கண்காணிக்கவும் நிலையத்தை அமைக்கவும் உடன் படிக்கை செய்துள்ளது.

எஸ்-400 ஏவுகணையை இந்தியா வாங்க இதுதான் காரணம்: அழிக்கும் நரகாசூரன்.!

ரஷ்யாவுடன் அணுஆயுதங்கள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று ஐநா.வின் எச்சரிக்கையை மீறியும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் இது உலக நாடுகளையும் இந்த ஒப்பந்தம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்தியாவில் எஸ்-400 ஏவுகணை என்றால் என்ன வென்றும். இது இந்தியாவில் எவ்வாறு இயங்கும் என்றும் விரிவாக காணலாம்.

இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு :

இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு :

நீண்ட நாட்களாக நட்பு நாடுகளாக உள்ள இந்தியா-ரஷ்யா இதை போற்றும் வகையில் ஆண்டு தோறும் உச்சி மாநாடு நடத்தப்படுகின்றது. தற்போது டெல்லியில் நேற்று 19 வது உச்சி மாநாடு நடந்தது. இதில் 2 நாள் பயணமாக இந்தியா வந்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார்.

அமெரிக்கா எச்சரிக்கை:

அமெரிக்கா எச்சரிக்கை:

அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் படி ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் அணு ஆயுதங்களை வாங்க கூடாது இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது. மேலும், எஸ்-400 ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை வாங்கினால் இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா வெள்ளை மாளிகையும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

திட்டமிட்டபடி கையெழுத்து:

திட்டமிட்டபடி கையெழுத்து:

இந்தியா திட்டமிட்டபடி ரஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணை, அணு ஆயுதங்கள், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு தொடர்பான ஒப்பந்தங்களை நேற்று உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் ஒப்பந்தங்களை பரஸ்பரம் செய்து கை மாற்றிக் கொண்டன.

எஸ்-400 ஏவுகணை என்றால் என்ன?

எஸ்-400 ஏவுகணை என்றால் என்ன?


ரஷ்யாவிடம் இந்தியா ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் ( 5.43 பில்லியன் டாலர்) 5 ஏவுகணைகளை வாங்க முன் வந்துள்ளது. எஸ் 400 டிரையம்ப் வகையை சேர்ந்த ஏவுகணைகள் நடமாடும் ஊர்த்தியிருந்து புறப்பட்டு வானில் பறக்கும் விமானத்தையோ தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

போர் காலங்களில் நாட்டில் உள்ள முதன்மையாக நகரங்களையும் அணு ஆயுதங் அமைப்புகளையும் எதிரிகளின் போர் விமானங்களும் ஏவுகணைகளும் தாக்காமல் காக்க முடியும்.

எஸ்-400 ஏவுகணை செயல்படும் விதம்:

இந்தியாவின் வான் எல்லைக்குள் அத்துமீறி வரும் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் இந்த ஏவுகணைகள் நுழையாமல் தடுக்கும். அப்படியே நுழைந்தாலும், 380 கிலோ மீட்டருக்கு முன்பே இது எச்சரிக்கை செய்து அத்துமீறி வரும் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை தாக்கி அழித்து விடும்.

எஸ்-300 ஏவுகணையின் மேம்படுத்திய சாதனமே எஸ்-400 ஆகும். இதை ரஷ்யாவை சேர்ந்த அல்மாஸ்-ஆன்டே நிறுவனம் 2007ம் ஆண்டு தயாரித்துள்ளது.

இந்தியா வாங்கும் காரணம்:

இந்தியா வாங்கும் காரணம்:

இந்தியாவை ஒட்டி இருக்கும் பாகிஸ்தானிடம் 20 அதிநவீன போர் விமானங்களும், எப்-16எஸ், ஜே ஜே 17 போர் விமானங்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், சீனாவிடம் 1,700 போர் விமானங்களும் இருக்கின்றன. 4ம் தலைமுறைக்கான 800 போர் விமானங்களும் இருக்கின்றன.

அத்துமீறும் சீனா- பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதங்களையும் முறியடிக்கவே இந்தியா எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து பெறுவதாக இந்திய விமானப்படை தலைவர் பிஎஸ் தானோ தெரிவித்து இருக்கின்றார்.

பொருளாதார தடைக்கு இதுதான் காரணம்:

பொருளாதார தடைக்கு இதுதான் காரணம்:

அமெரிக்காவில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட சட்டதிருத்தத்தின்படி ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து போர் ஆயுதங்கள் வாங்கும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. பொருளாதார தடை உத்தரவை நீக்கும் அதிகாரம் டிரம்புக்கு மட்டும் இருக்கின்றது.

இந்தியா பாதுகாப்புக்காகதான் வாங்குகின்றது என்றும் அமெரிக்காவிடம் விளக்கம் கூறியுள்ளது. அமெரிக்காவுடன் இணைக்கமாகவும் செல்வதும் குறித்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

நடுங்கும் பாகிஸ்தான், சீனா:

நடுங்கும் பாகிஸ்தான், சீனா:

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் எச்சரிக்கையும் மீறி இந்தியா எஸ்-400 ஏவுகணைகளை வாங்கியுள்ளது பாகிஸ்தான் மற்றும் சீனாவை கதிகலங்க வைத்துள்ளது. தற்போது ரஷ்யா சீனாவின் பிரிந்து இருக்கும் பீஜிங்கிற்று அதிக எண்ணிக்கையில் எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஆரம்பித்துள்ளது.

Best Mobiles in India

English summary
India Russia S 400 missile deal All you need to know : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X