செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதால் 35 சதவீகிதம் விபத்துகள் ஏற்படுகின்றன.!

|

கடந்த 2018-ம் வருடத்தில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதில் 64 ஆயிரத்து 105 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்பு வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசியதால் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை இழந்துள்ளனர்.

சாலை விதிகளை மதிக்பும் மனப்பான்மை, பெரும்பாலான பொதுமக்கள் மத்தியில் அறவே கிடையாது,அதைத் தட்டிக் கேட்கும் போக்குவரத்து காவல்துறையினரை பார்த்தால் மட்டும், சாலை விதிகளை கடைப்பிடிப்பது போல் காட்டிக்கொண்டு பிறகு கண்டபடி வாகனத்தை ஓட்டுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால், பல சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்த சாலை விபத்துகளில் அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகின்றன.

<strong>இஸ்ரோவின் 5 சேட்லைட்களோடு பானிபுயலை விரட்டிய இந்தியா: ஐநா பாராட்டு.! </strong>இஸ்ரோவின் 5 சேட்லைட்களோடு பானிபுயலை விரட்டிய இந்தியா: ஐநா பாராட்டு.!

அலுவலகம் சார்ந்த விஷயங்களைப் பேசுவது

அலுவலகம் சார்ந்த விஷயங்களைப் பேசுவது

குறிப்பாக வாகனம் ஓட்டுபோது அலுவலகம் சார்ந்த விஷயங்களைப் பேசுவது, பின்பு உறவினர்களுடன் பேசிக் கொண்ட வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்துகின்றனர், இதனால் பல உயிரிழப்பு ஏற்படுகிறது என்பதே உண்மை.

 35 சதவீத விபத்துகள்

35 சதவீத விபத்துகள்

செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் 35 சதவீத விபத்துகள் ஏற்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். சென்னை தென்மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அமிர்த வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது.

எம்.ஸ்ரீதரன்

எம்.ஸ்ரீதரன்

ந்த நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து அலுவலர் எம்.ஸ்ரீதரன் கூறியது என்னவென்றால் "மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே, சாலைவிதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும், சாலைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குறியீடுகள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட்இ காரில் பயணம் செய்யும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதன் மூலம் 35 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, எந்த வாகனங்களை ஓட்டிச் சென்றாலும் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்'' என்றார்.

2019 மே 7: நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!2019 மே 7: நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டி சிக்கியவர்களே

செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டி சிக்கியவர்களே

மேலும் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமீறலினால் 1 லட்சத்து 57 ஆயிரத்து 706 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயமாக முதலிடத்தில் இருப்பது செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டி சிக்கியவர்களே. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி சிக்கியவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 105 ஆகும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தை மீண்டும் புரட்டி போட்ட 4500 ஆண்டு மர்மம்: விடாத மம்மிகள்.!எகிப்தை மீண்டும் புரட்டி போட்ட 4500 ஆண்டு மர்மம்: விடாத மம்மிகள்.!

மதுபோதையில் வாகனத்தை இயக்கி சிக்கியவர்கள்

மதுபோதையில் வாகனத்தை இயக்கி சிக்கியவர்கள்

அடுத்த இடத்தில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்ததாக 29 ஆயிரத்து 964 பேர் உள்ளனர்.
மதுபோதையில் வாகனத்தை இயக்கி சிக்கியவர்கள் 19 ஆயிரத்து 422 பேர்.சிக்னலை மதிக்காமல் சென்று சிக்கியவர்கள் 18 ஆயிரத்து 287 பேர். அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கி சிக்கியவர்கள் 17 ஆயிரத்து 701 பேர். ஓவர் லோடு ஏற்றி சிக்கியவர்கள் 7 ஆயிரத்து 223 பேரும் அடங்குவர்.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

எனவே விபத்துக்கள் மற்றும் உயரிழப்புகளை தடுக்க செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவது உள்பட கடும் விதிமீறல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தலைசிறந்த ஆப்ஸ்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தலைசிறந்த ஆப்ஸ்!

ஸ்மார்ட்போன் ஆப்ஸ் நம் வாழ்க்கையை முழுமையாக மாற்றியமைத்து விட்டது. இன்று எல்லாவற்றிகும் ஆப்ஸ் வந்து விட்டதோடு மக்களும் இவற்றைப் பயன்படுத்தாமல் இல்லை. அன்றாட வாழ்க்கை முறைகளை விரல் நுனியில் வழங்கும் மிகப்பெரிய வசதி இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஸ்மார்ட்போன் பயனர்களை போன்று இந்தியாவில் ஆப்ஸ் சந்தையும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டாப் 10 தலைசிறந்த ஆப்ஸ்களை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

பயணம்

இந்தியா முழுக்கு எங்குச் செல்ல வேண்டுமானாலும் உங்களுக்கு விரல் நுனியில் பல்வேறு தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க நிறைய ஆப்ஸ்கள் இருக்கின்றன. அவற்றில் பிரபலமான சில ஆப்ஸ் தான் மேக் மை ட்ரிப் (Make My Trip), ஐஆர்சிடிசி (IRCTC) மற்றும் கோஐபிஐபிஓ (Goibibo). இவற்றைப் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்.

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

காணா (Gaana) இணையத்தில் இசையை அனுபவிக்கச் சிறப்பான செயலியாக இது இருக்கின்றது. புக் மை ஷோ (BookMyShow) ஆப் மூலம் பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கான சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் மற்றும் விண்க் (Wynk) ஆப் மூலம் அனைத்து இணையத்தில் பாடல்களை கேட்க முடியும்.

கட்டணம்

கட்டணம்

இணைய பண பரிமாற்ற சேவைகளில் பேடிஎம் (Paytm) பிரபலமான செயலியாக இருக்கின்றது. இதே போல் ஃப்ரீசார்ஜ் (Freecharge) மற்றும் மொபிவிக் (Mobiwik) ஆப்களும் இணைய பண பரிமாற்ற சேவைகளை வழங்குகின்றன.

கேமிங்

கேமிங்

சுமார் 50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருக்கும் கேம் தான் டீன் பட்டி (Teen Patti). இந்த ஆப் தயாரித்தவர்கள் வெளியிட்ட இந்தியன் ரம்மி போன்ற கேம் கூட அதிகளவு டவுன்லோடுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷாப்பிங்

ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஏற்றச் செயலிகளாக பிளிப்கார்ட் (Flipkart), ஸ்னாப்டீல் (Snapdeal) மற்றும் இன்ஃபிபீம் (Infibeam) போன்ற செயலிகள் இருக்கின்றன. இவை அதிகளவு சலுகைகளை வழங்குவதோடு பல்வேறு பொருட்களையும் வழங்குகின்றன.

குறுந்தகவல்

குறுந்தகவல்

இந்தியாவில் பிரபலமான குறுந்தகவல் செயலியாக ஹைக் இருக்கின்றது. ஆஃப்லைன் மெசேஜிங் மற்றும் இலவச அழைப்பு உள்ளிட்ட சேவைகளை இந்தச் செயலி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

சேவை

சேவை

உங்களது அனைத்து இதர சேவைகளையும் வழங்கும் ஆப் தான் ஜஸ்ட் டையல் (Just Dial), குவிக்கர் (Quikr) மற்றும் ஓஎல்எக்ஸ் (OLX). இந்த ஆப்ஸ்கள் நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமானதாகும்.

Best Mobiles in India

English summary
Exposure to accidents due to mobile phone use among drivers across Chennai in India in 2019: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X