Google ஆரம்பித்த "ஸ்டார்ட் அப் ஸ்கூல் இந்தியா": இந்தியர்களுக்கு அடித்த லக், இளைஞர்களே தயாரா?

|

முதலீட்டாளர்கள், வெற்றிகரமான தொழில்முனைவோர் மற்றும் ப்ரோகிராமர்களை ஒன்றிணைப்பதே ஸ்டார்ட் அப் ஸ்கூல் ஐடியாவாகும். சிறிய நகரங்களின் ஸ்டார்ட்அப்கள் இதன்மூலம் பல சிறந்த விஷயங்களை அறிந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 10,000 ஸ்டார்ட்அப்கள் இதில் பலன் பெற வேண்டும் என்பதை கூகுள் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

10,000 ஸ்டார்ட்அப்கள் இலக்கு

10,000 ஸ்டார்ட்அப்கள் இலக்கு

முதலீட்டாளர்கள், வெற்றிகரமான தொழில்முனைவோர் மற்றும் ப்ரோகிராமர்களை ஒன்றிணைப்பதே ஸ்டார்ட் அப் ஸ்கூல் ஐடியாவாகும். சிறிய நகரங்களின் ஸ்டார்ட்அப்கள் இதன்மூலம் பல சிறந்த விஷயங்களை அறிந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 10,000 ஸ்டார்ட்அப்கள் இதில் பலன் பெற வேண்டும் என்பதை கூகுள் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

ஸ்டார்ட் அப் ஸ்கூல் இந்தியா திட்டம்

ஸ்டார்ட் அப் ஸ்கூல் இந்தியா திட்டம்

கூகுள் நிறுவனத்தின் ஸ்டார்ட் அப் ஸ்கூல் இந்தியா எனும் திட்டம் சிறு நகரங்களில் உள்ள 10,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவுவதை இலக்காக வைத்துள்ளது. Startup School India (SSI) ஆனது ஒன்பது வார திட்டமாகும். இந்த நிகழ்வில் கூகுள் தலைவர்கள், பல துறையை சேர்ந்த வல்லுனர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலில் உள்ள கூட்டுப் பணியாளர்களுக்கு இடையே உரையாடல்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் ஃபார் ஸ்டார்ட்அப் என்ற முயற்சி

கூகுள் ஃபார் ஸ்டார்ட்அப் என்ற முயற்சி

கூகுள் ஃபார் ஸ்டார்ட்அப் என்ற முயற்சியின் ஒரு பகுதியாக ஸ்டார்ட்அப் ஸ்கூல் இந்தியா (SSI) தொடங்குவதாக கூகுள் அறிவித்துள்ளது. முதலீட்டாளர்கள், வெற்றிகரமான தொழில் முனைவோர் மற்றும் ப்ரோகிராமர்களை கூகுளின் இந்த தளம் ஒருங்கிணைக்கிறது. சிறிய நகரங்களில் உள்ள ஸ்டார்ட் அப்கள் சிறந்தவைகளை இதன்மூலம் கற்றுக் கொள்ள முடியும்.

உலகளவில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா

உலகளவில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இதை தைரியமாக எதிர்கொள்ளவும் நிறுவனத்தை முன்னேற்றவும் இந்த திட்டம் உதவும் என கூறப்படுகிறது. சுமார் 70,000 ஸ்டார் அப்கள் உடன் இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய நாடாக இருக்கிறது.

SSI நிகழ்வில் நடத்தப்படும் உரையாடல்கள்

SSI நிகழ்வில் நடத்தப்படும் உரையாடல்கள்

fintech, D2C (Direct to Customer), B2B (Business to Business) மற்றும் B2C (Business to Customer), நெட்வொர்க்கிங், வேலை தேடல் மற்றும் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பலருக்கும் SSI பலனளிக்கும் என கூறப்படுகிறது. கூகுள் தலைவர்கள், பல துறையை சேர்ந்த வல்லுனர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலில் உள்ள கூட்டுப் பணியாளர்களுக்கு இடையே உரையாடல்கள் இந்த நிகழ்வில் நடைபெறும்.

இந்திய நிறுவனர்களின் வளர்ச்சி

இந்திய நிறுவனர்களின் வளர்ச்சி

இந்திய நிறுவனர்கள் தங்கள் நிறுவனங்களை ஐபிஓ மற்றும் யூனிகார்ன் அந்தஸ்துக்கு வெற்றிகரமாக எடுத்து செல்கிறார்கள். இந்த வெற்றிகள் நாடு முழுவதும் உள்ள இளம் தலைமுறையினர்களுக்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூகுளின் இயக்குனர் ஆதித்யா சுவாமி கூறிய கருத்துகள்

கூகுளின் இயக்குனர் ஆதித்யா சுவாமி கூறிய கருத்துகள்

ஸ்டார்ட்அப்கள் பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகியவற்றில் இருந்து மட்டும் இல்லை. ஜெய்ப்பூர், இந்தூர், கோரக்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வேகமாக வளர்ந்து வளர்ந்து வருகின்றனர். இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் எங்களிடம் இருக்கின்றனர் என ப்ளே பார்ட்னர்ஷிப்ஸ் கூகுளின் இயக்குனர் ஆதித்யா சுவாமி தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகளுக்குள் தோல்வியடையும் ஸ்டார்ட்அப்கள்

ஐந்து ஆண்டுகளுக்குள் தோல்வியடையும் ஸ்டார்ட்அப்கள்

ஏறக்குறைய 90 சதவீத ஸ்டார்ட்அப்கள் துவங்கப்பட்ட முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் தோல்வியை சந்திக்கின்றன என ஆதித்யா சுவாமி குறிப்பிட்டார். இதற்கான காரணங்களாக பண பற்றாக்குறை, குறைபாடுள்ள தேவை மதிப்பீடு, பயனற்ற திட்டங்கள் மற்றும் தலைமையின்மை என குறிப்பிட்டார்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கைக்கொடுக்கும் கூகுள்

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கைக்கொடுக்கும் கூகுள்

எனவே ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் தொலைதூர மூலைகளில் இருந்தும் ஸ்டார்ட்அப்கள் வருகின்றனர். இவர்களின் அறிவை கட்டமைத்து, நிறுவனங்களுக்கு உதவும் வகையில் புதிய பாடத்திட்டம் எஸ்எஸ்ஐ இல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.

பங்கேற்கும் முக்கிய புள்ளிகள்

பங்கேற்கும் முக்கிய புள்ளிகள்

ஸ்டார்ட்அப் ஸ்கூல் இந்தியாவில் பயனுள்ள நிறுவனரை உருவாக்குவது, பணியமர்த்தலை முறைப்படுத்துவது உள்ளிட்ட பலவற்றை குறித்து விவாதங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை நிறுவனர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் நடத்தப்படுகிறது. இந்த விவாதங்களில் பங்கேற்கும் கூகுளின் சில ஒத்துழைப்பாளர்களில் விவேக் குப்தா இணை நிறுவனர் லிசியஸ், ராஜன் ஆனந்தன், எம்.டி செக்வோயா இந்தியா, மேபெல் சாகோ உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Google Launches Startup School India For Smallcity Entrepreneurs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X