சியோமி ரசிகர்களே உஷார்.! ரூ.33.3 லட்சம் மதிப்பிலான போலி Mi பொருட்கள் பறிமுதல்..

|

இந்தியாவில் சியோமி தயாரிப்புகளுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சியோமி தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி சற்று மனவருத்தத்தை உண்டாக்கலாம். சியோமி தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் கரங்களில் இருப்பது ஒரிஜினல் சாதனம் தானா?அல்லது இதுவும் டூப்ளிகேட்டா? என்ற சந்தேகம் இந்த பதிவைப் படித்ததும் எழுந்துவிடும்.

சியோமி Mi ரசிகர்களே உஷார்

சியோமி Mi ரசிகர்களே உஷார்

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னையில் நான்கு சப்ளையர்கள் மற்றும் பெங்களூரில் மூன்று சப்ளையர்களிடமிருந்து ரூ .33.3 லட்சம் மதிப்புள்ள சியோமி நிறுவனத்தின் போலி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திடுக்கிடும் செய்தி சியோமி Mi ரசிகர்களைக் கவலை அடையச் செய்துள்ளது. இந்த செய்திக்குப் பின்னர் ஒரிஜினல் சாதனம் எது? போலி சாதனம் எது? என்று தெரியாமல் பயனர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இரண்டு நகரங்களிலும் சோதனை

இரண்டு நகரங்களிலும் சோதனை

சியோமி நிறுவனம் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, உள்ளூர் காவல்துறையினர் அதன் விரிவான செயல்திறன் மிக்க போலி பொருட்கள் எதிர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவனம் புகார் அளித்ததை அடுத்து இரு நகரங்களிலும் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து இரண்டு நகரங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாகப் பூமியில் ஏற்பட்ட 'அந்த' மிகப்பெரிய மாற்றம்.. நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..கொரோனா தொற்று காரணமாகப் பூமியில் ஏற்பட்ட 'அந்த' மிகப்பெரிய மாற்றம்.. நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..

சியோமி

சியோமி

போலீஸ் அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் அப்பகுதியில் உள்ள மூன்று முக்கிய கடைகளிலிருந்து போலி சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். மொபைல் கேஸ், ஹெட்ஃபோன்கள், பவர் பேங்க்கள், சார்ஜர்கள் மற்றும் இயர்போன்கள் போன்ற பொருட்கள் உட்பட சுமார் 3000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் போலியென போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சப்ளையர்கள் கைது

சப்ளையர்கள் கைது

உரியக் கடைகளில் சுமார் ரூ .24.9 லட்சம் மற்றும் 8.4 லட்சம் மதிப்புள்ள போலி சியோமி இந்தியா தயாரிப்புகளை விற்பனை செய்ததாக இரண்டு நகரங்களிலிருந்தும் கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சப்ளையர்கள் நீண்ட காலமாக இந்த வணிகத்தை நிர்வகித்து வருகிறார்கள் மற்றும் சந்தையில் பல அங்கீகரிக்கப்படாத போலி தயாரிப்புகளையும் விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Fake Xiaomi products worth Rs 33.3 lakh seized in Chennai and Bangalore : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X